30 நாள் முக்கி முக்கி வித்தும் ஒருத்தரு தான் இந்த காரை வாங்கியிருக்காரு!
கியா நிறுவனம் தனது பவர்ஃபுல் எஸ்யூவி காராக இவி 9 என்ற காரை விற்பனை செய்து வருகிறது.இந்த கார் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் தான் அறிமுகமான நிலையில் கடந்த நவம்பர் மாதம் இந்த காரின் விற்பனை விபரங்கள் வெளியாகியுள்ளன. அதை விரிவாக காணலாம் வாருங்கள்.
கியா நிறுவனம் இந்தியாவில் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த நவம்பர் மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ள நிலையில் இந்நிறுவனம் தனது பவர்ஃபுல் இவி எஸ்யூவி காரான இவி 9 காரின் விற்பனை விபரங்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி இந்நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் முழுவதும் வெறும் 1 காரை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் இதன் விலை தான். இந்த கார் ரூ1.3 கோடி என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் ஜிடி வேரியன்டில் மட்டுமே விற்பனையாகி வருகிறது. முழுமையாக கட்டமைக்கப்பட்ட காராக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது.
இந்த காரை ஒரு முறை சார்ஜ் போட்டால் 561 கி.மீ வரை பயணிக்க முடியும். இந்த காரில் 99.8 kWh பேட்டரிபேக் வழங்கப்பட்டுள்ளுது. இந்த காரில் 2 எலெக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டு ஆல் வீல் டிரைவ் காராக விற்பனைக்கு வருகிறது. இ்நத காரில் 384 எச்பி பவர் மற்றும் 700 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்பட்டுள்ளுது. இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 5.3 நொடியில் பிக்கப் செய்துவிடும் திறன் கொண்டதாக உள்ளது.

இந்த காரில் உள்ள பேட்டரியை சார்ஜ் செய்ய 10-80 சதவீத சார்ஜிற்கு வெறும் 24 நிமிடங்கள் தான் ஆகும். இதற்கு 350KW டிசி ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்த வேண்டும். இந்த காரில் 6 சீட்டர் லேஅவுட் உடவன் வருகிறது. இதில் இரண்டாவது வரிசை சீட்டுகள் கேப்டன் சீட்களாக வழங்கப்பட்டுள்ளது. இதில் எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட்மென்ட் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. மசாஜ் அம்சங்களும் உள்ளது. கால் வைக்க நல்ல சப்போர்ட்டும் கிடைக்கும்.
இது போக இந்த காரில் 12.3 இன்ச் டச் ஸ்கிரீன், பெரிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 3 ஸோன் கொண்ட கிளைமேட் கண்ட்ரோல், டுயல் எலெக்ட்ரிக் சன் ரூஃப், ஹெட்ஸ்அப் டிஸ்பிளே, டிஜிட்டல் ரியர் வியூ மிரர், வெகிஹில் டூ லோடு ஃபங்சன், 14 ஸ்பீக்கம் கொண்ட மெரிடியன் ஆட்டோ சிஸ்டம், டிஜிட்டல் கீ, ஓடிஏ அப்டேட்கள், கியா கனெக்ட் கார் தொழிற்நுட்பம் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியா நிறுவனத்தின் இந்த கார் விலை கோடியில் இருப்பதால் மிக குறைவாக வாங்கி வருகிறார்கள். இந்த கார் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டால் விலை பாதியாக குறையும். இதனால் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









