குடும்பத்தோட 7 பேர் போகலாம்! மைலேஜ் ரொம்ப ஜாஸ்தியா தரும்! இந்த கார் இந்தியா வரப்போகுதா?
இந்தியாவில் குடும்பத்துடன் பயணிக்கும் ரக கார்களின் விற்பனை கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் கியா நிறுவனம் சர்வதேச மார்கெட்டில் விற்பனவையாகி வரும் டி-செக்மெண்ட் எஸ்யூவி ஒன்றை இந்தியாவிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.இதனால் இந்தியாவில் பிரிமியம் எஸ்யூவி மார்கெட்டில் போட்டி அதிகமாகவுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் கியா நிறுவனம் இவி6, இவி9, சைரோஸ் ஆகிய கார்களை சமீபத்தில் அறிமுகப்படுத்தி மார்கெட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முயற்சி செய்து வரகிறது. இந்நிறுவனம் பிரிமியம் 3 வரிசை சீட்டர் கொண்ட எஸ்யூவி கார் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. சர்வதேச மார்கெட்டில் விற்பனையாகி வரும் சொரென்டோ என்ற கார் தான் இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கியா சொரென்டோ கார் டி செக்மெண்ட் எஸ்யூவி கார் ஆகும். இந்த கார் தற்போது சர்வதேச மார்கெட்டில் 4வது தலைமுறை காராக விற்பனையாகி வருகிறது.இந்த கார் கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ம் தலைமுறை கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதன் 4ம் தலைமுறை காரின் ஃபேஸ்லிஃப்ட அப்டேட் கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் செய்யப்பட்டது. இந்த கார் 2026ம் ஆண்டு இறுதியில்அல்லது தீபாவளியை முன்னிட்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
கியா நிறுவனம் சொரென்டோ காரில் ஏகப்பட்ட அம்சங்களை வழங்கியுள்ளுது. பெரிய பானட், வெர்டிகலான ஹெட்லைட், டி வடிவ டிஆர்எல், செவ்வடி வடிவமைப்பில் கிரில், அதில் ஹெக்ஸகோனல் டிசைன், வெர்டிகல் டெயில் லைட், டயகனல் எல்இடி, ஆகிய அம்சங்களும் இதில் உள்ளது. மேலும் இதில் 20 இன்ச் வீல் பொருத்தப்பட்டுளு்ளது. இந்தியாவிற்கு இந்த கார் வரும் போது 19 இன்ச் வீல் பொருத்தப்படலாம்.

இந்த காரின் உட்புறம் பெரிய டேஷ் போர்டு, முன்பக்க டோர் பேனல் உடன் இணைக்கப்பட்டுள்ளுது. இது போக 4 ஸ்போக் ஸ்டியரிங் வீல், நீட்டான சென்டர் கன்சோல், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், கர்வ்டு எல்இடி பேனல், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 12.3 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கனெக்டெட் கார் நேவிகேஷன் காக்பிக்ட் ஆப்ரேட்டிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது.
இந்த கார் 6 மற்றும் 7 சீட் வேரியன்டில் கிடைக்கிறது. இது அப்படியே இந்தியா வருமா என்பது தெரியவில்லை முேலும் இதில் ஹைபிரிட் ஆப்ஷன் உள்ளது. இதில் 1.6 லி டர்போ சார்ஜ்டு பெட்ரோல்இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 177 எச்பி பரவையும், 265 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த காரில் பெர்மனென்ட் மேக்ட் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் தனியாக பொருத்தப்பட்டுள்ளது. இது 64 எச்பி பவரையும், 250 என்எம் டார்க் தறினையும் வெளிப்படுத்தும். இந்த இரண்டும் சேர்ந்து காரக்க 236எச்பி பவரையும், 380 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.
மேலும் இந்த காரில் 1.49 kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளுது. இது எலெக்ட்ரிக் மோட்டாருக்கு சார்ஜை வழங்குகிறது. ஹைபிரிட் வேரியன்டில் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் மட்டுமே உள்ளது. மேலும் இதில் ஆல்வீல் டிரைவ் ஆப்ஷனாக கிடைக்கும். இந்த காரின் முன்வீல் டிரைவ் வேரயின்ட் 20-100 கி.மீ வேகத்தை வெறும் 8.8 நொடியில் பிக்கப் செய்துவிடும். ஆல்வீல் டிரைவ் வேரியன்ட் 9.0 நொடியில் பிக்கப் செய்யும். இந்த கார் அதிகபட்சம் 196 கி.மீ வேகத்தில் சீறி பாயும் திறன் கொண்டது. இந்த கார் இந்தியா வரும்போது ஸ்டிராங்க் ஹைபிரிட் வேரியன்டில் விற்பனைக்கு வந்தால் 30 கி.மீ மைலேஜ் தந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் குடும்பத்துடன் பயணிக்கும் ரக கார்களின் எண்ணிக்கை அதிகமாகி வரும் நிலையில் இந்த கார்களை வாங்க மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இ்நத போட்டியில் கியா நிறுவனமும் விரைவில் சேரப்போகிறது. இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








