வெறும் 25 ஆயிரம்தானா! இன்னைக்கு நைட் 12 மணிக்கு புக்கிங் ஆரம்பிக்க போகுது! அடுத்த மாசமே டெலிவரி பண்ணீருவாங்க!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று கியா சைரோஸ் (Kia Syros). இந்த காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் நாளை (ஜனவரி 3) முதல் தொடங்கப்படவுள்ளன. எனவே இன்று நள்ளிரவு 12 மணி முதலே, கியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், சைரோஸ் காருக்கு முன்பதிவுகளை செய்து கொள்ள முடியும். மேலும் கியா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்கள் மூலமாகவும், சைரோஸ் காரை நீங்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு தொகை 25,000 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் நாளை தொடங்கப்படவுள்ள நிலையில், கியா சைரோஸ் கார் வரும் பிப்ரவரி 1ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதை தொடர்ந்து முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு கியா சைரோஸ் கார்களை டெலிவரி செய்யும் பணிகள் பிப்ரவரி மாதத்தின் 3வது வாரத்தில் இருந்து தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கியா சைரோஸ் காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படவுள்ளன. இதில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படும். இந்த காரின் மற்றொரு இன்ஜின் ஆப்ஷன், 1.5 லிட்டர் டீசல் ஆகும்.
இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படவுள்ளன. அத்துடன் கியா சைரோஸ் காரில் ஏராளமான வசதிகளும் வாரி வழங்கப்பட்டுள்ளன. இதில், லெவல் 2 அடாஸ் மற்றும் 360 டிகிரி கேமரா போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

அத்துடன் 30 இன்ச் அளவில் ட்யூயல் ஸ்க்ரீன் சிஸ்டமும் இந்த காரில் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் ஒன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகவும், மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகவும் செயல்படும். மேலும் இந்த காரின் முன் மற்றும் பின் இருக்கைகளில் வென்டிலேஷன் வசதியும் கொடுக்கப்பட்டிருக்கும்.
மேலும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, 8 ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், கனெக்ட் கார் தொழில்நுட்பம், பனரோமிக் சன்ரூஃப், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் பின் பகுதியில் ஏசி வெண்ட்கள் போன்ற வசதிகளையும் கியா சைரோஸ் கார் கொண்டிருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கியா சைரோஸ் காரின் ஆரம்ப விலை சுமார் 9-9.50 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். ஆனால் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் பிப்ரவரி 1ம் தேததான் அதிகாரப்பூர்வமான விலை அறிவிக்கப்படும்.
இது நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்றாகும். எனவே விலை நிர்ணயம் மட்டும் சரியாக மேற்கொள்ளப்பட்டால், கியா சைரோஸ் கார் விற்பனையில் சாதனைகளை படைக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








