ஒரு நாழிகூட காத்திருக்க தேவையில்ல.. மாருதி வேகன்ஆரை போல உயரமான உருவம் கொண்ட வேற காருக்கு புக்கிங் தொடங்கியது!
இந்தியாவிற்கான கியா (Kia) நிறுவனத்தின் மற்றுமொரு படைப்பாக சிரோஸ் (Syros) இருக்கின்றது. இந்த கார் மாடலுக்கான ப்ரீ-புக்கிங் பணிகளே தற்போது நாடு முழுவதும் தொடங்கி உள்ளன. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் இன்று (ஜனவரி 3) நள்ளிரவு 12.00 முதலே முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் தொடங்கிவிட்டன. இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. அதற்கு அந்த காரின் ஸ்டைல் மற்றும் சிறப்பம்சங்களே முக்கிய காரணமாக இருக்கின்றன.
மிக முக்கியமாக இந்தியர்களின் மிகவும் ஃபேவரிட்டான கார் மாடலான மாருதி வேகன்ஆர் (Maruti WagonR)-ஐ போல 'டால் பாய்' உருவத்திலேயே இந்த கார் தயார் செய்யப்பட்டிருக்கின்றது. ஆகையால், மிகவும் உயரமானவர்களும் தாராளமான ஹெட்ரூம் வசதி உடன் இந்த காரில் பயணிக்க முடியும் என தெரிகின்றது.

இந்த காரில் ஹெட்ரூம் மட்டுமல்ல தாராளமான லெக்ரூமும் கிடைக்கும் என நம்பப்படுகின்றது. இத்தகைய காருக்கே தற்போது ப்ரீ-புக்கிங் பணிகள் தொடங்கி உள்ளன. ஆன்லைன் மற்றும் ஆஃப்-லைன் என இரண்டின் வாயிலாகவும் முன்பதிவுகள் ஏற்கப்பட்டு வருகின்றன. ரூ. 25 ஆயிரம் முன் தொகையாக செலுத்தினால் போதும் காரை புக் செய்துவிடலாம்.
கியா நிறுவனம் இந்த காரை அதன் சொனெட்-க்கு மேல் இடத்திலேயும், செல்டோஸ் மாடலுக்கு கீழ் இடத்திலும் நிலை நிறுத்த இருக்கின்றது. இது ஓர் சப்-4 மீட்டர் எஸ்யூவி ரக கார் மாடலாகும். இந்த காரை சென்ற மாதமே கியா இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்துவிட்டது என்பது கவனிக்கத்தகுந்தது.
இதைத்தொடர்ந்து, விரைவில் இந்தியாவில் தொடங்க இருக்கும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ-விலும் வைத்து இந்த காரை காட்சிப்படுத்த கியா திட்டமிட்டு இருக்கின்றது. வருகின்ற 17 ஆம் தேதி அன்றே இந்த நிகழ்வு அரங்கேற இருக்கின்றது. இந்த நிகழ்வின்போது விலைகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. அதேவேளையில், பிப்ரவரி 1ஆம் தேதி அன்றும் இந்த காருக்கான பிரத்யேக நிகழ்வு இந்தியாவில் அரங்கேற இருக்கின்றது. அந்த நாளில் கட்டாயம் அனைத்து சிரோஸ் வேரியண்டுகளின் விலையும் அறிவிக்கப்படும் என நம்பப்படுகின்றது. டெலிவரி பணிகளும் அந்த மாத இறுதிக்குள்ளாகவே தொடங்கிவிடும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
கியா சிரோஸ் ஒட்டுமொத்தமாக இந்திய சந்தையில் ஆறு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. எச்டிகே (HTK), எச்டிகே ஓ (HTK O), எச்டிகே பிளஸ் (HTK Plus), எச்டிஎக்ஸ் (HTX), எச்டிஎக்ஸ் பிளஸ் (HTX Plus) மற்றும் எச்டிஎக்ஸ் பிளஸ் ஓ (HTX Plus O) ஆகியவையே அவை ஆகும்.
இதில் எச்டிகே என்பதே ஆரம்ப நிலை தேர்வாகும். இதற்கு ரூ. 9.5 லட்சம் அல்லது அதற்கும் குறைவான விலை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. கியா நிறுவனம் புதிய சிரோஸ் கார் மாடலில் வாடிக்கையாளர்களைக் கவருகின்ற விதமான பல்வேறு சிறப்பு அம்சங்களை வழங்கி இருக்கின்றது.
அந்தவகையில், அதற்கு மிகவும் கவர்ச்சியான தோற்றமே வழங்கப்பட்டு இருக்கின்றது. மிக முக்கியமாக ஐஸ் கட்டியை அடுக்கி வைத்ததை போல அமைப்புடைய ஹெட்லைட், மீன் பிடி முல் மாதிரியான டிஆர்எல், புதிய ஸ்டைலிலான கிரில் மற்றும் பம்பர் உள்ளிட்டவையே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதேபோல், இந்த கவர்ச்சி வேலைகள் காரின் பக்கவாட்டு மற்றும் பின்பக்கத்திற்கும் நீட்டிக்கப்பட்டு இருக்கின்றது. அந்தவகையில், மிகவும் அழகான வீல், உடல் நிறத்திலான பின் பக்கத்தைப் பார்க்க உதவும் கண்ணாடிகள், எல் வடிவ இன்டிகேட்டர் லைட் மற்றும் பெட்டி போன்ற பின் பக்கத்தையே சிரோஸ் கொண்டிருக்கின்றது.
எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆகிய இரண்டு ஆப்ஷன்களே வழங்கப்பட இருக்கின்றன. இதேபோல், அட்வான்ஸ்டு அம்சங்களையும் மிக தாராளமாக சிரோஸ் எஸ்யூவி கார் தன்னுள் தாங்கி இருக்கின்றது.
அந்தவகையில், மிக முக்கியமாக அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, விரைந்து குளிர்விக்கும் வசதிக் கொண்ட ஏசி சிஸ்டம், 2 ஸ்போக்குகளைக் கொண்ட ஸ்டியரிங் வீல், 12.3 அங்குல அளவுக் கொண்ட திரைகள் இரண்டு, டிஜிட்டல் ஏசி கன்ட்ரோல் பேனல், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹ்ரமேன் கர்டோன் சவுண்டு சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 64 வண்ணங்கள் கொண்ட ஆம்பியன்ட் லைட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கியா-வின் மற்ற தயாரிப்புகளுக்கு கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே சிரோஸ் எஸ்யூவிக்கும் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது. பெரிய மற்றும் அகலமான உருவம் காரணமாக இந்த காருக்கு பேராதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








