போலீஸ் கேண்டீனில் இனி இந்த காரை வாங்கலாம்! விலை ரொம்ப கம்மி!
கியா நிறுவனம் மாஸ் மார்கெட் பிரிமியர் எஸ்யூவி கார்களை விற்பவனை செய்யும் முன்னணி நிறுவனமாக இருகு்கிறது. இந்நிறுவனம் பல பிரிமியம் அம்சங்களை தனது கார்களில் பொருத்தியுள்ளது. இதனால் இந்த நிறுவன வாகனங்களை வாங்குபவர்களுக்கு கியா நிறுவனம் பிரிமியம் அனுபவத்தை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் கியா நிறுவனம் தனது கார்களை போலீஸ் மற்றும் பாராமிலிட்டரியில் பணியாற்றுபவர்களுக்கும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மத்திய அரசின் போலீஸ் அமைப்பான பாராமிலிட்டரி, சிஆர்பிஎஃப் போன்ற ஊழியர்களுக்காக KPKB கேண்டீன்களை நடத்தி வருகிறது. இங்கு மத்திய போலீஸ் ஊழியர்களுக்காக குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. எப்படி ராணுவ கேண்டீனில் குறைந்த விலையில் ஜிஎஸ்டி வரி இல்லாமல் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதோ அதேபோல இங்கேயும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் கியா நிறுவனம் ஏற்கனவே சோனட், செல்டோஸ் மற்றும் கேரன்ஸ் ஆகிய கார்களை குறைந்த விலையில் விற்பனையாகி வருகிறது. இதன் மூலம் குறைந்த விலையில் இந்த கார்கள் விற்பனையாகி வருகிறது. இந்நிறுவனம் தற்போது தனது டீலர்ஷிப்களில் வழங்கப்படும் வாகனங்களின் மாடல்களை அதிகப்படுத்தியுள்ளது. அதன்படி சைரோஸ் என்ற 4 மீட்டருக்கும் குறைவான எஸ்யூவி மற்றும் கியா கிளாவிஸ் பிரிமியம் எம்பிவி கார்களையும் சேர்த்து விற்க முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் கியா நிறுவமன் இந்த கார்களை நேரியாக இந்தியாவில் செயல்படும் 119 மாஸ்டர் கேண்டீன்கள் மற்றம் 1871 சப்சிடரி கேண்டீன்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிறுவனம் மொத்தம் 92 விதமான வேரியன்ட்களில் கார்களை விற்பனவ செய்து வருகிறது. இந்த கேண்டீன்கள் மூலம் 35 லட்சம் ஊழியர்கள் பலன் பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த ஊழியர்கள் இந்த கேண்டீன்கள் மூலம் காரை வாங்க முடியும்.

கேண்டீன்கள் மூலம் வாங்க முடியும் என்பதற்காக குறைந்த விலையில் இந்த காரை வாங்கி அதிக விலையில் விற்க முடியாது. காரின் உரிமத்தை குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மாற்ற முடியாது. இதனால் நேரடியாக பயனாளர்கள் மட்டுமே இந்த காரை குறைந்த விலையில் வாங்கி பயன்படுத்த முடியும். அதே நேரம் ஒரு நபருக்கு குறிப்பிட்ட அளவில் மட்டுமே காரை வாங்க முடியும். ஒருவர் ஒரு காரை வாங்கிவிட்டால் குறிப்பிட்ட காலத்திற்கு காரை வாங்க முடியாது.
இப்படியாக பல விதிமுறையில் கீழ் தான் இந்த வாகனம் விற்பனைக்கு வருகிறது. இதில் விலை குறைப்பு எப்படி நடக்கிறது என்றால் வழக்கமாக ஒரு வாகனத்திற்கு ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு 18 அல்லது 40 சதவீத வரி விதிக்கப்படுகிறது. ஆனால் ராணுவ கேண்டீன் மூலம் காரை வாங்கினால் அதற்கு ஜிஎஸ்டி வரி எதுவும் கிடையாது. இதனால் குறைந்த விலையில் காரை வாங்க முடியும்.

கியா நிறுவனம் தனது கார்களை இதில் விற்பனை செய்து வரும் நிலையில் தற்போது தனது புதிய கார்களையும் இங்கே விற்க முடிவு செய்துள்ளது. இதனால் இதன் விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கலாம். வெளியிலும் இந்த காரகளுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பால் விலை கடுமையாக குறைகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஜிஎஸ்டி வரி வாகனங்களுக்கு அதிகமாக இருக்கிறது.இதனால் வாகன விலை அதிகமாக இருக்கும். இந்நிலையில் இந்த கேண்டீன் மூலம் வாகனம் வாங்கினால் அதை குறைந்த விலையில் வாங்க முடியும். நாட்டிற்காக சேவை செய்யும் மக்களுக்கு இப்படியாக வரி இல்லாமல் வாகனங்களை விற்பனை செய்வது வரவேற்றக்க தக்கது தான்.


Click it and Unblock the Notifications









