நம்ப முடியாத குறைவான விலையில் 2 எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கும் முன்னணி நிறுவனம்! இந்த ரேட்ல வரப்போகுதா!

2025ம் ஆண்டின் முதல் பாதி முடிவடைந்து, இரண்டாம் பாதியில் நாம் காலடி எடுத்து வைத்துள்ளோம். இந்த நேரத்தில், கார் நிறுவனங்களின் சேல்ஸ் ரிப்போர்ட்கள் (Sales Reports) தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. இந்த வரிசையில் கியா இந்தியா நிறுவனத்தின் நடப்பு 2025ம் ஆண்டின் முதல் பாதிக்கான சேல்ஸ் ரிப்போர்ட்டும் தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டின் முதல் பாதியில் (ஜனவரி-ஜூன்), கியா இந்தியா நிறுவனம் ஒட்டுமொத்தமாக 1,42,139 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டின் முதல் பாதியில், கியா இந்தியா நிறுவனம் ஒட்டுமொத்தமாக 1,26,137 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

Kia Syros

இது 12.70 சதவீத வளர்ச்சி ஆகும். கியா நிறுவனம் இந்திய சந்தையில் தொடர்ச்சியாக பல்வேறு புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து கொண்டே வருகிறது. தற்போதைய நிலையில் கியா நிறுவனம் இந்திய சந்தையில் கியா செல்டோஸ், கியா சொனெட், கியா சைரோஸ், கியா கேரன்ஸ், கியா கேரன்ஸ் க்ளாவிஸ், கியா கார்னிவல், கியா இவி6 மற்றும் கியா இவி9 என மொத்தம் 8 கார்களை விற்பனை செய்து வருகிறது.

இதில், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் கார் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆகும். கடந்த மே மாத இறுதியில்தான் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது ஐசி இன்ஜின் பொருத்தப்பட்ட கார் ஆகும். இதற்கு அடுத்தபடியாக கியா கேரன்ஸ் க்ளாவிஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வரவுள்ளது.

Kia Carens Clavis

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் கார், வரும் ஜூலை 15ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக கியா நிறுவனம் சைரோஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை இந்திய சந்தையில் விற்பனைக்கு களமிறக்கவுள்ளது.

இந்திய சாலைகளில் தற்போது கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரின் சோதனையோட்டம் தொடங்கியுள்ளது. அனேகமாக நடப்பு 2025ம் ஆண்டின் இறுதிக்குள்ளாகவே, கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 2 எலெக்ட்ரிக் கார்களின் வருகையானது, இந்திய சந்தையில் வரும் காலங்களில், கியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையை மேலும் உயர்த்தும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போது கியா நிறுவனம் விற்பனை செய்து வரும் 2 எலெக்ட்ரிக் கார்களும் விலை உயர்ந்தவை. இதில், கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 65.97 லட்ச ரூபாயாக இருக்கிறது. மறுபக்கம் கியா இவி9 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 1.30 கோடி ரூபாயாக உள்ளது.

இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். ஆனால் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி மற்றும் கியா சைரோஸ் இவி ஆகிய 2 எலெக்ட்ரிக் கார்களும் மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதில், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 16 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கம் கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 13 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த 2 எலெக்ட்ரிக் கார்களுக்கும், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, July 6, 2025, 21:48 [IST]
English summary
Kia sales report h1 2025 12 70 per cent growth
மேலும்... #kia motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+