புக்கிங் பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டாங்க! இன்னும் என்ன வெயிட் பண்ணுறீங்க உடனே ஷோரூம்க்கு ஓடுங்க!
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட 2025 EV6 காரை கியா இந்தியா, புது டெல்லியில் நடந்து வரும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் வெளிப்படுத்தியுள்ளது. புதுப்பிக்கப்பட்ட எலெக்ட்ரிக் கிராஸ்ஓவர் மார்ச் மாதத்தில் விற்பனைக்கு வரும், இந்த காருக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. புதிய மாடலில் பல்வேறு அப்டேட்கள் உள்ளன. இவை உட்புறம் மற்றும் வெளிப்புறம் என இரண்டிலும் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக தற்போதைய மாடலை விட விலை அதிகமாக இருக்கும்.
மறுவடிவமைப்பு செய்யப்பட்ட EV6 முதலில் 2024ம் ஆண்டு மே மாதம் தென் கொரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஏற்கனவே பல்வேறு சர்வதேச மார்கெட்டில் விற்பனையாகி வருகிறது. அதன் சர்வதேச சிரீஸ் மாடல்களை விரிவுபடுத்துவதற்கான புதிய பேட்டரி ஆப்ஷன் குறிப்பிடத்தக்க அப்டேட்டாகும். இந்த வாகனம் இப்போது மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஹெட்லைட்டுகள் மற்றும் எல்இடி டேடைம் ரன்னிங் லைட்டுகள் ஸ்போர்ட்டியான லுக்கை தருகிறது.

புதிய EV6ன் வெளிப்புறமும் EV3 மற்றும் EV4 கான்செப்ட்களிலிருந்து ஈர்ப்பைப் பெறுகிறது. முன்பக்க கிரில்லின் கீழ்ப் பகுதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது, புதுப்பிக்கப்பட்ட பம்பர் கொண்டு இந்த வடிவமைப்பு ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இது காருக்கு புதிய தோற்றத்தை வழங்குகிறது. கூடுதலாக, புதிய வடிவமைப்பு கொண்ட கருப்பு மற்றும் சில்வர் நிற அலாய் வீல்கள்கள் அதன் தோற்றத்தை மேம்படுத்துகின்றன. அதே நேரத்தில் முழு அகல எல்இடி லைட் பார் பின்புறத்தில் ஸ்போட்டியான லுக்கை காருக்கு சேர்க்கிறது.
உட்புறத்தில், குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்களில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட வளைந்த பனோரமிக் டிஸ்ப்ளே இருக்கிறது, இது 12.3-இன்ச் இன்ட்ரூமென்ட் கிளஸ்டர் 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளேயையும் ஒருங்கிணைக்கிறது. இந்த அமைப்பு வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோவை சப்போர்ட் செய்கிறது. கேபினில் புதிய இரண்டு ஸ்போக் ஸ்டீயரிங் வீல் மற்றும் கீலெஸ் வாகனம் ஸ்டார்ட் செய்வதற்கான கைரேகை ஸ்கேனர் ஆகியவை உள்ளன.

அப்டேட் செய்யப்பட்ட ஹெட்-அப் டிஸ்ப்ளே மற்றும் சிறந்த டிரைவிங் அனுபவத்தை தரும் மறுசீரமைக்கப்பட்ட அதிர்வுகளை தாங்கும் டேம்பர்கள் ஆகியவை கூடுதல் அம்சங்கள். அதிக ஸ்டெபிளிட்டிக்காக சேஸிஸ் வலுப்படுத்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் டிஜிட்டல் பின்பக்கத்தை பார்க்கும் கண்ணாடி சிறந்த வியூவை வழங்குகிறது. ஓவர்-தி-ஏர் அப்டேட்கள் இப்போது முக்கிய எலெக்ட்ரானிக் அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் ஜெனெசிஸ்-பெறப்பட்ட ஆர்க்யூமென்டட் ரியாலிட்டி நேவிகேஷன் சேர்க்கப்பட்டுள்ளது.
2025 கியா EV6 அதன் பேட்டரி முந்தைய 77.4 kWh யூனிட்டிலிருந்து 84 kWh பேட்டரி பேக்கிற்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் RWD வேரியன்டின் ரேஞ்சை கொரிய தரங்களின்படி 494 கிமீ வரை நீட்டிக்கிறது, முந்தைய மாடலை விட 19 கிமீ வரை ரேஞ்ச் அதிகரிக்கிறது. புதிய பேட்டரி பேக் 350 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது, இது வெறும் 18 நிமிடங்களில் 0 முதல் 80% வரை சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது.
இந்த காரின் அளவுகளை பொருத்தவரை நீளம் 4,680 மிமீ, அகலம் 1,880 மிமீ, உயரம் 1,550 மிமீ , வீல் பேஸ் 2,900 மிமீ , கிரவுண்ட் கிளியரன்ஸ் 160 மிமீ அளவுகளில் உள்ளது. இதனால் பயணிகளுக்கு போதுமான இட வசதி மற்றும் பிற வசதிகள் உள்ளன.
செயல்திறன்-விஷயத்தில், EV6 320 hp பவர் மற்றும் 605 Nm டார்க் திறனை சிங்கிள் அல்லது இரண்டு மோட்டார் ஆப்ஷன்களில் வழங்குகிறது. இது RWD அல்லது AWD செட்டப் உடன் விற்பனைக்கு வருகிறது. GT மாடல் வெறும் 3.2 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை பிக்கப் செய்ய முடியும், அதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 180 கிமீ ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியாவின் சமீபத்திய அப்டேட்கள் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் செயல்திறன் அப்டேட்களுடன் EV6 காரை வாடிக்கையாளர்கள் அதிகம் ஈர்க்கக்கூடியதாக ஆக்குகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் அதன் டெலிவரி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








