கியா கிட்ட இருந்து இந்த அறிவிப்புக்கு தான் காத்துக்கிட்டு இருந்தோம்! புது கார் உடன் பண்டிகையை கொண்டாடுங்க!

கியா (Kia), நிறுவனம் இந்தியாவில் அதன் கார்களின் விலைகளை குறைக்க போவதாகவும், இந்த விலை குறைப்பானது எந்த அளவிற்கு இருக்கும் என்பதையும் அறிவித்துள்ளது. மத்திய அரசாங்கத்தில் இருந்து கார்கள் மற்றும் பைக்குகளுக்கான ஜிஎஸ்டி (GST) வருகிற செப்டம்பர் 22ஆம் தேதியில் இருந்து குறைக்கப்பட உள்ள நிலையில், அதற்கேற்றவாறு கார் நிறுவனங்களும் தங்களது கார்களுக்கான எக்ஸ்-ஷோரூம் விலைகளை (Ex-Showroom Prices) குறைத்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில் கியாவும் தனது கார்களின் விலைகள் குறைத்துள்ளது. ஜிஎஸ்டியில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய குறைப்புகளின் முழுப் பலனையும் கியா இந்தியா நிறுவனம் தனது கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. செப்டம்பர் 22 முதல் புதிய ஜிஎஸ்டி விகிதங்கள் அமலுக்கு வரும்போது, கியாவின் பிரபலமான செல்டோஸ் (Seltos), சோனட் (Sonet) மற்றும் கேரன்ஸ் (Carens) போன்ற எஸ்யூவிகளின் விலைகள் கணிசமாகக் குறையும்.

kia cars price reduction

இது பண்டிகைக் காலத்திற்கு முன்னதாக வாடிக்கையாளர்களுக்கு வாகனங்களை வாங்க மேலும் ஊக்கப்படுத்தும். ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவின்படி, எஸ்யூவிகளுக்கான வரி விகிதம் 50% (28% ஜிஎஸ்டி + 22% செஸ் (Cess)) என்பதிலிருந்து 40% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் எஸ்யூவி பிரிவில் உள்ள அனைத்து கார்களின் விலைகளும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கியா நிறுவனம் இந்த வரி குறைப்பின் மூலம் அடையும் பலனை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விலை குறைப்புகள் கார்கள் மற்றும் அவற்றின் வேரியண்ட்களுக்கு ஏற்ப மாறுபடும். பண்டிகைக் காலத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட இந்த நடவடிக்கை, "வாடிக்கையாளருக்கு தான் முக்கியத்துவம்" என்ற தங்களது தத்துவத்திற்கு ஏற்ப அமைந்துள்ளதாக கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

kia cars price reduction

செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரும் புதிய ஜிஎஸ்டி 2.0 திட்டத்தின்படி, கியா சோனட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,64,471 வரையில் குறைக்கப்பட உள்ளது. கியா சைரோஸ் காரின் விலை ரூ.1,86,003 வரை குறையும். கியா செல்டோஸ் காரின் விலை ரூ.75,372 வரை குறையும். கியா கேரன்ஸ் காரின் விலை ரூ.48,513 வரை குறையும் என கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கியா கேரன்ஸ் கிளாவிஸ் (Carens Clavis) காரின் விலை ரூ.78,674 வரையிலும், கியா கார்னிவல் (Carnival) காரின் விலை ரூ.4,48,542 வரையிலும் குறைய உள்ளன. ஜிஎஸ்டி தொடர்பான குறைப்புகள் உடன் கூடுதலாக, கியா நிறுவனம் பண்டிகைக் காலத்திற்கான சலுகை & தள்ளுபடிகளை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கிறோம். இதில் குறைந்த வட்டி உடன் மாதத்தவணை திட்டங்கள், நீட்டிக்கப்பட்ட வாரண்டி தொகுப்புகள் மற்றும் கவர்ச்சிகரமான எக்ஸ்சேஞ்ச் போனஸ்கள் உள்ளிட்டவை இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

kia cars price reduction

மக்கள் மத்தியில் கார்களுக்கு அதிக தேவை உருவாகிவரும் இந்த காலகட்டத்தில் இவ்வாறான விலை குறைப்புகள் மற்றும் சலுகைகள் வாகன உரிமையாளர்களின் எண்ணிக்கையை பல மடங்கும் உயர்த்தும். ஜிஎஸ்டியில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த திருத்தம், பயணிகள் வாகனப் பிரிவில், குறிப்பாக இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் எஸ்யூவிகளில், மீண்டும் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கியா நிறுவனத்தால் சரியான நேரத்தில் அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பு, கார் வாங்குவதில் மக்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும். இது பண்டிகைக் காலத்தில் வலுவான விற்பனையை அடைய நிறுவனத்தை ஊக்கப்படுத்தும். இந்த மாற்றங்களுடன், கியா நிறுவனம் இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றாக தனது நற்பெயரைத் தொடர்ந்து வளர்த்து வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்களின் நிதிச் சுமையைக் குறைப்பதுடன், பண்டிகைக் காலத்தில் கார்களுக்கான தேவையை அதிகரிக்கும் என்று கியா நம்புகிறது. பண்டிகைக் காலம் பொதுவாக வாகனத் துறைக்கு வலுவான விற்பனை காலமாக இருந்து வருகிறது. அத்தகைய நேரத்தில் கார்களின் விலை குறைப்புடன், சலுகைகளும் அறிவிக்கப்படுவது நேர்மறையான வளர்ச்சியை கொடுக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 9, 2025, 15:19 [IST]
English summary
Kia india announced cars price reduction due to gst reform check all details here
மேலும்... #kia motors #car price #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X