அடி மாட்டு விலையில் புதிய எலெக்ட்ரிக் கார்! விஜய் கடைசி படத்தை விட இது மேலதான் எதிர்பார்ப்பு அதிகமா இருக்கு!
நடப்பு 2025ம் ஆண்டின் ஜூலை மாதம் முடிவடைந்து, ஆகஸ்ட் மாதத்திற்குள் நாம் நுழைந்துள்ளோம். இந்த நேரத்தில் ஜூலை மாதத்திற்கான வாகன நிறுவனங்களின் சேல்ஸ் ரிப்போர்ட்கள் (Sales reports) தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. இந்த வரிசையில் கியா (Kia) நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட்டும் வெளியாகியுள்ளது.
இதன்படி பார்த்தால் கியா நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் 22,135 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 20,507 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் கியா நிறுவனம் விற்பனையில் 8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

அதே சமயம் நடப்பு 2025ம் ஆண்டில் தற்போது வரை (ஜனவரி-ஜூலை) கியா நிறுவனம் ஒட்டுமொத்தமாக 1,63,439 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் கியா நிறுவனம் 1,46,644 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால் கியா நிறுவனம் விற்பனையில் 11.45 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.
இந்திய சந்தையில் கியா நிறுவனத்தின் கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து கொண்டிருப்பதை இந்த சேல்ஸ் ரிப்போர்ட் உறுதி செய்துள்ளது. குறிப்பாக கியா நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்த கியா கேரன்ஸ் க்ளாவிஸ் மற்றும் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி ஆகிய கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவிதான் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் கியா நிறுவனம் விற்பனை செய்து கொண்டிருக்கும் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் ஆகும். இந்திய சந்தையில் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 17.99 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.
இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். ஆனால் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை, கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரிடம் இருந்து, கியா சைரோஸ் இவி (Kia Syros EV) எலெக்ட்ரிக் கார், கூடிய விரைவில் தட்டி பறிக்கவுள்ளது.
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் கார் வரும் 2026ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை அனேகமாக வெறும் 14 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னதாக தற்போது விற்பனையில் உள்ள கியா செல்டோஸ் (Kia Seltos) காரின் புதிய தலைமுறை மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது. அனேகமாக நடப்பு 2025ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக கியா செல்டோஸ் காரின் புதிய தலைமுறை மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் கியா நிறுவனத்தின் விற்பனை ஏற்கனவே மிகவும் சிறப்பாகதான் இருந்து வருகிறது. இந்த சூழலில் அறிமுகம் செய்யப்படவுள்ள புதிய தலைமுறை கியா செல்டோஸ் மற்றும் கியா சைரோஸ் இவி ஆகிய 2 கார்களும், கியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையை மேலும் உயர்த்த உதவி செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








