பொங்கலுக்கு கார் வாங்குற பிளான் இருக்குதா? இப்பவே இதை பண்ணுங்க!
கியா நிறுவனம் தனது புதிய செல்டோஸ் காரை காரை வெளியிட்டுள்ளது. இந்த காரின் அறிமுகம், புக்கிங், டெலிவரி, மற்றும் காரில் உள்ள முக்கியமான அம்சங்கள் மற்றும் அதன் விபரங்கள் குறித்த விரிவான தகவல்கள் மற்றும் பிற விபரங்களை காணலாம் வாருங்கள்.
கியா நிறுவனம் தனது புதிய செலடோஸ் காரை வெளியிட்டுள்ளைத. இந்த காருக்கான புக்கிங் தற்போது துவங்கப்பட்டுள்ளன. வெறும் ரூ25,000 செலுத்தி இந்தகாரை முன்பதிவு செய்து கொள்ள முடியும். இந்த காரக்கான விலை வரும் ஜனவரி 2ம் தேதி காரின் அதிகாரப்பூர்வ அறிமுக நிகழ்வில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த காரின் டெலிவரி அடுத்த மாத மத்தியில் நடக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்த கார் 5 சீட்டர் கொண்ட ஸ்டிராங்கான ரோடு பிரெசென்ஸ் கொண்ட வடிவமைப்பில் உள்ளது. இந்த காரில் 4460 மிமீ நீளம், 1830 மிமீ அகலம், 2690 மிமீ வீல் பேஸ் கொண்டதாக இருக்கிறது. முந்தைய மாடலை விட சற்று நீளம் அதிகமாகவும் பெரிய வீல் பேஸ் உடனும் வருகிறது. இது போக அகலம் உயரமும் சற்று அதிகமாகியுள்ளது.
இந்த காரில் புதிய எல்இடி புரொஜெக்ஷன் ஹெட்லைட்டுகள், டைனமிக் வெல்கம் லைட், ஸ்டார் மேட் எல்இடி டிஆர்எல், மறு வடிவமைப்பு செய்யப்பட்ட ஃபாக் லைட்டுகள், கனெக்டெட் எல்இடி லைட்டுகள், ஆட்டோமெட்டிக் ஸ்மார்ட் டோர் ஹேண்டில்கள், ஸ்போர்ட்டி கிரிஸ்டர் கட் 18 இன்ச் டுயல் டோன் அலாய் வீல்கள், நியான் பெயிண்ட்டட் பிரேக் கேலிபர்கள், இன்டர்கிரேட்டட் ஸ்பாய்லர்கள், ஸ்கிட் பிளேட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது.

இந்த காரில் இரண்டு டோன் கொண்ட கருப்பு வெள்ளை தீம் கொண்ட லெதர் சீட்டுகள், பிரிமியம் டோனில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 30 இன்ச் பானரோமிக் டிஸ்பிளே பேனல் வழங்கப்பட்டுள்ளது. இதல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் 10 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய சீட்டுகள், வாகனத்திலிருந்து இறங்கும் போதும், ஏறும் போது அதற்கு ஏற்றார் போல சீட் அட்ஜெஸ்ட் மென்ட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
இந்த காரில் முன்பக்கம் வென்டிலேட்டட் சீட்டுகள், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர்கள்கள், போஸ் 8 ஸ்பீக்கம் சவுண்ட் சிஸ்டம், 64 கலர் ஆம்பியன்ஸ் லைட்டிங், சைன் ஷேடு கர்டன்கள், ஸ்பிளிட் ரிக்லைன் சீட்டுகள், டுயல் டைப் சி போர்ட்கள், டுயல் பேன் பானரோமிக் சன்ரூஃப், ஸ்மார்ட் கீ அன்லாக்கிங், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, கியா கனெக்ட் 2.0 சூட்,

இந்த காிரல் பாதுகாப்பு அம்சங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ரோல் ஓவர் சென்சார், பின்பக்க பயணிகள் அலர்ட், லெவல் 2 அடாஸ் சூட், 21 ஆட்டோமெட்டிக் ஃபங்சன்கள், 360 டிகிரி கேமரா சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
இந்த காரில் 1.5 லி நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல்இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளுது. இது 115 பிஎஸ் பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இது போக 1.5லி டிஜிடிஐ டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இருக்கிறது. இது 160 பிஎஸ் பவரையும் 253 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1.5லி சிஆர்டிஐ விஜிடி டீசல் இன்ஜின் 116 பிஎஸ் பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். இதில் மேனுவல் கியர் பாக்றா், ஐஎம்டி, சிவிடி, டுயல் கிளட்ச், டார்க் கன்வெர்டர் ஆகிய கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் செல்டோனஸ் காருக்கு நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில் இந்த கார் நிச்சயம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெரும் என எதிர்பார்க்கலாம். 2026ம் ஆண்டு புதிய கார் வாங்கும் ஆர்வர்த்தில் இருந்தால் நிச்சயம் உங்களுக்கு இந்த கார் நல்லதேர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









