பைக் மாதிரி மைலேஜ் தரும் காரா? கியா கிட்ட இப்படி ஒரு காரா?

கியா நிறுவனம் இந்தியாவில் முதன்முறையாக தனது ஹைபிரிட் காரை களம் இறக்க திட்டமிட்டுள்ளது. இந்த காரை இந்தியாவிலேயே தயாரிக்க திட்டமிட்டுள்ளது. மார்க்கெட்டில் விற்பனையாகி வரும் ஸ்கோடா கோடியாக் மற்றும் விரைவில் வரப்போகும் போக்ஸ்வேகன் வாகனம் டைரோன் ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த கார் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கியா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன அணிவகுப்பை விரிவுபடுத்தியது. சைரோஸ் இவி காரை அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு கொண்டு வருகிறது. இந்நிலையில் எலெக்ட்ரிக் காரை தொடர்ந்து ஹைபிரிட் காரிலும் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது. அதிக அளவிலான விற்பனையை பெறுவதற்காக இந்த முயற்சியை அனைவரும் கையில் எடுத்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் முதல் ஹைபிரிட் காரை நிறுவனம் 2026ம் ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

Kia First Hybrid Car

கியா நிறுவனம் முதல் முறையாக தனது ஹைபிரிட் காராக சொரண்டோ என்ற ஹைபிரிட் காரை இந்தியாவிற்கு களம் இறக்க திட்டமிட்டுள்ளது. இது ஒரு டீ செக்மென்ட் காராகும் என்ற காரை விற்பனை செய்து வந்தது. அதனால் அந்த கார் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.2020ம் ஆண்டு முதல் சர்வதேச அளவில் விற்பனையாகி வருகிறது. இதன் மாடல் கடந்த 2023ம் ஆண்டு தான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது.

கியா செரண்டோ காரின் வடிவமைப்பை பொறுத்தவரை அதன் இவி 9 காரை இன்ஸ்பயர் செய்து பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக வெற்றிகளான ஹெட்லைட் ஸ்டார் மாப் டிஆர்எல் அதிக உயரத்தில் செட் செய்யப்பட்ட பானட் பெரிய ரேடியேட்டர்கள் 20 இன்ச் கொண்ட அலய் வீல் உயரமாக பொருத்தப்பட்ட ரூப் ரெயில் உள்ளிட்ட அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

Kia First Hybrid Car

இந்த காரின் உட்பகுதியில் 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் மற்றும் 15.3 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது காவல் பேனலில் பொருத்தப்பட்டுள்ளது. இது போக இரண்டு வெட்டிக்கலான ஏர்வெட்டுகள் இரண்டு நீளவாக்கில் வழங்கப்பட்டுள்ளன. இதுபோக கிளைமேட் செட்டிங்ஸ் ஆப்ஷன்களும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. மூன்று ஸ்போக் கொண்ட ஸ்டியரிங் வீல் உட் கிரைன் மற்றும் மெட்டல் இன்சர்ட் கொண்ட டேஷ்போர்டுகள் 6 மற்றும் 7சீட்டர் வெர்ஷன் உட்பட்ட உட்புறக் கட்டமைப்பு ஆகிய இந்த காரில் உள்ளது.

சர்வதேச அளவில் விற்பனை ஆகி வரும் இந்த காரில் 1.6 லிட்டர் சார்ஜர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது இது 177 எச்பி பவரையும் 265 இன்னும் டிராக்டர்னையும் கொண்டுள்ளதாக இருக்கிறது இதுபோக இந்த காரில் 1.490 பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது சிக்ஸ் பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸி இதில் பொருத்தப்பட்டுள்ளது ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

0-100 கி.மீ வேகத்தில் 8.8 நொடியில் பிக்கப் செய்து விடுகிறது. ஆல் வீல் டிரைவர் சிஸ்டம் என்றால் 9 நொடி வரை எடுத்துக் கொள்கிறது. அதிகபட்சமாக 196 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது.
முழுவதுமாக எலெக்ட்ரிக் மோட்டார் பயணித்தால் 120 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. இந்த கார் டூவீலர் சிஸ்டத்தில் 15.2 கிலோ மீட்டர் மைலேஜ் சிஸ்டத்தில் 14.3 கிலோ மீட்டர் மைலேஜ் தருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் கார்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில் கியா நிறுவனம் ஹைபிரிட் கார்களை கொண்டு வருவது நிச்சயம் வரவேற்கத்தக்கது தான். ஆனால் சர்வதேச அளவில் இருக்கும் கார்களை போல இல்லாமல் இதில் அதிக மைலேஜ் தரும் வகையில் செட்டப்புகளை வடிவமைத்தால் நிச்சயம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும். 30 கிலோமீட்டர் மைலேஜ் கொடுத்தால் நிச்சயம் மார்க்கெட்டில் புரட்சி செய்யும் அளவுக்கு இந்த கார் விற்பனையாகும்.

More from DriveSpark

Article Published On: Sunday, December 28, 2025, 11:55 [IST]
English summary
Kia s first hybrid car launching in india in 2026
மேலும்... #kia motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X