பணக்காரர்களை எப்பவுமே தன் பக்கமே வச்சிக்கணும்னு முடிவு பண்ணிட்டாங்கபோல.. அப்படியொரு ரகத்துல இவி6 இருக்கு!
கியா (Kia) நிறுவனத்தின் புகழ்பெற்ற எலெக்ட்ரிக் கார் (Electric Car) மாடலாக இவி6 (EV6) இருக்கின்றது. இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில், குறிப்பாக, பணக்காரர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கிலேயே கியா நிறுவனம் இவி6 மின்சார் கார் மாடலின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனை இந்தியாவில் களமிறக்கி இருக்கின்றது. இதனையே சமீபத்தில் ஓட்டி பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. கியாவின் ஆந்திர ஆலையில் வைத்தே இந்த காரை ஓட்டி பார்த்தோம்.
அப்போது அந்த கார் பற்றிய பல்வேறு சுவாரஷ்யமான தகவல்கள் எங்களுக்குக் கிடைத்தன. குறிப்பாக, புதுப்பித்தலின்கீழ் காரில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மாற்றங்கள், காரின் சிறப்புகள் மற்றும் அதன் இயங்கும் திறன் உள்ளிட்டவை போன்ற முக்கிய தகவல்களையே நாங்கள் அறிந்துக் கொண்டோம். இந்த தகவல்களையே இங்கே வீடியோவாக உங்களுக்காக தொகுத்து வழங்கி இருக்கின்றதோம். வாங்க வீடியோவைக் காணலாம்.
இந்தியாவில் கியா இவி6 எலெக்ட்ரிக் கார் ரூ. 65.8 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். புதுப்பித்தலின்கீழ் இந்த காரின் வெளிப்புற தோற்றம் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவற்றிலேயே கியா நிறுவனம் மாற்றம் செய்திருக்கின்றது.

மிக முக்கியமாக இதன் பேட்டரி பேக்கையும் அது அப்கிரேட் செய்திருக்கின்றது. புதிய 84 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கையே புதிய கியா இவி6 காரில் வழங்கி இருக்கின்றனர். இது ஓர் என்எம்சி வகை பேட்டரி பேக் ஆகும். ஓர் முழு சார்ஜில் இது 663 கிமீ ரேஞ்சை வழங்கும். அராய் சான்றளித்த ரேஞ்ச் திறன் இதுவாகும்.


Click it and Unblock the Notifications








