கும்பிடு போட்டு டீசல் கார்கள வெளியேத்திட்டாங்க.. இனி இந்த 3கார் மாடலிலும் இந்த டீசல் ஆப்ஷன் மட்டும் கிடைக்காது

இந்தியாவில் டீசல் கார்களுக்கு இப்போதும் அதிக முக்கியத்துவம் வழங்கிக் கொண்டிருக்கக் கூடிய கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக கியா (Kia) இருக்கின்றது. இந்த நிறுவனம் தன்னுடைய பெரும்பாலான கார் மாடல்களில் பெட்ரோல் ஆப்ஷனுடன் சேர்த்து டீசல் ஆப்ஷனை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், சொனெட் (Sonet), செல்டோஸ் (Seltos) மற்றும் கேரன்ஸ் (Carens) ஆகிய கார் மாடல்களிலும் டீசல் ஆப்ஷனை அது வழங்குகின்றது. இந்த நிலையிலேயே இந்த மூன்று கார் மாடல்களில் இருந்தும் டீசல் ஆப்ஷனை கியா நிறுவனம் வெளியேற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக, ஐஎம்டி (iMT) கியர்பாக்ஸ் உடன் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருந்த டீசல் ஆப்ஷனே விற்பனையில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கின்றது. இன்டலிஜென்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (Intelligent Manual Transmission) என்பதன் சுருக்கமே ஐஎம்டி ஆகும். கிளட்ச்-இன் உதவியின்றியே மேனுவலாக கியரை மாற்றிக் கொள்ளக் கூடிய ஓர் அம்சத்தைக் கொண்டிருப்பதே இந்த கியர்பாக்ஸ்-இன் சிறப்பம்சமாகும்.

Kia discontinued imt for diesel variants

இத்தகைய கியர்பாக்ஸ் உடன் கிடைத்துக் கொண்டிருந்த டீசல் ஆப்ஷனையே சொனெட், செல்டோஸ் மற்றும் கேரன்ஸ் ஆகிய கார் மடால்களில் இருந்து கியா அகற்றி இருக்கின்றது. மூன்றிற்கும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே ஐஎம்டி டீசல் ஆப்ஷன் வெளியேற்றம் அரங்கேற்றப்பட்டு இருக்கின்றது.

விற்பனை வரவேற்புக் குறைவாகக் காணப்பட்ட காரணத்தினாலேயே இந்த அதிரடி நடவடிக்கையை கியா நிறுவனம் மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ வார்த்தைகளும் இதுவரை வெளியாகவில்லை. நிறுவனத்தின் இந்த நடவடிக்கை ஐஎம்டி கியர்பாக்ஸ் காதலர்களையும், டீசல் கார் பிரியர்களையும் ஷாக்கில் உறைய வைக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

ஐஎம்டி டீசல் ஆப்ஷன் வெளியேற்றத்துடன் சேர்த்து சில புதிய வேரியண்டுகளை கியா நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. அந்தவகையில், சொனெட் கார் மாடலில் எச்டிகே பிளஸ் (ஓ) (HTK+ (O)) எனும் புதிய தேர்வையேச் சேர்த்திருக்கின்றனர். இது பெட்ரோல் மற்றும் டர்போ பெட்ரோல் என இரண்டு ஆப்ஷன்களிலும் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

இந்த கார் மாடலில் கிடைத்துக் கொண்டிருந்த கிராவிட்டி எடிசன் (Gravity Edition)-னையும் கியா நிறுவனம் தற்போது விற்பனையில் இருந்து அகற்றியிருக்கின்றது. இதேபோல், செல்டோஸ் கார் மாடலிலும் புதிதாக சில தேர்வுகள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. எச்டிகே (ஓ) (HTK(O)), எச்டிகே பிளஸ் (ஓ) (HTK+(O)) மற்றும் எச்டிஎக்ஸ் (ஓ) (HTX (O)) ஆகியவையே அவை ஆகும்.

இந்த கார் மாடலிலும் கிராவிட்டி எடிசன் எனும் வேரியண்ட் விற்பனையில் இருந்து அகற்றப்பட்டு இருக்கின்றது. கியா கேரன்ஸ் எம்பிவி கார் மாடலில் இருந்தும் கிராவிட்டி எடிசன் தற்போது விற்பனையில் இருந்து அகற்றப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், இந்த மூன்று கார் மாடல்களிலும் கிராவிட்டி எடிசனும் இனி விற்பனைக்குக் கிடைக்காது என்கிற சூழலே உருவாகி இருக்கின்றது.

மேலே பார்த்த கியா நிறுவனத்தின் மூன்று கார் மாடல்களுக்கும் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிரு்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இந்த மூன்று கார் மாடல்களையும் சீர்படுத்தும் விதமாக தற்போது அதில் விற்பனையாகாத தேர்வுகளை கியா நிறுவனம் விற்பனையில் இருந்து அகற்றி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கியா நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே அது புதிதாக சிரோஸ் எனும் கார் மாடலை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது. இதன் விலைகள் வருகின்ற பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 22, 2025, 18:42 [IST]
English summary
Kia discontinued imt for diesel variants of the sonet seltos and carens in india
மேலும்... #kia motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+