கம்மி விலையில் இப்படி ஒரு இவி கார் வரப்போகுதா? டாடா தலைக்கு தான் குறி வச்சிருக்காங்க!
கியா நிறுவனம் இவி2 என்ற சிறிய ரக எலெக்ட்ரிக் காரை உருவாக்கி வருகிறது.இந்நிறுவனம் ஏற்கனவே இந்தாண்டு நடந்த கியா இவி தினம் என்ற நிகழ்வில் இந்த காரை காட்சிப்படுத்தியிருந்தது. இந்த காரை பல்வேறு இடங்களில் அந்நிறுவனம் சோதனை செய்து வந்தது.இந்நிலையில்இந்த காரை வரும் 2026 ஜனவரி மாதம் சர்வதேச அளவில் வெளியிட திட்டமிட்டுள்ளது.2026ம் ஆண்டு இந்த கார் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கியா நிறுவனம் தனது இவி 2 காரின் டீசரை வெிளயிட்டுள்ளுது. Brussels பகுதியில் மோட்டார் வாகன கண்காட்சி வரும் ஜனவரி 9ம் தேதி துவங்குகிறது. இந்த கண்காட்சியில் அந்நிறுவனம் தனது இவி2 காரின் தயாரிப்பு வெர்ஷனை வெளியிட திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்த காரை கருப்பு நிற துணி போட்டு மூடிய நிலையில் டீசரை வெளியிட்டுள்ளது.இந்த டீசர் தற்போது வவைரலாக பரவி வருகிறது.

இந்த டீசரில் பார்க்கும் போது கான்செப்ட் காரில் உள்ள வடிவமைப்பு பெரிய அளவில் மாற்றம் இல்லை. இந்த காரின் முன்பக்கம் ஸ்லோப்பான ரூஃப் லைன், ரூஃப் பகுதியில் ஸ்பார்ய்லர்கள், பின்பக்கம் சாய்வான விண்ட் ஸ்கிரீன், கான்செப்ட் காரில் உள்ளதை போல முன்பக்க லைட்டிங் அம்சங்கள் உள்ளிட்ட விபரங்கள் தெளிவாக தெரிகிறது./
ஆனால் இந்த டீசரில் லைட்டிங் செட்டப் குறித்த விரிவான விபரங்கள் இல்லை. தயாரிப்பு மாடல் கார் வரும் போது முன்பக்கம் உள்ள லைட்டிங்கில் கான்செப்டிலிருந்து சிறிய மாற்றங்கள் வர வாய்ப்புள்ளது. ஆனால் அடிப்படி டிசைன் அப்படியே தான் இருக்கப்போகிறது.
கான்செப்ட்டிலிருந்து சில மாற்றங்கள் தெளிவாக தெரிகிறிது. முன்பக்கம் நீளம் சற்று குறைக்கப்பட்டுள்ளது. தயாரிப்பில் உள்ள பிராக்டிக்கல் விஷயங்களுக்காக இதை செய்திருக்கலாம். கான்செப்ட் வெர்ஷனில் பி பில்லர் இல்லாமல் இருந்தது ஆனால் தயாரிப்பு வெர்ஷனில் பி பில்லரை வைத்துள்ளனர்.
உள்பக்கம் சீட் கஸ்டமைஸ் செய்யும் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கமும் பின்பக்கமும் ஸ்லைடிங் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. இது பயணிகள் கம்ஃபோர்ட், கார்கோ வெரைட்டி உள்ளிட்ட அம்சங்களில் வெளியாக வாய்ப்புள்ளது. இதன் பவர்டெரைன் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை. இந்த காரை 400 வோல்ட் ஆர்க்கிடெக்சரில் வடிவமைத்துள்ளனர். இந்த கார் கியா நிறுவனத்தின் குறைந்த விலை காராக விற்பவனைக்கு வர வாய்ப்புள்ளது.
கியா நிறுவனம் தனது பிரிமியம் மாடல்களை இவி6 மற்றும் இவி9 கார்களை 800 வோல்ட் இ-ஜிஎம்பி ஆர்க்கிடெக்சரில் உருவாக்கப்பட்டுள்ளுது. இதில் சிங்கிள் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டள்ளுது. இது முன்பக்க ஆக்ஸிலில் பொருத்தப்பட்டுள்ளுது.
இந்த கியா இவி 2 காரில்2 பேட்ரடி பேக் பொருத்தப்பட வாய்ப்புள்ளது ஹூண்டாய் இன்ஸ்டர் கார் போல 39 மற்றும் 46 kWh பேட்டரி பேக் உடன் 450-500 கி.மீ ரேஞ்ச் தரும் வகையில் பேட்டரி பேக் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் இந்தியாவில் அறிமுகமாகுமா என்பது தெரியவில்லை. ஆனால் என்ட்ரிலெவல் இவி கார்களுக்கு அதிக டிமாண்ட் இந்தியாவில் உள்ளது. நெக்ஸான் இவி, பஞ்ச் இவி கார்கள் சிறப்பாக விற்பனையாவதால் கியா இதை பரிசீலனை செய்யலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியா நிறுவனம் குறைந்த விலை இவி காரை கொண்டு வருவது நிச்சயம் வரவேற்க்க தக்கது தான். இந்த கார்கள் நிச்சயம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும். இந்தியாவிற்கு இந்த கார்கள் வந்தாலும் வெற்றி பெற அதிகமான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








