கியா உருவாக்கும் இந்த எலெக்ட்ரிக் கார்களை வாங்க ஒருத்தர் கூட இல்ல! பேசாம நீ கொரியாவுக்கே போய்டு சிவாஜி...

கியா இந்தியா (Kia India) நிறுவனம், கடந்த செப்டம்பர் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த நிறுவனங்கள் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஒட்டு மொத்த கார் சந்தையின் 6% பங்கை கியா பெற்றுள்ளது. அதாவது, கடந்த மாதத்தில் 100இல் 6 பேர் கியா காரை வாங்கி உள்ளனர்.

கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில் மொத்தமாக 22 ஆயிரத்து 700 கியா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 23,523 கியா கார்களுடன் ஒப்பிடுகையில் 3% சரிவைக் காட்டுகிறது. ஆனால், முந்தைய 2025 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கார்கள் விற்பனையில் கியா குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

kia cars sales reportseptember 2025

ஏனெனில், 2025 ஆகஸ்ட்டில் விற்பனை செய்யப்பட்ட 19,608 கியா கார்களுடன் ஒப்பிடுகையில், இந்த நிறுவனத்தின் மாதாந்திர விற்பனை 16% அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கியா கார்களுள் சொனட், அதிகபட்ச விற்பனையுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் 9,020 சொனட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Sep-25 Sep-24 Diff % Change YoY % Share Sep 25
1 Sonet 9,020 10,335 -1,315 -12.72 39.74
2 Carens 7,338 6,217 1,121 18.03 32.33
3 Seltos 5,816 6,959 -1,143 -16.42 25.62
4 Syros 465 0 465 - 2.05
5 Carnival 61 0 61 - 0.27
6 EV6 0 12 -12 -100.00 0.00
7 EV9 0 0 0 - 0.00
Total 22,700 23,523 -823 -3.50 100.00
Sep-25 Aug-25 Diff % Change MoM % Share Aug 25
1 Sonet 9,020 7,741 1,279 16.52 39.48
2 Carens 7,338 6,822 516 7.56 34.79
3 Seltos 5,816 4,687 1,129 24.09 23.90
4 Syros 465 308 157 50.97 1.57
5 Carnival 61 50 11 22.00 0.25
6 EV6 0 0 0 0.00 0.00
7 EV9 0 0 0 0.00 0.00
Total 22,700 19,608 3,092 15.77 100.00

இது 2024 செப்டம்பரை காட்டிலும் 13% சரிவாக இருந்தாலும், 2025 ஆகஸ்ட்டில் விற்கப்பட்ட 7,741 சொனட் கார்களுடன் ஒப்பிடுகையில் மாதாந்திர விற்பனை 17% உயர்ந்துள்ளது. கியா கேரன்ஸ் கிளாவிஸ், இரண்டாவது இடத்தில் வலுவான தேவையுடன் திகழ்கிறது. இதன் விற்பனை கடந்த மாதம் 7,338 யூனிட்களாக உயர்ந்துள்ளது.

kia cars sales reportseptember 2025

இது 2024 செப்டம்பரில் 6,217 யூனிட்களாகவும், 2025 ஆகஸ்ட்டில் 6,822 யூனிட்களாகவும் இருந்த நிலையில், 2024 செப்டம்பரை காட்டிலும் 18 சதவீதமும், 2025 ஆகஸ்ட்டை காட்டிலும் 8 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த வரிசையில், கியா செல்டோஸ் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

2024 செப்டம்பரில் 6,959 செல்டோஸ் கார்கள் விற்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் இதன் விற்பனை 5,816 யூனிட்களாக 16% குறைந்துள்ளது. இருப்பினும், 2025 ஆகஸ்ட்டில் 4,687 செல்டோஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன. கியா சைரோஸ் கடந்த மாதம் 465 யூனிட்கள் விற்பனையாகி, 2025 ஆகஸ்ட்டில் 308 யூனிட்கள் விற்கப்பட்டதில் இருந்து 51% மாதாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

kia cars sales reportseptember 2025

கியா நிறுவனம் அதன் எலக்ட்ரிக் மாடலான சைரோஸ் இவி-ஐயும் தீவிரமாக சோதித்து வருகிறது. இதன் ஸ்பை படங்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தன. கியா கார்னிவல் கடந்த மாதம் 61 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. இது 2025 ஆகஸ்ட்டில் 50 கார்னிவல் கார்கள் விற்கப்பட்டதில் இருந்து 22% மாதாந்திர வளர்ச்சி ஆகும்.

கியாவின் எலெக்ட்ரிக் கார்களான இவி6 மற்றும் இவி9 கடந்த மாதம் எந்த விற்பனையையும் பதிவு செய்யவில்லை. அதாவது, இந்த விலையுயர்ந்த கியா எலெக்ட்ரிக் கார்களை ஒருவர் கூட கடந்த மாதத்தில் வாங்கவில்லை. 2025 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், கியா இந்தியா நிறுவனம் மொத்தமாக 64,443 கார்களை விற்பனை செய்துள்ளது.

Kia Sales Breakup
No Kia Q3 25 Q3 24 Diff % Change YoY % Share Q3 25
1 Sonet 24,388 29,867 -5,479 -18.34 37.84
2 Carens / EV 21,762 17,777 3,985 22.42 33.77
3 Seltos 16,513 18,842 -2,329 -12.36 25.62
4 Syros 1,607 0 1,607 - 2.49
5 Carnival 173 0 173 - 0.27
6 EV6 0 67 -67 -100.00 0.00
7 EV9 0 0 0 - 0.00
- Total 64,443 66,553 -2,110 -3.17 100.00
kia cars sales reportseptember 2025

இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் விற்கப்பட்ட 66,553 கியா கார்களுடன் ஒப்பிடுகையில் 3.17% சரிவாகும். கியா சொனட் 24,388 யூனிட்கள் விற்பனையுடன் தொடர்ந்து முன்னணியில் உள்ளது. இது கியா நிறுவனத்தின் மொத்த காலாண்டு விற்பனை எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 38% பங்களிப்பை அளித்துள்ளது. இருப்பினும், காம்பாக்ட் எஸ்யூவி கார் பிரிவில் அதிகரித்து வரும் போட்டியின் காரணமாக, இதன் விற்பனை 2024 செப்டம்பரை விட 18.34% குறைந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கியா கார்கள் விற்பனை ஏற்ற, இறக்கமாகவே இருந்து வருகிறது. இதற்கு காரணம், கியா எஸ்யூவி கார்களுக்கு தொடர்ந்து அதிகரித்துவரும் போட்டியாகும். அந்த அளவிற்கு, புது, புது எஸ்யூவி கார்கள் தொடர்ச்சியாக மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட வண்ணம் உள்ளன. இந்தியாவில் கியா கார்கள் விற்பனை 2024 செப்டம்பரை விட குறைந்திருந்தாலும், கடந்த ஆகஸ்ட்டை விட குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்து இருப்பது இந்த தென்கொரிய கார் நிறுவனத்திற்கு மகிழ்ச்சியான செய்தியாகவே இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, October 17, 2025, 18:36 [IST]
English summary
Kia india cars wise sales report of september 2025 check all details here
மேலும்... #kia motors #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X