2019 ஆகஸ்டுலதான் இந்தியாவில் கால் தடமே பதிச்சாங்க.. அதுக்குள்ள 1.5 மில்லியன் கார்களை தயாரிச்சுட்டாங்களா!!
கியா நிறுவனம், இந்தியர்களின் ஃபேவரிட் கார் பிராண்டாக மாறி ரொம்ப நாள் ஆகிவிட்டது. இதற்கு சான்று எங்கே என கேட்பவர்கள், இந்த கேள்வியை கேட்பதற்கு பதிலாக சாலைக்கு வந்தாலே அவர்களின் கேள்விக்கான பதில் கிடைத்துவிடும். சாலையில் பத்து கார்களைக் கடக்கின்றோம் என்றால், அதில் குறைந்தபட்சம் இரண்டு கார்கள் கியாவுடையதாக இருக்கும். அந்த அளவிற்கே இப்போது இந்தியாவில் மிகவும் ஸ்ட்ராங்காக கால் தடம் பதித்திருக்கின்றது, கியா (Kia). இதை கூடுதலாக உறுதிப்படுத்தக் கூடிய ஓர் தகவலே இப்போது வெளியாகி இருக்கின்றது.
அதாவது, அந்நிறுவனம் வாகனம் உற்பத்தியில் மிகப் பெரிய சாதனையைப் படைத்திருப்பதாகவே தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனம் இந்தியாவில் இதுவரை 1.5 மில்லியன் யூனிட்டுகள் கார்களையே தயாரித்து இருக்கின்றது. இந்த நிறுவனம் இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாசத்திலேயே முதல் முறையாக கால் தடம் பதித்தது.

இது கால்தடம் பதித்த அடுத்த சில மாதங்களிலேயே உலக முழுவதும் முடங்கி போனது. இந்த நிறுவனத்தின் வருகையால் அல்ல கொரோனா வைரஸ் பரவல் காரணத்தினாலேயே உலக நாடுகள் அனைத்தும் முடங்கியது. இந்த நிலை பல மாதங்களுக்கு நீடித்தது. இந்த மாதிரியான சூழலில் சிக்கித் திக்குமுக்காடி போயிருந்தாலும், அந்த நிறுவனம் இப்போது உற்பத்தியில் மாபெரும் சாதனையைப் படைத்திருக்கின்றது.
இப்போதைய நிலவரப்படி இந்தியாவில் கியா நிறுவனம் செல்டோஸ் (Seltos SUV), சைரோஸ் (Syros SUV), சொனெட் (Sonet SUV), கேரன்ஸ் (Carens MPV), கார்னிவல் (Carnival MPV) ஆகிய கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவை அனைத்தும் ஐசிஇ (ICE) கார் மாடல்கள் ஆகும்.
இதுதவிர, மின்சார கார் மாடல்கள் சிலவற்றையும் அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவி 6 (EV 9) மற்றும் இவி 9 (EV 9) ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்களையே அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றில் இந்தியாவில் செல்டோஸ், சொனெட், சைரோஸ் மற்றும் கேரன்ஸ் ஆகிய நான்கே பெஸ்ட் செல்லிங் கார் மாடல்கள் ஆகும்.
கார்னிவல் காஸ்ட்லியான விலைக் கொண்ட எம்பிவி ரக சொகுசு கார் மாடல் ஆகும். ஆகையால், இதற்கு பணக்கார்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே நிறுவனத்தின் கார் உற்பத்தியில் புதிய சாதனையை இந்தியாவில் கியா நிறுவனம் படைத்திருக்கின்றது.
நிறுவனத்தின் உற்பத்தி ஆலை ஆந்திர மாநிலம், அனந்த்பூரிலேயே செயல்பட்டு வருகின்றது. இங்கு வைத்தே கார்களை அது சாக்லேட் பாக்கெட்டுகளைப் போல தயாரித்துக் கொண்டிருக்கின்றது. சுமார் 536 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துக் காணப்படும் இந்த ஆலையில் ஆண்டுக்கு 3 லட்சம் யூனிட்டுகள் வாகனங்களைத் தயாரிக்க முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது வெளியாகி இருக்கும் தகவலை வைத்து பார்க்கையில் இரவு - பகல் பாராமல் இடைவிடாமல் இந்த கியாவின் ஆந்திர ஆலை இயங்கி இருப்பது தெரிய வந்திருக்கின்றது. வரும் நாட்களில் இதுபோன்று இன்னும் பல சாதனைகளை கியா நிறுவனம் இந்தியாவில் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








