மாருதி பொழப்புல மண் அள்ளி போடணும்றதுக்குனே இந்த டெக்னாலஜியோட காரை கொண்டு வராங்க.. 2026க்குள்ள இது நடக்கபோது!

மாருதி (Maruti) நிறுவனத்தின் பொழப்பில் மட்டுமல்ல டொயோட்டா (Toyota) நிறுவனத்தின் பொழப்பிலும் மண்ணை அள்ளி போடும் பணியில் பிரபல கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று களமிறங்கி இருப்பது தெரிய வந்திருக்கின்றது. தென்கொரியாவைச் சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனமான கியா (Kia)-வே அது ஆகும். இந்த நிறுவனமே தன்னுடைய புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றான செல்டோஸ் (Seltos)-இல் ஹைபிரிட் (Hybrid) அம்சத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கின்றது. இதன் வருகை எப்போது அரங்கேற இருக்கின்றது என்பது பற்றிய விபரங்களே இப்போது வெளியாகி உள்ளன.

வருகின்ற 2026 ஆம் ஆண்டிலேயே கியா செல்டோஸ் ஹைபிரிட் அறிமுகமாக உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற கியாவின் முதலீட்டாளர்கள் மாநாட்டின் போதே இந்த தகவல் உறுதி செய்யப்பட்டது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த காரின் வருகை எப்படி மாருதி மற்றும் டொயோட்டா நிறுவனத்தின் கார்களுக்கு ஆபத்தாக மாறும் என நீங்கள் கேட்கலாம்.

Kia seltos hybrid suv launch confirm

இதற்கான விளக்கம் இதோ.. இப்போதைய நிலவரப்படி ஹைபிரிட் தொழில்நுட்பத்தை மிக தாராளமாக கார் உற்பத்தியாளர்களாக மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா உள்ளிட்டோர் இருக்கின்றனர். இதுமாதிரியான நிறுவனங்களுக்கு போட்டி அளிக்கும் நோக்கிலேயே கியா அதன் புகழ்பெற்ற செல்டோஸ் கார் மாடலில் ஹைபிரிட் அம்சத்தை வழங்க இருக்கின்றது.

கியா நிறுவனம் 2030 ஆம் ஆண்டிற்குள்ளாக 2.33 மில்லியன் மின்சார மயமாக்கப்பட்ட வாகனங்களை விற்பனைச் செய்ய திட்டமிட்டு இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே தன்னுடைய செல்டோஸ் காரை அது ஹைபிரிட் வசதிக் கொண்டதாக மாற்ற இருக்கின்றது. இது உலக சந்தையில் புதிய தலைமுறை செல்டோஸாக விற்பனைக்கு வர இருக்கின்றது.

Seltos front view

இந்தியாவிலும் இந்த புதிய தலைமுறை செல்டோஸ் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஏனெனில், இங்கு அந்த காருக்கு வரவேற்பு மிக அதிகம். இதை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே புதிய தலைமுறை வெர்ஷனை அது விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், இதுபற்றிய இன்னும் எந்தவொரு அதிகாரப்பூர்வ வார்த்தைகளும் வெளியாகவில்லை. இப்போதைக்கு, உலக அளவில் வெளியீடு செய்யப்பட இருக்கும் ஆண்டு பற்றிய விபரம் மட்டுமே வெளியிடப்பட்டு இருக்கின்றது. அதேவேளையில், இந்த கார் பற்றிய குறிப்பிட்ட சில விபரங்கள் அரசல்புரசலாக வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.

Kia seltos side look

குறிப்பு: படங்கள் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை. அந்தவகையில், 1.6 லிட்டர் பெட்ரோல் மோட்டாருடனேயே ஹைபிரிட் தொழில்நுட்பம் வழங்கப்பட இருப்பதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹூண்டாய் கோனா ஹைபிரிட் கார் மாடலில் இதே வசதியே வழங்கப்படுகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. 141 குதிரை திறனை வெளியேற்றும் வசதிக் கொண்டதே இந்த மோட்டார் ஆகும்.

இதே திறனையே செல்டோஸ் ஹைபிரிட்-ம் வெளியேற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மோட்டார் மட்டுமின்றி இன்னும் சில மோட்டார் ஆப்ஷன்களுடனும் அது உலக சந்தையில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்தியாவிற்கான கியா செல்டோஸ் ஹைபிரிட் இவற்றில் இருந்து சற்றே மாறுபட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் இந்தியர்களுக்கு ஏற்ப மாற்றங்களையும், வசதிகளைத் தாங்கியதாகவும் இந்தியாவிற்கான செல்டோஸ் ஹைபிரிட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுபற்றிய முழுமையான விபரங்கள் விரைவிலேயே வெளியாகும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். குறிப்பாக, இந்த ஆண்டு இறுதிக்குள் அது வெளியாகிவிடும் என்பதே அனைவரின் யூகிப்பாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, April 14, 2025, 13:41 [IST]
English summary
Kia seltos hybrid suv launch confirmed for 2026 with focus on electrification
மேலும்... #kia motors
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X