ஒரு காரை ஒருத்தரு தான் வாங்கிருக்காரு! இன்னொரு காரை யாருமே வாங்கல! கியாக்கு இப்படி ஒரு நிலைமையா?
கியா நிறுவனத்தின் இவி6 மற்றும் இவி9 ஆகிய கார்கள் கடந்த செப்டம்பர் மாதம் மிக மோசமான விற்பவனையை சந்தித்துள்ளது. இந்நிறுவனத்தின் மற்ற கார்கள் எல்லாம் சிறப்பாக விற்பனையாகி வரும் நிலையில் இந்த இரண்டு கார்கள் ஏன் குறைவாக விற்பனையாகியுள்ளது? இதற்கான காரணம் என்ன? எவ்வளவு விற்பனை நடந்துள்ளது என்ற விபரங்களை காணலாம் வாருங்கள்.
கியா நிறவனம் கடந்த அக்டோபர் மாதம் விற்பவனை விபரங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்நிறுவனம் இவி6 மற்றும் இவி9 கார்களில் மிக மோசமன விற்பனையை பெற்றுள்ளது. கியா இவி 6 காரை கடந்த அக்டோபர் மாதம் ஒருவர் கூட வாங்கவில்லை. இவி9 காரை ஒருவர் மட்டுமே வாங்கியுள்ளார். இந்த இரண்டு கார்களின் விற்பனையை சேர்த்து ஒரே ஒரு கார் மட்டுமே விற்பனையாகியுள்ளது. இந்த இரண்டு கார்களும் தற்போது விற்பனையில்தான் உள்ளது.

கியா இவி 9 காரை பொருத்தவரை சிங்கிள் சார்ஜில் 561 கி.மீ பயணிக்கும் திறன் கொண்டது. இவி 6 காரை பொருத்தவரை 663 கி.மீ வரைபயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கியா நிறுவனம் சமீபத்தில் தான் தனது இவி6 காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷவனை அறிமுகப்படுத்தியது. இந்த கார் சிங்கிள் வேரயன்டில் மட்டுமே கிடைக்கிறது. தற்போது அப்டேட்டில் சில மார்டனான அம்சங்கள், புதி ஸ்டைலிங், ஸ்லீக்கான ஹெட்லைட், ரிபுரோஃபைல்டு ஹெட்லைட்டுகள், புதிய அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த காரின் உட்புறம் புதிய ஸ்டியரிங் வீல் மற்றும் ட்வின் ஸ்கிரீன் பானரோமிக் செட்டப் ஆகிய விஷயங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் ஃபிங்கர் பிரிண்ட் அடிப்படையில் காரை ஸ்டார்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதுபோக லெவல் 2 அடாஸ் சிஸ்டம், பவர்டு மற்றும் வென்டிலேட்டட் முன்பக்க சீட்டுகள், பானரோமிக் சன்ரூஃப் 14 ஸ்பீக்கர் கொண்ட மெரீடியன் சவுண்ட் சிஸ்டம், ஆகிய அம்சங்கள் உள்ளது.

மேலும் இந்த காரில் 84kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த கார் 663 கி.மீ பயணிக்கும் என தெரிவிக்கப்ப்டடுள்ளது. இதற்காக இந்த காரில் 2 எலெக்ட்ரிக் மோட்டார்கள் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த கார் 325 பிஎஸ் பவரையும் 605 என்எம் டார்க் திறனையும் உருவாக்குகிறது. இதனால் இந்த கார் பவர்ஃபுல் காராக இருக்கிறது.
கியா இவி9 காரை பொருத்தவரை 99.8kWh பேட்டரி பேக் வழங்கப்ப்டடுள்ளது. இந்த காரிலும் டுயல் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இது ஆல் வீல் டிரைவ் அம்சத்துடன் இருக்கிறது. இந்த மோட்டார் சேர்த்து 384 எச்பி பவரையும் 700 என்எம் டார்க் திறனையும் உருவாக்குகிறது. இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 5.3 நொடியில் பிக்கப் செய்து விடும். இந்த கார் முழு சார்ஜில் 561 கி.மீ ரேஞ்சை தருகிறது. இந்த காரின் பேட்டரியை சார்ஜ் செய்ய 10-80 சதவீத சார்ஜை 350 kW டிசி சார்ஜை பயன்படுத்தி 24 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும்.

இந்த கியா இவி 9 காரில் 6 சீட் லே அவுட் இருக்கிறது. இந்த காரில் இரண்டாவது வரிசை சீட் கேப்டன் சீட்களாக உள்ளது. இதில் எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட்மென்ட்கள் உள்ளுது. இது போக மசாஜ் அம்சமும் இருக்கிறது. மேலும்இந்த காரில் 12.3 இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம் இருக்கிறது. இது போக 3 ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், டுயல் எலெக்ட்ரிக் சன்ரூஃப்கள், ஹெட் அப் டிஸ்பிளே, டிஜிட்டல் இன்சைட் ரியர் வியூ மிரர், வெகிஹில் டூ லோடு ஃபங்சனாலிட்டி 14 ஸ்பீக்கர் மெரீடியன் ஆடியோ சிஸ்டம், டிஜிட்டல் கீ, ஓடிஏ அப்டேட்கள், கனெக்டெட் கார் டெக்னாலஜி உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது.
இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களும் சிறப்பாக உள்ளது. இந்த காரில் 10 ஏர்பேக்குகள், இஎஸ்சி, டவுண்ஹில் பிரேக் கண்ட்ரோல், வெகிஹில் ஸ்டபிளிட்டி மேனேஜ்மென்ட், முன்பக்கமும் பின்பக்கமும் பார்க்கிங் சென்சார்கள், ஆல் வீல் டிஸ்க் பிரேக்குகள், 360 டிகிரி கேமரா, லெவல் 2 அடாஸ் முன்பக்க மோதல் வார்னிங், லேன் டிப்பார்ச்சர் வார்னிங், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஹைபீம் அசிஸ்ட், லேன் கீப் அசிஸ்ட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியா நிறவனம் இந்த காரை முழுமையாக இறக்குமதி செய்து விற்பனைக்கு கொண்டு வருகிறது. இதனால் அந்த காரின் விலை அதிகமாக உள்ளது. இதனால் விற்பனை மிக குறைவாக இருக்கிறது. இந்த விலை செக்மெண்டில் இந்த காரை விரும்பும் வாடிக்கையாளர்கள் குறைவாக இருக்கின்றனர். இதை எல்லாம் எதிர்பார்த்து தான் இந்தகார் களம் இறங்கியுள்ளதால் இதனால் அந்நிறுவனத்திற்கு பெரிய ஏமாற்றம் எல்லாம் இல்லை.


Click it and Unblock the Notifications









