மாருதி தயாரிப்புகூட இல்ல. முதல் மாசத்துலேயே 5,546 யூனிட்டுகள் விற்பனையான கார்.. அதிக விற்பனைக்கு காரணம் இதுவா?

மாருதி தயாரிப்பு அல்லாத கார் மாடல் ஒன்று விற்பனைக்கு வந்த முதல் மாதத்திலேயே மிகப் பெரிய அளவில் விற்பனையாகி இருக்கின்றது. கியா (Kia) நிறுவனம் இந்தியாவின் எஸ்யூவி கார் பிரிவை அலங்கரிக்கும் விதமாக சமீபத்தில் சிரோஸ் (Syros) எனும் கார் மாடலை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது ஓர் 'டால் பாய்' உருவ அமைப்பைக் கொண்ட காம்பேக்ட் எஸ்யூவி (Compact SUV) ரக கார் மாடல் ஆகும். இந்த கார் மாடலே இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல்களில் ஒன்றாக மாற தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அது விற்பனைக்கு வந்த முதல் மாதத்திலே 5,546 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த அளவிற்கு மிக அதிக எண்ணிக்கையில் இந்த கார் விற்பனையாகுவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. முதல் ஒன்று அதன் விலை ஆகும். கியா நிறுவனம் சிரோஸ் கார் மாடலுக்கு ரூ. 8.99 லட்சம் என்கிற மிகக் குறைவான விலையே நிர்ணயம் செய்திருக்கின்றது.

Kia syros achieves 5 500 sales

இது வெறும் ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த விலை மட்டுமல்ல சிரோஸ் காரின் தனித்துவமான ஸ்டைல் மற்றும் சிறப்பம்சங்களும் அதன் அதீத வரவேற்பிற்கு பின்னால் உள்ள மற்றொரு காரணங்களாக உள்ளன. அந்தவகையில், டால் பாய் உருவ அமைப்பு இருக்கின்றது. அதிக உயரமானவர்களும் சௌகரியமாக அமர்ந்து பயணிக்க இது உதவியாக இருக்கின்றது.

இத்துடன், பின்னிருக்கையாளர்களும் சௌகரியமாக அமர்ந்து பயணிக்க வேண்டும் என்பதற்காக காற்றோட்டத்தை உறுதிப்படுத்தும் வசதிக் கொண்ட இருக்கைகளை சிரோஸ் காரில் கியா வழங்குகின்றது. அத்துடன், அந்த இருக்கையை லேசாக அட்ஜெஸ்ட்டும் செய்துக் கொள்ள முடியும். ஆகையால், லெக்ரூம்-க்கு சிறிதும் இந்த காரில் குறைச்சல் இருக்காது.

இதேபோல், இட வசதியிலும் இந்த கார் மிக சிறந்ததாக இருக்கும். சமீபத்தில் இந்த காரை நாங்கள் ரைடு ரிவியூ செய்து பார்த்தோம். அதன் வாயிலாகவும் நாங்கள் சிரோஸின் இந்த வசதியை உறுதிப்படுத்திக் கொண்டோம். இந்த மாதிரியான அம்சங்களின் காரணத்தினாலேயே சிரோஸ் காருக்கு தற்போது மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றது.

விலையை அறிவிக்கும் முன்னரே இந்த காரை 10 ஆயிரம் இந்தியர்கள் புக் செய்தனர் என்பது கவனிக்கத்தகுந்தது. ஆகையால், ஜனவரி மாத விற்பனையில் மட்டுமல்ல அடுத்தடுத்து வரும் மாதங்களிலும் கியா நிறுவனத்தின் இந்த கார் மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கையைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக செல்டோஸ் எஸ்யூவி இருக்கின்றது. இந்த இடத்தை வரும் நாட்களில் சிரோஸ் தட்டிப் பறித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்கிறனர் ஆட்டோத்துறை சார்ந்த வல்லுநர்கள். கியா நிறுவனம் சிரோஸ் கார் மாடலில் இரண்டு விதமான எஞ்சின் ஆப்ஷன்களை வழங்குகின்றது.

பெட்ரோல், டீசல் இரண்டு ஆப்ஷன்களும் அதில் வழங்கப்படுகின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் மோட்டார் ஆப்ஷன்களே இந்த காரில் வழங்கப்படுகின்றது. இரண்டிலும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

இந்த பெட்ரோல், டீசல் ஆப்ஷன் காரணமாகவும் சிரோஸ் கார் மாடலுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என கூறலாம். இந்தியாவில் இப்போதும் டீசல் கார் விரும்பிகள் இருக்கின்றனர். இதன் விளைவாகவே டீசல் ஆப்ஷனை சிரோஸ்-இல் கியா வழங்குகின்றது. கியாவின் இந்த கார் மாடல் மட்டுமல்ல மற்ற கார் மாடல்களுக்கும் சென்ற ஜனவரி மாதத்தில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்திருக்கின்றது.

அந்தவகையில், சொனெட் சென்ற ஜனவரி மாதத்தில் 7,194 யூனிட்டுகளும், செல்டோஸ் 6,470 யூனிட்டுகளும், கேரன்ஸ் 5,522 யூனிட்டுகளும் விற்பனையாகி இருக்கின்றன. இதேபோல், நிறுவனத்தின் லக்சூரி அம்சங்கள் நிறைந்த கார்னிவல் எம்பிவி காரும் சென்ற ஜனவரி மாதத்தில் 293 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருக்கின்றது. இவி6 ஒரு யூனிட்கூட விற்பனையாகவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கியா நிறுவனத்தின் சிரோஸ் கார் மாடலுக்கு வரும் நாட்களில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கும் என்பதற்கு சான்றாகவே தற்போது வெளியாகி இருக்கும் விற்பனை புள்ளி விபரம் அமைந்திருக்கின்றது. ஆனால், இதை அறிந்துக் கொள்ள நாம் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Monday, February 3, 2025, 16:20 [IST]
English summary
Kia syros achieves 5 546 unit sales in first month in india
மேலும்... #kia motors #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+