காரையே மறைக்கிற அளவுக்கு கூட்டமா நின்னு போட்டோ எடுத்துகிட்டாங்க.. அப்படி என்ன கார் மாடலுங்க அது?

மிகப் பெரிய பட்டாளமாக நின்று ஓர் கார் முன்னாடி சிலர் எடுத்துக் கொண்ட ஃபோட்டோ-வை பிரபல கார் உற்பத்தி நிறுவனமான கியா (Kia) தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்திருக்கின்றது. அது வேறு எந்த கார் மாடலும் இல்லைங்க, சமீபத்தில் நிறுவனம் இந்தியாவில் வெளியீடு செய்த சிரோஸ் (Syros) கார் மாடலே அது ஆகும். இது ஓர் எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் ஆகம். இந்த கார் மாடலுக்கு மிக சமீபத்திலேயே இந்தியாவில் புக்கிங் பணிகள் தொடங்கின.

கடந்த ஜனவரி 3 ஆம் தேதி நள்ளிரவு 12.00 மணி அளவிலேயே சிரோஸ் காருக்கு ப்ரீ-புக்கிங் ஸ்டார்ட் ஆகியது. ரூ. 25 ஆயிரம் முன் தொகையில் இந்த காருக்கான புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே காருக்கு முன்னால் மிகப் பெரிய பட்டாளமாக சிலர் நின்று எடுத்துக் கொண்ட போட்டோ வெளியாகி இருக்கின்றது.

Kia rolls out first syros suv

அவர்கள் வேறு யாரும் அல்ல கியா நிறுவனத்தின் கார் உற்பத்தி ஆலையில் பணியாற்றக் கூடிய ஊழியர்களே அவர்கள் ஆவர். சிரோஸ் கார் உற்பத்தியே தற்போது தொடங்கி இருக்கின்றது. அவர்கள் ஃபோட்டோ எடுத்து இருப்பது சிரோஸ் கார் மாடலின் முதல் யூனிட் ஆகும்.

அதாவது, விற்பனைக்காக வெளியேற்றப்படும் முதல் சிரோஸ் கார் மாடல் யூனிட்டே இதுவாகும். இதனால்தான் ஊழியர்கள் அனைவரும் இந்த காருக்கு முன்னால் நின்று புகைப்படத்தை எடுத்திருக்கின்றனர். இந்தியாவில் கியா சிரோஸ் கார் மாடலுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த காருக்கு புக்கிங் மிக அமோகமாகக் கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 3ஆம் தேதி இந்த காருக்கு ப்ரீ-புக்கிங் பணிகள் தொடங்கிய நிலையில் இப்போதே அதற்கு 10,258 புக்கிங் கிடைத்து விட்டதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இந்த புக்கிங் எண்ணிக்கை வரும் நாட்களில் இன்னும் பலமடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. விலைகள் அறிவிக்கும் முன்னரே இந்த அளவிற்கு சிரோஸ்க்கு புக்கிங் கிடைத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதன் விலைகள் பிப்ரவரி மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விபரங்கள் வெளியாகிய பின்னர் புக்கிங் மிக பெரிய அளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கியா நிறுவனத்தின் ஆந்திரா ஆலையிலேயே சிரோஸ் கார் மாடலின் உற்பத்தி பணிகள் தொடங்கி இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.

இந்த காருக்கு ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான விலையே நிர்ணயிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. கியா சிரோஸ் ஓர் டால் பாய் உருவம் கொண்ட எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இந்த காரை அலங்கரிக்கும் விதமாக தனித்துவமான அம்சங்கள் பல பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

அதில் மிக முக்கியமான ஒன்றாக இந்த காரின் முன் பக்க ஸ்டைலிங் இருக்கின்றது. ஐஸ் கட்டி வடிவிலான ஹெட்லைட், மீன் தூண்டில் போன்ற அமைப்புடை எல்இடி லைட் உள்ளிட்டவையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இது இந்த டால் பாய் காருக்கு தனித்துவமான லுக்கை வழங்கும் வகையில் இருக்கின்றது. இதில் மட்டுமல்ல சிறப்பம்சங்களை தாங்கி இருப்பதிலும் இந்த கார் மாடல் கை தேர்ந்ததாகக் காட்சியளிக்கின்றது.

அந்தவகையில், மிக முக்கியமான அம்சமாக சிரோஸ் காரில் லெவல் 2 அடாஸ் அம்சம் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் வாயிலாக முன் பக்க மோதலைத் தவிர்த்தல், ஒரே நேர்கோட்டில் பயணித்தல், நிறுத்துதல் மற்றும் செல்லும் வசதிக் கொண்ட ஸ்மார்ட் க்ரூஸ் கன்ட்ரோல், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா பிளைன்டு ஸ்பாட் வியூ மானிட்டர் வசதி உள்ளிட்டவற்றை பெற்றுக் கொள்ள முடியும்.

இவை மட்டுமல்ல இதுபோல மொத்தம் 16 தானியங்கி வசதிகளை சிரோஸ் கார் மாடலில் பெற்றுக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த சிறப்பு வசதிகளுடன் சேர்த்து 20 அட்வான்ஸ்டு பாதுகாப்பு அம்சங்களையும் இந்த காரில் கியா வழங்கி இருக்கின்றது. எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், 6 ஏர் பேக்குகள் மற்றும் வாகன ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட் அம்சம் உள்ளிட்டவற்றையும் இந்த காரில் பெற்றுக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த அதிநவீன சிறப்பு வசதிகளைத் தாங்கிய சிரோஸ் கார் மாடலின் உற்பத்தி பணிகளையே தற்போது கியா நிறுவனம் நாட்டில் தொடங்கி இருக்கின்றது. மேலும், இந்த காரை இன்று (ஜனவரி 17) தொடங்க இருக்கும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025)-லும் காட்சிப்படுத்த திட்டமிட்டு இருக்கின்றது, கியா நிறுவனம். இதன் வாயிலாக கூடுதலாக வாடிக்கையாளர்களை இந்த நிறுவனம் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, January 17, 2025, 5:00 [IST]
English summary
Kia rolls out first syros suv unit from its anantapur andhra pradesh plant
மேலும்... #kia motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+