தமிழ்நாட்டுக்கு ரொம்ப பக்கத்துல தான் இந்த கம்பெனி இருக்குது! இவ்வளவு காரை வித்துட்டாங்களா?
ஜூன் மாதம் துவங்கியுள்ள நிலையில் தற்போத வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தங்களது கடந்த மே மாத விற்பனை விபரங்களை வெளியிட்டு வருகின்றன. அதன்படி கியா நிறுவனம் தனது விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி அந்நிறுவனம் கடந்த மே மாதம் எவ்வளவு வானகங்களை விற்பனை செய்துள்ளது? இந்நிறுவனம் எவ்வளவு வளர்ச்சியை சந்தித்துள்ளது? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கியா நிறுவனம் கடந்த மே மாதம் மொத்தம் 22315 வாகனங்களை தற்போது விற்பனை செய்துள்ளது. இது அந்நிறுவனத்திற்கு 14.43 சதவீதம் அளவிற்கு வளர்ச்சியை கொண்டுள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 19500 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. தற்போது இந்த நிறுவனத்தின் புதிய காரான கியா கேரன்ஸ் கிளாவிஸ் காருக்கு டிமாண்ட் அதிகமாகியுள்ளது.

கியா நிறுவனம் தனது புதிய கேரன்ஸ் கிளாவிஸ் காருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் நன்மையை பெற முயற்சி செய்கிறது. குடும்பத்துடன் பயன்படுத்தவும், எதிர்கால தேவைகளை இப்பொழுதே பூர்த்தி செய்யும் வாகனமாக இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 5 மாதங்களாக அந்நிறுவனம் வளர்ச்சியை பெற்று வருகிறது.
கியா நிறுவனம் வரும் ஜூலை மாதம் புதிய வாகனம் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த புதிய காரில் டிசைன் மற்றும் தொழிற்நுட்பம் மட்டும் சிறப்பானதாக இருக்கப்போவதில்லை. மாறாக இதில் எதிர்கால வாகனங்களுக்கான புதிய அம்சங்கள் மற்றும் எதிர்கால பயண முறைகளை மனதில் வைத்து புதிய அம்சங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கியா நிறுவனத்தின் எஸ்யூவி எம்பிவி மற்றும் இவி கார்மக்கள் மத்தியில் சிறப்பாக விற்பனையாகி வருகிறது.இந்த கார்களை மக்கள் அதிகம் விரும்பி வாங்கி வருகின்றனர். இந்நிறுவனம் ஹூண்டாய் நிறுவனத்துடன் தனது தொழிற்நுட்பங்களை பகிர்ந்து கொள்கிறது. இந்நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு தான் இந்தியாவில் தனது ஆலையை அமைத்து விற்பனையை துவக்கியுள்ளது.
கியா நிறுவனத்தின் இந்தியா ஆலையில் ஆண்டிற்கு 3 லட்சம் வாகனங்கள் தற்போது தயாரிக்கப்படும் அளவிற்கு அதன் கொள்ளவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையிலிருந்து இதுவரை 15 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை இந்நிறுவனம் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. விரைவில் இந்த ஆலையின் கொள்ளவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிறுவனம் ஹூண்டாய் நிறுவனத்துடன் தொழிற்நுட்பம் பகிர்ந்து கொள்ளப்படுவதால் ஹூண்டாய் நிறுவனத்தின் தயாரிப்புகளும் இந்நிறுவனத்தி்ன தயாரிப்புகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பலர் ஹூண்டாய் வாகனத்திற்கு மாற்றாக கியா காரை பார்க்கின்றனர். இதனால் ஒரே விருப்பம் கொண்ட வாடிக்கையார்களுக்கு இரு நிறுவனங்களில் இருந்து தயாரிப்புகள் கிடைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியா நிறுவனத்தின் கார்கள் தற்போது மக்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்று வருகிறது. இந்நிறுவனத்தின் விற்பனை அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. தொடர்ந்து இந்நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் காரணமாக தொடர்ந்து இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் அதிகமாக விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் கார்களின் விற்பனை அதிகரித்தால் சாலையில் இந்த காரை அதிகம் காண முடியும். இந்த நிறுவனத்தின் கார்கள் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









