எத்தன பேர உள்ளே ஏத்துனாலும் இடம் மிச்சம் இருக்கும்... ஃபேமலி-கார் என்றால் இப்படி இருக்கனும்!!

கியா சிரோஸ் (Kia Syros), 2025 ஆட்டோ எக்ஸ்போ (2025 Auto Expo) கண்காட்சியில் எதிர்பார்க்கப்பட்ட மிகவும் முக்கியமான கார்களுள் ஒன்று. ஏனெனில் அந்த அளவிற்கு விலை குறைவான எஸ்யூவி காராக சிரோஸை கியா நிறுவனம் இந்தியாவிற்கு கொண்டுவருகிறது. இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தில் உள்ள கியாவின் தொழிற்சாலையில் சிரோஸ் கார்களின் உற்பத்தி சமீபத்தில்தான் துவங்கப்பட்டது. இந்த நிலையில், ஆட்டோ எக்ஸ்போவிலும் இந்த புதிய கியா கார் காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ளது. சிரோஸ் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

2019ஆம் ஆண்டில் செல்டோஸ் கார் மூலமாக இந்திய மார்க்கெட்டில் நுழைந்த கியா ஆனது ஹூண்டாயை போன்று ஓர் பிரபலமான தென்கொரிய கார் நிறுவனமாகும். கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு விதமான கார்களை அறிமுகம் செய்திருக்கும் கியா நிறுவனம், அடுத்ததாக சிரோஸ் என்கிற பெயரில் புதியதொரு எஸ்யூவி காரை மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டுவருகிறது.

kia showcased syros suv car

இன்னும் சொல்லப்போனால், சிரோஸ் ஆனது முழுக்க முழுக்க இந்தியாவிற்கென கியா உருவாக்கியுள்ள கார் ஆகும். அதனால்தான், கடந்த 2024 டிசம்பர் மாதத்தில் சிரோஸ் காரை பற்றிய விபரங்கள் இந்தியாவில் இருந்துதான் உலகளவில் வெளியீடு செய்யப்பட்டன. அப்போதே தெரிந்துவிட்டது, கியா சிரோஸ் கார் முதலாவதாக இந்தியாவில்தான் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பது.

அதன்படி, வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ள நிலையில், அதற்கு முன்னதாக நாடு முழுவதும் கவனத்தை பெறும் பொருட்டு கியா சிரோஸ் கார் ஆட்டோ எக்ஸ்போ 2025 கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய கியா எஸ்யூவி காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே ரூ.25,000 என்கிற டோக்கன் தொகை உடன் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது.

kia showcased syros suv car

கியாவில் இருந்து ஏற்கனவே சப்-4 மீட்டர் எஸ்யூவி காராக சொனெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், சொனெட்டை காட்டிலும் சிரோஸ் அளவில் சற்று பெரியதாகும். அதேநேரம், கியா செல்டோஸ் காரை காட்டிலும் சிறியதாகும். சிரோஸ் காரின் நீளம் 4 மீட்டருக்கு வெறும் 5 மிமீ மட்டுமே குறைவாகும். இந்த புதிய கியா காரின் அகலம் 1800மிமீ மற்றும் உயரம் 1665மிமீ ஆகும்.

காரின் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 2550மிமீ ஆக உள்ளது. சொனெட்டை காட்டிலும் இது 50மிமீ அதிகமாகும். இதன் மூலமாக காருக்குள் கூடுதல் இடவசதி கிடைக்கிறது. பின் இருக்கை பயணிகளுக்கு கூடுதல் சவுகரியமான பயணத்தை டார்க்கெட் செய்து சிரோஸ் காரை கியா உருவாக்கி இருப்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. சிரோஸ் காரின் பின்பக்கத்தில் 465 லிட்டர்கள் கொள்ளளவில் பொருட்களை வைப்பதற்கான இடவசதி வழங்கப்பட்டுள்ளது.

kia showcased syros suv car

வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள கியா இவி9 மற்றும் இவி3 கார்களை சிரோஸ் பெரிதும் அடிப்படையாக கொண்டுள்ளது. 17-இன்ச்சில் அலாய் சக்கரங்களை கொண்ட இந்த காரினுள் 12.3 இன்ச்சில் டிஸ்பிளேவும், 5-இன்ச்சில் HVAC திரையும் வழங்கப்படுகிறது. சிரோஸ் கார் 1.0 லிட்டர் டிஜிடிஐ டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் சிஆர்டிஐ டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சிரோஸ் கார் நல்ல வரவேற்பை பெறும் என கியா நிறுவனம் நம்பிக் கொண்டிருக்கிறது. வித்தியாசமான பெட்டகம் வடிவில் தோற்றத்தை கொண்டிருப்பதால், இந்த கார் மக்களின் கவனத்தை பெற பிரகாசமான வாய்ப்புள்ளது. மஹிந்திரா ஸ்கார்பியோ போன்றதான பாக்ஸி-ஸ்டைல் காரை ஓட்டிப் பார்க்க ரெடியாகுங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 22, 2025, 19:29 [IST]
English summary
Kia showcased syros suv car at auto expo 2025
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X