மாருதி, டாடா போன்ற ஜாம்பவான்களை அலற விடும் கத்துக்குட்டி! இப்பவே இப்படினா இனி போக போக என்னலாம் நடக்க போகுதோ!
இந்திய சந்தையில் மிக குறுகிய காலத்தில் வேகமாக பிரபலமடைந்த கார் நிறுவனங்களில் ஒன்று கியா (Kia). கடந்த 2019ம் ஆண்டுதான் கியா நிறுவனம் முதன் முதலில் இந்திய சந்தையில் காலடி எடுத்து வைத்தது. கியா நிறுவனம் இந்திய சந்தையில் நுழைந்து, கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் மட்டுமே ஆகின்றன. ஆனால் அதற்குள்ளாகவே கியா நிறுவனம் மிகப்பெரிய எண்ணிக்கையில் இங்கு கார்களை விற்பனை செய்கிறது.
இதற்கு நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதமும் விதிவிலக்கு அல்ல. கியா இந்தியா நிறுவனத்தின் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் இடி ஆட்டோ தளத்தில் வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், கியா இந்தியா நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22,700 கார்களை இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்துள்ளது.

ஆனால் அதற்கு முந்தைய ஆகஸ்ட் மாதம், கியா இந்தியா நிறுவனம் இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் வெறும் 19,608 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டில், கியா இந்தியா நிறுவனம் 15.8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.
மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டை போலவே, நடப்பு 2025ம் ஆண்டின் தற்போதைய மாதம் வரையிலான ஒப்பீட்டிலும் கூட, கியா இந்தியா நிறுவனம் வளர்ச்சியைதான் பதிவு செய்துள்ளது. அதாவது நடப்பு 2025ம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் (ஜனவரி - செப்டம்பர்), கியா இந்தியா நிறுவனம் 2,06,582 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

ஆனால் கடந்த 2024ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் (ஜனவரி - செப்டம்பர்), கியா இந்தியா நிறுவனம் வெறும் 1,92,690 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால் கியா இந்தியா நிறுவனம் 7.20 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.
இந்தியாவில் தற்போது கார்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கார்களின் விலை வெகுவாக குறைந்துள்ளது. இதற்கு கியா கார்களும் விதிவிலக்கு அல்ல. மற்ற பெரும்பாலான நிறுவனங்களின் கார்களை போலவே, கியா கார்களின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக வரும் மாதங்களில், கியா இந்தியா நிறுவனம் விற்பனையில் இன்னும் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி (Maruti Suzuki) மற்றும் டாடா (Tata) போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக இந்திய சந்தையில் கியா நிறுவனம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. கியா நிறுவனம் கூடிய விரைவில் புதிய எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அது கியா சைரோஸ் (Kia Syros) காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும்.
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதால், கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரின் வருகைக்கு பின்னர், கியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








