கியாவோட எதிர்கால காரின் கேபின் இப்படிதான் இருக்க போகுதா!.. விமானத்துல போகுற ஃபீல் நிச்சயமாக கிடைக்கும் போலையே!

இந்தியர்களின் மனம் கவர்ந்த கார் பிராண்டாக கியா (Kia) நிறுவனம் மாறியிருக்கின்றது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அதிக ஆடம்பர அம்சங்களுக்கும், கவர்ச்சியான தோற்றத்திற்கும் பெயர்போனதாக இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் இருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே கியா நிறுவனம் தன்னுடைய வரும் கால கார் மாடல் ஒன்றிற்காக தயார் செய்திருக்கும் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த கேபினை வெளியீடு செய்திருக்கின்றது. மிலன் டிசைன் வீக் 2025 (Milan Design Week 2025) வாயிலாகவே இந்த கேபினை அது வெளியீடு செய்துள்ளது.

விலை உயர்ந்த கார்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இந்த கேபினை கியா நிறுவனம் தயார் செய்திருக்கின்றது. ஆனால், இந்த கேபின் பிரிவு 'பி' வகை எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் (B Segment Electric SUV Car)-க்கானது என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

Kia reveals concept ev2 interior design

இதன் வாயிலாக இந்த பிரீமியம் அம்சங்கள் நிறைந்த கேபின் ஓர் நடுநிலையான விலையில் விற்பனைக்கு வர இருக்கும் வாகனத்திற்கானது என்பது தெரிய வந்திருக்கின்றது. கான்செப்ட் இவி2 (Concept EV2) என்கிற பெயரிலேயே இந்த கேபினை நிறுவனம் காட்சிப்படுத்தி இருக்கின்றது. எனவே, கியா இவி2 என்கிற பெயரிலேயே இந்த கேபினைக் கொண்ட எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

'பிக்னிக் -இன்- சிட்டி' (Picnic In The City) என்கிற கான்செப்டிலேயே இந்த கேபினை கியா நிறுவனம் தயார் செய்திருக்கின்றது. அதாவது, நகரங்களுக்கான காராக இதை தயார் செய்திருப்பதாகவும், அவ்வாறு நகரங்களில் பயணிக்கும் போது அந்த ஒவ்வொரு பயணமும் சுற்றுலா செல்வதைப் போல இருக்கும் என்பதையே இதன் வாயிலாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

Kia concept ev2 seat

அதுமட்டுமல்ல விமானங்களின் கேபினுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இந்த கேபினை அது தயார் செய்திருக்கின்றது. ஆகையால் இந்த காரில் பயணிக்கும்போது விமானத்தில் பயணிக்கும் ஃபீல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, இதன் இரண்டாவது வரிசை இருக்கைகளை முழுமையாக மடித்து வைத்துக் கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. ஆகையால், ரெண்டே பேர் பயணிக்கும்போது மாதக் கணக்கில் தேவைப்படும் லக்கேஜ்களை பின்னால் ஏற்றிக் கொண்டு செல்வதற்கான வசதி இதில் இருக்கும் என தெரிகின்றது.

இதுமட்டுமல்ல ஸ்பீக்கர்களைக் கொண்ட ஹெட்ரெஸ்ட், நீடித்து உழைக்கும் மெட்டீரியல், கழட்டும் வசதிக் கொண்ட இருக்கை குஷன்கள் உள்ளிட்ட அம்சங்களையும் இந்த கேபின் கொண்டிருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. இதுமட்டுமல்ல, இந்த காரின் டேஷ்போர்டு மற்றும் கதவுகளில் மரம் மற்றும் மறுசுழற்சி செய்த துணிகளால் தயார் செய்யப்பட்டவை என கூறப்படுகின்றது.

எனவே மிகப் பெரிய அளவில் இந்த காரில் பிளாஸ்டிக் பேனல்களின் தேவைக் குறைக்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், இது ஓர் சுற்றுச் சூழலுக்கு உகந்த வாகனமாக இருக்கும் என்பது தெளிவாக தெரிகின்றது. இதுமட்டுமல்ல இன்னும் பல்வேறு சிறப்புகளைத் தாங்கியதாக இது இருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

குறிப்பாக, அட்வான்ஸ்டு தொழில்நுட்ப அம்சங்களை இது இன்னும் மிக அதிக தாராளமாகக் கொண்டிருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், தன்னாட்சி வசதி இதில் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுபற்றிய அதிகாரப்பூர்வ வார்த்தைகள் எதுவும் வெளியாகவில்லை. விரைவில் அவைபற்றி முழுமையான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என நாம் எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்போது கியா நிறுவனம் காட்சிப்படுத்தி இருக்கும் இந்த கார் மாடல் எப்போது விற்பனைக்கு வரும் என்கிற விபரம் வெளியாகவில்லை. இதேபோல், இந்த கார் இந்தியாவிற்கு வருமா என்பது தெரியவில்லை. இப்போதைய நிலவரப்படி கியா நிறுவனம் பிரீமியம் இ-கார்களை மட்டுமே நாட்டில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஆகையால், எதிர்காலத்தில் இப்போது வெளியீடு செய்யப்பட்டு இருக்கும் கார் மற்றும் பல தயாரிப்புகளை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, April 11, 2025, 14:30 [IST]
English summary
Kia showcases innovative eco friendly interior design for concept ev2 at milan design week 2025
மேலும்... #kia #kia motors #electric car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+