பொடி பையன்னு நெனச்சா பெரிய ஆளுங்களையே போட்டு பொளந்துட்டு இருக்கான்! இதுக்கு முன்னாடி இப்படி நடந்ததே இல்ல!

இந்திய சந்தையில் மிக குறுகிய காலத்திலேயே முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றாக மாறியுள்ளது கியா (Kia). காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ள கியா இந்தியா நிறுவனத்தின் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட்டே (Sales Report) இதற்கு சாட்சி.

இதன்படி பார்த்தால் கியா இந்தியா நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒட்டுமொத்தமாக 29,556 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதுதான் கியா இந்தியா நிறுவனத்தின் அதிகபட்ச மாதாந்திர விற்பனை எண்ணிக்கை ஆகும். இதற்கு முன்பு வேறு எந்தவொரு மாதத்திலும் இவ்வளவு அதிகமான கார்களை கியா இந்தியா நிறுவனம் விற்பனை செய்ததில்லை.

Kia Car Delivery

கியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் காரை (கியா செல்டோஸ் எஸ்யூவி) கடந்த 2019ம் ஆண்டுதான் அறிமுகம் செய்தது. சுமார் 6 வருடங்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில், மிகப்பெரிய விற்பனை எண்ணிக்கையை கியா இந்தியா நிறுவனம் பதிவு செய்ய தொடங்கியுள்ளது.

முன்னதாக கியா இந்தியா நிறுவனம் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒட்டுமொத்தமாக வெறும் 22,735 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 29,556 ஆக உயர்ந்துள்ள நிலையில், 6,821 கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் கியா இந்தியா நிறுவனம் விற்பனையில் 30 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

Kia Carens Clavis

கியா இந்தியா நிறுவனத்தின் இந்த பிரம்மாண்டமான சாதனைக்கு 3 கார்கள்தான் மிகவும் முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. அவை கியா சொனெட் (Kia Sonet), கியா கேரன்ஸ் க்ளாவிஸ் (Kia Carens Clavis) மற்றும் கியா செல்டோஸ் (Kia Seltos) ஆகியவை ஆகும்.

நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12,745 கியா சொனெட் கார்களும், 8,779 கியா கேரன்ஸ் க்ளாவிஸ் கார்களும், 7,130 கியா செல்டோஸ் கார்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் காரானது, ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் என 2 வெர்ஷன்களில் கிடைக்கிறது. நாங்கள் இங்கே கூறியிருப்பது, இந்த 2 வெர்ஷன்களின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை ஆகும்.

கியா சொனெட், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய 3 கார்களும் ஒருங்கிணைந்து, 28,654 யூனிட்கள் என்ற விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து விட்டன. எஞ்சிய கார்களான கியா சைரோஸ் (Kia Syros), கியா கார்னிவல் (Kia Carnival), கியா இவி6 (Kia EV6) மற்றும் கியா இவி9 (Kia EV9) ஆகிய கார்கள் எல்லாம் ஒருங்கிணைந்து 902 யூனிட்கள் என்ற விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளன.

இதன் மூலமாகவே நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபரில் கியா இந்தியா நிறுவனம் 29,556 என்ற ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்திய சந்தையின் முன்னணி கார் நிறுவனங்களான மாருதி சுஸுகி (Maruti Suzuki), டாடா மோட்டார்ஸ் (Tata Motors), மஹிந்திரா (Mahindra), ஹூண்டாய் (Hyundai) மற்றும் டொயோட்டா (Toyota) போன்ற நிறுவனங்களுக்கு, மிகப்பெரிய போட்டி நிறுவனமாக கியா மாறியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் கியா நிறுவனம் விற்பனை செய்யும் கார்கள், வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகின்றன. இதன் காரணமாகவே கியா நிறுவனம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 1, 2025, 17:56 [IST]
English summary
Kia sales report october 2025 30 per cent growth
மேலும்... #kia motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+