டொயோட்டாவுக்கு இப்பவே நடுக்கம் எடுத்திருக்கும்! இந்த கார் மட்டும் வந்துச்சுனா ஃபார்ச்சூனர் காலி!
இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner). இது ஃபுல்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும். ஆனால் டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு மிக கடுமையான சவாலை அளிக்க கூடிய வகையிலான ஃபுல்-சைஸ் எஸ்யூவி ரக கார்கள் இந்திய சந்தையில் இல்லை.
இந்திய சந்தையில் எம்ஜி க்ளோஸ்ட்டர் (MG Gloster) போன்ற ஃபுல்-சைஸ் எஸ்யூவி ரக கார்கள் விற்பனைக்கு கிடைத்து கொண்டுதான் உள்ளன. ஆனால் இந்திய சந்தையின் ஃபுல்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டின் கிங் என்றால், அது சந்தேகத்திற்கு இடமே இல்லாமல் டொயோட்டா ஃபார்ச்சூனர்தான் என கூற முடியும்.

ஆனால் கூடிய விரைவில் டொயோட்டா ஃபார்ச்சூனரின் இந்த ஆதிக்கத்திற்கு கியா சொரெண்டோ (Kia Sorento) முடிவு கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஒரு ஃபுல்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என மிக நீண்ட காலமாகவே எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், இந்திய சாலைகளில் தற்போது முதல் முறையாக கியா சொரெண்டோ காரின் சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது. இது குறித்து மோட்டார்ஆக்டேன் செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படும் கியா சொரெண்டோ காரில், 1.6 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட், 2.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் என ஒட்டுமொத்தமாக 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன.

ஆனால் இந்த 3 இன்ஜின் ஆப்ஷன்களுமே இந்திய சந்தையிலும் வழங்கப்படுமா? என்பது உறுதியாக தெரியவில்லை. அதே நேரத்தில் வசதிகளை பொறுத்தவரையில், 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) போன்ற வசதிகள் எல்லாம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவை எல்லாம் தவிர, கனெக்டட் கார் தொழில்நுட்பம், பனரோமிக் சன்ரூஃப், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் மற்றும் மல்டி ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் போன்ற வசதிகளையும் இந்திய சந்தைக்கான கியா சொரெண்டோ காரில் நம்மால் உறுதியாக எதிர்பார்க்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கியா சொரெண்டோ, வரும் 2026ம் ஆண்டு (அடுத்த ஆண்டு) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது 3 வரிசை இருக்கை அமைப்பை கொண்ட ஒரு கார் ஆகும். எனவே 7 பேர் பயணம் செய்ய கூடியதாக இருக்கும்.
டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் நேரடி போட்டி மாடல் என்பதால், இந்திய சந்தையில் கியா சொரெண்டோ காரின் ஆரம்ப விலை அனேகமாக 30 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 45 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம். இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.


Click it and Unblock the Notifications








