கொரியாகாரன் ஒரு முடிவோடதான் இருக்கான்! டாடாவை கதற விட போகும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள எலெக்ட்ரிக் கார்களில் (Electric Cars) ஒன்று கியா சைரோஸ் இவி (Kia Syros EV). இது தற்போது விற்பனையில் உள்ள கியா சைரோஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும். கியா நிறுவனம் சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரை தற்போது சாலை சோதனையில் ஈடுபடுத்தி வருகிறது.

இந்தியா மட்டுமல்லாது, கியா நிறுவனத்தின் தாய் நாடான தென் கொரியாவிலும் கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரின் சோதனை ஓட்டம் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலமாக கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரை பற்றிய பல்வேறு புதிய தகவல்கள் நமக்கு தெரிய வந்து கொண்டுள்ளன.

Kia Syros Side Design

இந்த வரிசையில் கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரின் சார்ஜிங் போர்ட் பொஷிஷன் (Charging Port Position) குறித்த முக்கியமான புதிய தகவல் ஒன்று தற்போது நமக்கு தெரிய வந்துள்ளது. தென் கொரியாவில் ஒரு சார்ஜிங் ஸ்டேஷனில் சார்ஜ் ஏற்றி கொண்டிருந்த சமயத்தில், கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் கார் கேமராவின் கண்களில் சிக்கியுள்ளது. அந்த புகைப்படங்கள் ஆட்டோஸ்பை என்ற தளத்தில் வெளியாகியுள்ளன.

இதன் அடிப்படையில் பார்த்தால், கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரின் சார்ஜிங் போர்ட், முன் பகுதியின் இடது பக்கத்தில் ஃபெண்டரின் மீது வழங்கப்பட்டுள்ளது. இன்னும் புரியும்படி சொல்வதென்றால், முன் பகுதியின் இடது பக்கத்தில் டயருக்கு சற்று மேலாக சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

Kia Syros

இங்கே கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் உள்ளது. தற்போது ஒரு சில கார்களில் இடது பக்கம் மட்டுமல்லாது, முன் பகுதியின் வலது பக்கத்திலும் ஃபெண்டரின் மீது, ஒரு சில நிறுவனங்கள் சார்ஜிங் போர்ட்களை வழங்குகின்றன. சார்ஜ் செய்வது இன்னும் எளிமையாக இருக்கும் என்பதால், ஒரு சில கார் நிறுவனங்கள் இப்படி செய்கின்றன.

ஆனால் கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரில், வலது பக்கத்திலும் சார்ஜிங் போர்ட் இருக்கிறதா? என்பதை தற்போது உறுதி செய்ய முடியவில்லை. ஆனால் வலது பக்கத்தில் சார்ஜிங் போர்ட் இருக்காது என்றே நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் இதுதான் கியா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யவுள்ள மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் (Most Affordable Electric Car) ஆகும்.

ஒருவேளை 2 பக்கங்களிலும் சார்ஜிங் போர்ட்களை வழங்கினால், விலையை அதிகமாக நிர்ணயம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். எனவே கியா நிறுவனம் இடது பக்கத்தில் மட்டுமே சார்ஜிங் போர்ட்டை வழங்கும் என்று நாங்கள் கருதுகிறோம். செயல்திறனை பொறுத்தவரையில், கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரில், 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

அவை 42 kWh மற்றும் 49 kWh பேட்டரி ஆப்ஷன்களாக இருக்கலாம். இதில், சிறிய பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 300-350 கிலோ மீட்டர்கள் என்ற அளவிலும், பெரிய பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் 370 கிலோ மீட்டர்கள் என்ற அளவிலும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் உள்ள கியா இவி9 (Kia EV9) எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 1.30 கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் கியா இவி6 (Kia EV6) எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 65.97 லட்ச ரூபாயாக இருக்கிறது.

மறுபக்கம் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி (Kia Carens Clavis EV) எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 18 லட்ச ரூபாயாக உள்ளது. இவை அனைத்துமே கியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். ஆனால் கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை அனேகமாக வெறும் 13 அல்லது 14 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என கருதப்படுகிறது.

இந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டால், டாடா பன்ச் இவி (Tata Punch EV), டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) மற்றும் எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு எல்லாம் விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை, கியா சைரோஸ் இவி ஏற்படுத்தலாம். கியா சைரோஸ் இவி அனேகமாக வரும் 2026ம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Sunday, November 9, 2025, 10:33 [IST]
English summary
Kia syros ev india launch nears charging port details out
மேலும்... #kia motors #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+