சொத்து மொத்தத்தையும் எழுதி வெச்சாலும் இந்த காரை வாங்க முடியுமானு தெரியல! கியா உருவாக்கியதிலேயே விலைமிக்கது!

கியா (Kia) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒரேயொரு எலக்ட்ரிக் கார், இவி6 (EV6) ஆகும். பல இலட்ச ரூபாய் மதிப்பில் விலைமிக்க எலக்ட்ரிக் காராக இருப்பதால், கியா இவி6 காரின் விற்பனை பெரிய அளவில் இல்லை. இருப்பினும், இவி6 எலக்ட்ரிக் காரை மேம்படுத்தி கியா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதை கடந்த ஜனவரி மாதத்தில் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2025 (Auto Expo 2025) கண்காட்சியிலேயே பார்த்திருந்தோம். 2025 ஆட்டோ எக்ஸ்போவில் கியா இவி6 ஃபேஸ்லிஃப்ட் (Facelift) கார் காட்சிக்கு நிறுத்தப்பட்டு இருந்தது.

இதனால், கியாவில் இருந்து எப்போது வேண்டுமானாலும் புதிய இவி6 ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகம் செய்யப்படலாம் என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், 2025 கியா இவி6 ஃபேஸ்லிஃப்ட் கார் இன்று (மார்ச் 26) அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

2025 kia ev6 facelift launched

புதிய இவி6 ஃபேஸ்லிஃப்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.65.9 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல், ஜிடி-லைன் ஆல்-வீல்-டிரைவ் (GT-Line AWD) என்கிற ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே 2025 இவி6 ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட்டில் 84kWh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

இந்த பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 663கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என ARAI சான்றளிக்கப்பட்டு உள்ளது. புதிய அப்டேட்களாக 2025 கியா இவி6 காரில் கியா கனெக்ட் 2.0 என்கிற மென்பொருள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொலைத்தூரத்தில் இருந்து கூட காரில் ஏற்படும் பழுதுகள் குறித்த விபரங்களை மொபைல் போனில் பெறலாம்.

2025 kia ev6 facelift launched

இது இல்லாமல், ஓவர்-தி-ஏர் (OTA) மென்பொருள் அப்டேட்களும் புதிய இவி6 காரில் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக 34 இசியூ கண்ட்ரோலர்கள் (ECU Controllers)-ஐ நாமாக அப்டேட் செய்துக் கொள்ளலாம்; சர்வீஸ் செண்டருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இவற்றுடன், புதிய இவி6 காரில் வழங்கப்பட்டுள்ள டிஜிட்டல் கீ 2.0 ஆனது அல்ட்ரா-வைட்பேண்ட் (Ultra-Wideband) தொழிற்நுட்பத்தை கொண்டுள்ளது.

இந்த தொழிற்நுட்பத்தின் மூலமாக ஸ்மார்ட் போனை காருக்கான சாவியாக பயன்படுத்தலாம். இதற்கு நீங்கள் போனை எடுத்து ஏதேனும் க்ளிக் செய்ய வேண்டும் என்றுகூட அவசியமில்லை. மொபைல் போனை பாக்கெட்டில் அல்லது பையில் வைத்திருந்தாலே போதுமானது. இந்த மொபைல் போன் சாவியை மற்றவர்களிடமும் பகிர்ந்துக் கொள்ள முடியும். அதற்கு குறுஞ்செய்தியை அந்த நபருக்கு அனுப்பினாலே போதுமானது.

2025 kia ev6 facelift launched

100க்கும் அதிகமான இணைப்பு வசதிகளை கொண்ட இந்த கியா எலக்ட்ரிக் காரின் அறிமுகம் குறித்து கியா இந்தியா நிறுவனத்தின் முதன்மை விற்பனை அதிகாரி ஜூன்சு சோ கூறுகையில், "புதிய கியா இவி6 ஆனது வடிவமைப்பு, வசதி மற்றும் தொழிற்நுட்பத்தை எடுத்துக்காட்டும் எங்கள் இவி மொபிலிட்டி முன்னேற்றத்தின் உண்மையான சான்றாகும்.

பெரிய பேட்டரி பேக், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சிறந்த வடிவமைப்புடன் இது இந்தியாவின் பிரீமியம் எலக்ட்ரிக் வாகன சந்தையில் ஒரு அளவுக்கோலை அமைக்கும் மற்றும் இவி6 மரபை முன்னோக்கி எடுத்து செல்லும். செயல்திறன் மற்றும் நிலைத்தன்மை என இரண்டையும் பெற விரும்பும் இந்திய வாடிக்கையாளர்களின் தேவைகளை புதிய இவி6 பூர்த்தி செய்யும்" என தெரிவித்துள்ளார்.

2025 kia ev6 facelift launched

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகவும் மெதுவாகவே அதிகரித்து வருகிறது என்றாலும், விலையுயர்ந்த எலக்ட்ரிக் கார்களுக்கு சமீப காலத்தில் நல்ல டிமாண்ட் உருவாகி உள்ளது. ஆதலால், அதனை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக புதிய கியா இவி6 ஃபேஸ்லிஃப்ட் கார் இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 26, 2025, 20:03 [IST]
English summary
Kia ev6 facelift electric car launched in india price features range all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X