ஆறே வருஷத்துல மார்க்கெட்டை பிடிச்சுட்டாங்க... களத்துல எறக்கற ஒவ்வொரு காரும் சகட்டு மேனிக்கு விக்குது...

தென் கொரியாவை சேர்ந்த பிரபலமான கார் நிறுவனங்களில் ஒன்று கியா (Kia). ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் ஒரு அங்கமாக கியா செயல்பட்டு வருகிறது. அதாவது ஹூண்டாய்தான், கியா நிறுவனத்தின் தாய் நிறுவனம் ஆகும். கடந்த 2019ம் ஆண்டு இந்திய சந்தையில் காலடி எடுத்து வைத்த கியா நிறுவனம், மிக குறுகிய காலத்திலேயே வாடிக்கையாளர்களின் மனதில் இடம் பிடித்து விட்டது. இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் கியா நிறுவனம் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது.

நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதமும் அது தொடர்ந்துள்ளது. கியா நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக 25,525 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் வெறும் 21,400 கார்களை மட்டுமே கியா நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

Kia Carens Side View

இதன் மூலம் விற்பனையில் 19.3 சதவீத வளர்ச்சியை கியா பதிவு செய்து அசத்தியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள கியா நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இது நமக்கு தெரிய வந்துள்ளது. கியா நிறுவனத்தின் இந்த வளர்ச்சியில் 4 கார்கள் முக்கிய பங்காற்றியுள்ளன.

அவை கியா சொனெட் (Kia Sonet), கியா செல்டோஸ் (Kia Seltos), கியா கேரன்ஸ் (Kia Carens) மற்றும் கியா சைரோஸ் (Kia Syros) ஆகியவை ஆகும். ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையில் இவற்றின் பங்களிப்பு முறையே 30 சதவீதம், 26 சதவீதம், 22 சதவீதம் மற்றும் 20 சதவீதம் ஆகும்.

Kia Carens

எஞ்சிய 2 சதவீத பங்களிப்பை கியா கார்னிவல் (Kia Carnival), கியா இவி6 (Kia EV6) மற்றும் கியா இவி9 (Kia EV9) ஆகிய 3 கார்களும் ஒன்றிணைந்து வழங்கியுள்ளன. இவை மூன்றுமே மிகவும் விலை உயர்ந்த கார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இந்த கார்களில் தற்போது புதுவரவாக களத்தில் இறங்கியிருப்பது கியா சைரோஸ் ஆகும். நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம்தான் கியா சைரோஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதைய நிலையில் கியா சைரோஸ் காரின் ஆரம்ப விலை 8.99 லட்ச ரூபாயாக உள்ளது.

அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 17.80 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். கியா சைரோஸ் காரில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக், 7 ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கியா நிறுவனம் மிக குறுகிய காலத்தில் இந்திய சந்தையில் வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது. இதற்கு அந்த நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து வரும் கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து கொண்டிருப்பதுதான் காரணம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 3, 2025, 23:25 [IST]
English summary
Kia sales report march 2025 19 per cent growth
மேலும்... #kia motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+