கியா பார்த்து பார்த்து உருவாக்கிய காரில் புதிய அப்டேட்! புக் பண்ணும் முன்ன இதை தெரிஞ்சிக்கோங்க!

கியா இந்தியா (Kia India) நிறுவனம், அதன் பிரபல கேரன்ஸ் கிளாவிஸ் (Carens Clavis) காரில் புதிய வேரியண்ட்களை அறிமுகப்படுத்தி உள்ளது. வாடிக்கையாளர்களின் பிரீமியம் மற்றும் பல்துறை பயன்பாட்டுக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த விரிவாக்கம் அமைந்துள்ளது. இதன்மூலம், பிரீமியம் கார்கள் பிரிவில் சௌகரியம், தொழில்நுட்பம் மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக கேரன்ஸ் கிளாவிஸ் அமையும்.

புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள கேரன்ஸ் கிளாவிஸ் எச்.டி.எக்ஸ் (ஆப்ஷ்னல்) (HTX(O)) வேரியண்ட்டின் அறிமுகச் சலுகை விலையாக ரூ.19.26 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வேரியண்ட் ஆனது பல்வேறு பிரீமியம் அம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த விரிவாக்கத்தின் மூலம், கேரன்ஸ் கிளாவிஸ் காரின் வேரியண்ட்கள் வரிசையில் தற்போது மொத்தம் எட்டு வேரியண்ட்கள் உள்ளன.

kia carens clavis htx optional introduced

இவை 6 மற்றும் 7 இருக்கை ஆப்ஷன்களில் கிடைக்கின்றன. HTX(O) வேரியண்ட் ஆனது, HTX மாடலுக்கு மேலான அம்சங்களைக் கொண்டுள்ளது. இதில் BOSE பிரீமியம் 8-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ஈக்கோ, நார்மல், ஸ்போர்ட் ஆகிய டிரைவ் மோட்கள் (Drive Modes), ஸ்மார்ட் கீ ரிமோட் என்ஜின் ஸ்டார்ட், ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் போன்ற சிறப்பம்சங்கள் இடம்பெற்று உள்ளன.

மேலும், புதிய எச்டிஎக்ஸ் (ஆப்ஷ்னல்) வேரியண்ட் 1.5 லிட்டர் டர்போ GDi என்ஜின் மற்றும் 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் (DCT Gearbox) உடன் கிடைக்கும். இந்த 1.5 லி டர்போ பெட்ரோல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 160bhp மற்றும் 253Nm ஆற்றலை வழங்கக்கூடியதாக உள்ளது. இந்த புதிய கேரன்ஸ் கிளாவிஸ் வேரியண்ட்டை 6 அல்லது 7 சீட்டர் ஆப்ஷ்னலில் பெறலாம்.

kia carens clavis htx optional introduced

இந்த புதிய வேரியண்ட் அறிமுகம் மட்டுமின்றி, வாடிக்கையாளர்களின் கோரிக்கையை ஏற்று, கியா நிறுவனம் கேரன்ஸ் கிளாவிஸ் காரின் HTK+ மற்றும் HTK+(O) ஆகிய வேரியண்ட்களிலும் 6 இருக்கை ஆப்ஷனை அறிமுகப்படுத்தி உள்ளது. கார்களின் பாதுகாப்பில் கியா நிறுவனம் தொடர்ந்து கவனம் செலுத்துகிறது.

அதன்படி, கேரன்ஸ் கிளாவிஸ் காரில் லெவல்-2 ADAS (20 தானியங்கி அம்சங்களுடன்), ஆறு ஏர்பேக்குகள், ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல் (HAC), பின் இருக்கை அலர்ட் மற்றும் ரோல்ஓவர் சென்சார்கள் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படுகின்றன. உட்புறத்தில், கேரன்ஸ் கிளாவிஸ் 67.62 செ.மீ (26.62-இன்ச்) இரட்டை பனோரமிக் டிஸ்ப்ளே, கேபினை சுற்றிலும் விளக்குகள், இரண்டாவது இருக்கை வரிசையில் ஒன்-டச் எலெக்ட்ரிக் டம்ப்ள் சீட்கள் மற்றும் அனைத்து இருக்கை வரிசைகளிலும் கூரையில் ஏர் வென்ட்கள் போன்ற பிரீமியம் அம்சங்களை வழங்குகிறது.

kia carens clavis htx optional introduced

ரூ.19.26 லட்சத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள HTX(O) வேரியண்ட்டில் போஸ் 8-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், டிரைவ் மோட் செலக்ட் (ஈக்கோ/நார்மல்/ஸ்போர்ட்), ஸ்மார்ட் கீ ரிமோட் என்ஜின் ஸ்டார்ட் மற்றும் ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் போன்ற பிரீமியம் அம்சங்கள் உள்ளன.

கியா இந்தியாவின் மூத்த துணைத் தலைவரும், தேசிய விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவருமான திரு.அதுல் சூட் இதுகுறித்து பேசுகையில், "வாடிக்கையாளர்களின் ஒட்டுமொத்த பிராண்டு அனுபவத்தை மேம்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை இது மேலும் வலுப்படுத்துகிறது. கேரன்ஸ் கிளாவிஸ் காரின் வேரியண்ட்கள் வரிசையை மேம்படுத்துவதிலும், ஒவ்வொரு மாடலையும் ஒரு சிறந்த தேர்வாக மாற்றுவதிலும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று தெரிவித்தார்.

Trim Engine Transmission Price (Rs, Ex-showroom)
HTK+ Smartstream G1.5 T-GDi (6-Seater) 7 DCT Rs 16,28,064
HTK+ 1.5L CRDi VGT (6-Seater) 6 AT Rs 17,34,037
HTK+(O) Smartstream G1.5 T-GDi (6-Seater) 7 DCT Rs 17,05,135
HTX(O) Smartstream G1.5 T-GDi (7-Seater) 7 DCT Rs 19,26,717
HTX(O) Smartstream G1.5 T-GDi (6-Seater) 7 DCT Rs 19,26,717

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியா கேரன்ஸ் கிளாவிஸ் ஆனது ஏற்கனவே அதன் பெரிய அளவிலான உருவத்தின் மூலமாக அதிக பயணிகளை அழைத்துச் செல்லக்கூடிய காராக மக்கள் மத்தியில் இடம்பிடித்துவிட்டது. குடும்பமாக பயணிப்பவர்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையையும் சௌகரியத்தையும் வழங்குகிறது. இததகைய கியா கேரன்ஸ் கிளாவிஸ் காரின் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட வேரியண்ட்கள் அக்டோபர் 13, 2025 முதல் நாடு முழுவதும் உள்ள கியா டீலர்ஷிப் ஷோரூம்களில் கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, October 9, 2025, 10:27 [IST]
English summary
Kia india introduced htx optional variant in carens clavis car with 6 seater check all details here
மேலும்... #kia #kia carens #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X