எவ்ளோ பெரிய நிறுவனம் அது.. இப்படி அவமானத்தை தேடி கொடுத்திருச்சே! 31 நாள்ல ஒருத்தரும் இந்த காரை வாங்க முன் வரல!

தென் கொரியாவைச் சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் கியா (Kia)-வும் ஒன்றாகும். இந்தியாவில் வளர்ந்து வரும் நிறுவனமாக இது உள்ளது. மாருதி சுஸுகி, ஹூண்டாய், டாடா மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக பெயர் சொல்லும் நிறுவனமாக இந்தியாவில் இந்த நிறுவனம் வளர்ந்துக் காணப்படுகின்றது. இத்தகைய நிறுவனத்திற்கே அது தயாரிக்கும் கார் மாடல் ஒன்று அவமானத்தை சேர்க்கும் விதமாக செயல்பட்டு இருக்கின்றது. விற்பனையிலேயே அது அவமானத்தைச் சேர்த்திருக்கின்றது.

இவி6 (EV6) எனும் கார் மாடலே அதுவாகும். இது ஓர் கிராஸோவர் ரக மின்சார கார் மாடல் ஆகும். மிக அதிக ஆடம்பர அம்சங்கள் நிறைந்த எலெக்ட்ரிக் காரா மாடலாக இது இந்தியாவில் விற்கப்படுகின்றது. இந்த காரை விற்பனைக்குக் கொண்டு வந்த புதிதில் மிக அமோகமான வரவேற்பு நாட்டில் நிலவியது.

Kia ev6 sees zero sales in january

சொல்லப்போனால் நடிகர்கள் சிலர் இந்த காரை நிறுவனம் வெளியீடு செய்த புதிதிலேயே வாங்கினர். 'மெட்ராஸ்' பட நடிகை கேத்ரின் தெரேஸ்-கூட கியா இவி6 கார் மாடலை வாங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவரே இந்தியாவில் இந்த காரை வாங்கிய முதல் ஆள் என நம்பப்படுகின்றது.

கியா குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே இந்த காரை விற்பனைக்குக் களமிறக்கியது. அவ்வப்போது லாட் லாட்டாக இதை இறக்குமதி செய்து விற்பனைக்கு வழங்கி வந்தது கியா. அந்தவகையில், ஆரம்பக் கட்டத்தில் இந்தியாவிற்கு என ஒதுக்கப்பட்ட யூனிட்டுகள் அனைத்தும் ஒதுக்கப்பட்ட சில நாட்களிலேயே விற்று தீர்ந்தன.

Kia ev6 full view

இந்த வரவேற்பை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக மேலும் சில யூனிட்டுகளை இறக்குமதி செய்து விற்றனர். ஆனால், இப்போது இந்த நிலைமை அப்படியே தலைகீழாக மாறி இருக்கின்றது. விற்பனையில் மிக சிறப்பாக செயல்பட்ட கியா இவி6 சென்ற ஜனவரி மாதத்தின் 31 நாட்களில் ஒரு யூனிட்டுகூட விற்பனையாகவில்லை என்பது தெரிய வந்திருக்கின்றது.

இது நிறுவனத்திற்கு மட்டுமல்ல எலெக்ட்ரிக் கார் விரும்பிகளுக்கும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. 2025 ஜனவரியில்-தான் இந்த நிலைமை என்றால் இந்த காருக்கு சென்ற 2024 ஆம் ஆண்டின் ஜனவரியிலும் இதே நிலைமை ஏற்பட்டிருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஆமாங்க, போன வருஷம் ஜனவரியிலும் இந்த காரை ஒருத்தரும் வாங்க முன் வரவில்லை.

இதற்கு இந்த காரின் மிக அதிக விலை மற்றும் போட்டி நிறுவனங்களின் புதுமு கார் மாடல்களின் அறிமுகமும் ஓர் முக்கிய காரணம் என கூறலாம். குறிப்பாக, பிஒய்டி (BYD) எனும் சீன நிறுவனம் நாட்டில் களமிறங்கிய பின்னர் பெரிய பெரிய ஜாம்பவான் ஆடம்பர கார் உற்பத்தி நிறுவனங்களே சற்றே அடி வாங்கத் தொடங்கி இருக்கின்றன.

இந்த நிலையிலேயே கியா மோட்டார்ஸின் முக்கிய தயாரிப்பான இவி6-ம் இந்தியாவில் விற்பனையில் அடி வாங்கி இருக்கின்றது. இந்தியாவில் இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட் மட்டுமே ரூ. 60.97 லட்சம் என்கிற விலையில் விற்பனைச் செய்யப்படுகின்றது. இது ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

விலைக்கு ஏற்ப பிரீமியம் அம்சங்களை தாராளமாக இந்த கார் மாடல் கொண்டிருக்கும் என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது. இதன் ரேஞ்ச் திறன் உண்மையிலேயே நம்மை வியக்க வைக்கம் வகையில் இருக்கின்றது. ஓர் முழு சார்ஜில் இந்த கார் மாடல் 650 கிமீட்டருக்கும் அதிகமான தூரம் வரை பயணிக்கும்.

மேலும், இதை ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்கையில் வெறும் 18 நிமிடங்களிலேயே 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜாகிவிடும். இதுமட்டுமல்ல இதன் திறன் வெளிப்பாடும் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இணையானதாக இருக்கின்றது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட இந்த கார் மாடலுக்கு வெறும் 5.3 செகண்டுகளே போதுமானதாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பல்வேறு சிறப்புகளைத் தாங்கிய எலெக்ட்ரிக் கார் மாடலுக்கு வரவேற்பு பூஜ்ஜியமாக குறைந்திருப்பது ஒட்டுமொத்த மார்க்கெட்டிற்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக, டிமாண்ட குறைந்திருப்பதால் இந்த காரை விற்பனையில் கியா நிறுவனம் அகற்றப்படும் சூழலும் உருவாகி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, February 3, 2025, 20:48 [IST]
English summary
Kia ev6 electric crossover reports zero sales in january 2025
மேலும்... #kia motors #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+