ரயிலில் சின்ன சின்ன இடத்துலேயும் கார நொழச்சு அனுப்பிருக்காங்க.. இந்தியர்கள் கண்ணை மூடிட்டு வாங்குறாங்க!

இந்தியர்களின் ஃபேவரிட் கார் பிராண்டாக மாறி உள்ளது கியா (Kia). தென்கொரிய நிறுவனமான இது செல்டோஸ் (Seltos) எனும் எஸ்யூவி (SUV) ரக கார் மாடலை அறிமுகப்படுத்தியதன் இந்தியாவில் கால் தடம் பதித்தது. இப்போது, சொனெட் (Sonet), கேரன்ஸ் (Carens), சைரோஸ் (Syros) மற்றும் கார்னிவல் (Carnival) உள்ளிட்ட கார் மாடல்களை அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டு இருக்கின்றது. நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்திற்கும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டு உள்ளது.

மேலும், இந்த நிறுவனம் மாருதி சுஸுகி (Maruti Suzuki)-யை போலவே தன்னுடைய உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்படும் கார்களை விற்பனைக்காக மற்ற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க ரயில்களையே பயன்படுத்தி வருகின்றது. இந்த பணியிலேயே மிக முக்கியமான மைல்கல்லை அந்நிறுவனம் எட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Kia launches india s first suv freight train

நிறுவனம் முதல் முறையாக இரண்டு அடுக்குகளில் எஸ்யூவி ரக கார்களை ரயில்களில் அனுப்பி வைக்கத் தொடங்கி இருக்கின்றது. முன்னதாக ஒரு பெட்டியில் ஒரு அடுக்கில் மட்டுமே எஸ்யூவி கார்களை கியா நிறுவனம் அனுப்பி வைந்தது. ஆனால், இப்போது அந்நிறுவனம் கீழே மற்றும் மேலே என இரண்டு அடுக்குகளிலும் ரயில்களில் எஸ்யூவி கார்களை ஏற்றி அனுப்பி வைக்கத் தொடங்கி இருக்கின்றது.

இதன் வாயிலாக கார்களை மற்ற மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதில் முக்கிய மைல்கல்லை அந்நிறுவனம் எட்டியிருப்பது உறுதியாகி இருக்கின்றது. கியா நிறுவனத்தின் கார் உற்பத்தி ஆலை ஆந்திரா மாநிலத்திலேயே அமைந்திருக்கின்றது. தற்போது டபுள் டெக்கர் ரயில் (Double Decker Freight Train)இல் கார்கள் அனுப்பி வைக்கும் பணி பெனுகொண்டா ரயில் நிலையத்திலேயே தொடங்கி இருக்கின்றது.

ரயில்களில் கார்களை அனுப்பி வைப்பதன் வாயிலாக கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு பல்வேறு பலன்கள் கிடைக்கும். டிரக்குகளில் கார்களை அனுப்பி வைப்பதைக் காட்டிலும் மிக மிக குறைவான செலவே இதற்கு ஆகும். இதுதவிர, டிரக்குகளின் இயக்கத்தால் காற்று மாசு அதிகரிக்கின்றது. இதையும் அவர்களால் குறைக்க முடியும்.

மேலும், இந்தியன் ரயில்வேஸும் கார் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக சில சலுகைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. எனவே பலநிலைகளில் இதன் வாயிலாக வாகன உற்பத்தியாளர்கள் பலன்களை அனுபவித்து வருகின்றனர் என்றே சொல்லலாம். இப்போது ஒரே ரயிலில் 26 வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றன.

இதுவே வழக்கமான ரயிலாக இருந்தால் சுமார் 100 கார்களை மட்டுமே அனுப்பி வைத்திருக்க முடியும். கார் அனுப்பி வைப்பது இரட்டிப்பாகி இருப்பதால், வரும் நாட்களில் நிறுவனம் உரிய நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு வாகனங்களை டெலிவரி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் கியா நிறுவனத்தின் செல்டோஸ், சொனெட் மற்றும் புதிதாக விற்பனைக்கு வந்த சிரோஸ் ஆகிய கார் மாடல்களுக்கு மிக சிறப்பான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி நிறுவனம் தன்னுடைய உற்பத்தி ஆலைக்கே வந்து கார்களை ரயில்கள் ஏற்றிச் செல்லும் வகையில் வழிவகுத்து இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவில் இவ்வாறு செயல்படும் ஒரே நிறுவனம் மாருதி மட்டுமே ஆகும். இந்த நிலையிலேயே இரண்டு அடுக்குகளில் கார்களை அனுப்பி வைக்கும் முதல் நிறுவனமாக கியா மாறியிருக்கின்றது. வாடிக்கையாளர்களின் தேவையை விரைந்து பூர்த்தி செய்யவே இந்த புதிய பணியை அது தொடங்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 5, 2025, 23:30 [IST]
English summary
Kia launches india s first suv only double decker freight train to revolutionise logistics
மேலும்... #kia motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+