இந்தியர்களை அதிரவிடும் கார் உற்பத்தியாளர்கள்.. ஏழைகளால் புதிய காரை வாங்க முடியுமா? மாச கடைசியோட கதை மாறபோது!

ஒட்டுமொத்த இந்தியர்களையும் கதறவிடும் வகையில் சமீபத்தில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) ஓர் அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. புதிய கார்களின் விலையை விரைவில் உயர்த்த இருப்பதாகவே அந்த அறிவிப்பில் அது தெரிவித்திருந்தது. எனவே அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல் நிறுவனத்தின் கார்கள் புதிதாக உயர்த்தப்பட்ட விலையில் விற்பனைச் செய்யப்படும் என்கிற சூழல் உருவாகி இருக்கின்றது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த அறிவிப்பு இந்திய வாகன பிரியர்களுக்கு பேரதிர்ச்சியில் மூழ்க செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது.

இந்த அதிர்ச்சியின் அதிர்வலை ஓயும் முன்னரே அடுத்ததாக மாற்றுமொரு கார் உற்பத்தியாளரும் வருகின்ற ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தன்னுடைய தயாரிப்புகளின் விலையை உயர்த்த இருப்பதாக தெரிவித்து இருக்கின்றது. பிரபல தென் கொரிய கார் உற்பத்தி நிறுவனமான கியா (Kia)-வே அது ஆகும்.

Kia india announces price increase on models

இப்போது விற்கப்படும் விலைகளில் இருந்து 3 சதவீதம் வரை உயர்த்தப்பட்ட விலையிலேயே புதிய கார்கள் அடுத்த மாதம் முதல் விற்பனைச் செய்யப்பட இருக்கின்றன. தொடர்ச்சியாக உயர்ந்து வரும் வாகன கட்டுமான செலவைச் சமாளிக்கும் பொருட்டே இந்த விலை உயர்வை அந்நிறுவனம் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியர்களின் பிரியமான கார் பிராண்டுகளில் ஒன்றாக கியா மாறியிருக்கின்றது. இந்த நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பாக செல்டோஸ் (Seltos SUV), சொனெட் (Sonet SUV), கேரன்ஸ் (Carens MPV) உள்ளிட்டவை இருக்கின்றன. இவற்றின் விலை உயர இருப்பது அதன் பிரியர்களை கவலையில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

Kia seltos pic

கியா நிறுவனம் இதுவரை நாட்டில் 1.45 மில்லியன் வாகனங்களை விற்பனைச் செய்திருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இதில் பெரும் தலையாக செல்டோஸ் உள்ளது. இதுவரை 6.90 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் வரை அது விற்பனையாகி இருக்கின்றது. இதனால்தான் நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக செல்டோஸ் உள்ளது.

இதற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் சொனெட் இருக்கின்றது. இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் சொனெட் கார்கள் நாட்டில் விற்பனையாகி இருக்கின்றன. மூன்றாவது இடத்தில் கேரன்ஸ் உள்ளது. இது ஓர் எம்பிவி ரக கார் மாடல் ஆகும். இது 2.32 லட்சம் யூனிட்டுகளைக் கடந்து விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது.

இவர்கள் அனைவருக்கும் டஃப் கொடுக்கும் மாடலாக நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான சைரோஸ் (Syros) மாறி வருகின்றது. மிகவும் குறைவான விலையில் சிறப்பம்சங்களை வாரி வழங்கும் ஓர் கார் மாடலாக இது உள்ளது. ஆகையால், இந்தியர்கள் மத்தியில் இதற்குக் கிடைக்கும் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

Take a Poll

எனவே சீக்கிரமே இந்த கார் மாடல் செல்டோஸ்-க்கே சவால்விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் கியா சைரோஸ் எஸ்யூவி ரூ. 8.99 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை டுமே ஆகும். இந்த காரின் விலையும் வருகின்ற விலை உயர்வு நடவடிக்கையால் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மக்கள் அனைவரும் வெறுக்கக் கூடிய ஒன்றே விலை உயர்வு. இந்த யுக்தியை கியா நிறுவனம் கையில் எடுக்க இருப்பது பலரை அதிருப்தியில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது. அதேவேளையில், இந்த விலை உயர்வு நடவடிக்கையால் நிறுவனத்தின் வாகன விற்பனையில் எந்தவொரு பெரிய பாதிப்பும் ஏற்படாது என நம்பப்படுகின்றது.

FAQs
கியா மட்டும்-தான் விலை உயர்வை செய்ய இருக்கின்றதா?

கியா மட்டுமல்ல மாருதி சுஸுகி மற்றும் டாடா மோட்டார்ஸ் போன்றோரும் வாகனங்களின் விலையை உயர்த்த இருக்கின்றனர். டாடா இப்போதைக்கு அதன் வர்த்தக பயன்பாட்டு பிரிவில் உள்ள வாகனங்களின் விலையை உயர்த்த இருப்பதையே உறுதிப்படுத்தி இருக்கின்றது.

கியா கார்கள் எவ்வளவு ரூபாய் வரை உயர இருக்கின்றது.

மாடல் மற்றும் வேரியண்டைப் பொருத்து விலை உயர்வு மாறுபடும். அந்தவகையில், ரூ. 5 தொடங்கி ரூ. 60 ஆயிரம் விலை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கியா நிறுவனம் என்னென்ன கார் மாடல்களை நாட்டில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது?

சொனெட், கேரன்ஸ், செல்டோஸ், இவி6, கார்னிவல், இவி9 மற்றும் சைரோஸ் ஆகிய கார் மாடல்களையே கியா நிறுவனம் நாட்டில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

DriveSpark Automotive

More from DriveSpark

Article Published On: Tuesday, March 18, 2025, 23:09 [IST]
English summary
Kia india implements up to 3 percent price increase on all models starting april 2025
மேலும்... #kia motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+