அடி மாட்டு விலையில் களமிறங்கும் புதிய எலெக்ட்ரிக் கார்! டாடா பொழப்புல மண்ணை அள்ளி போட போறாங்க!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா சைரோஸ் (Kia Syros). கடந்த பிப்ரவரி மாதம்தான், கியா சைரோஸ் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதைய நிலையில் இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 9.50 லட்ச ரூபாயாக உள்ளது.

அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையோ 17.80 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இந்த சூழலில், இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளை கியா நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Kia Syros Side Design

கியா நிறுவனம் வரும் ஜூலை 15ம் தேதி, கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி (Kia Carens Clavis EV) எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இது ஏற்கனவே விற்பனையில் உள்ள கியா கேரன்ஸ் க்ளாவிஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும். இதற்கு அடுத்தபடியாக, இதே பாணியில், சைரோஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை கியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

அனேகமாக நடப்பு 2025ம் ஆண்டு முடிவடைவதற்குள், கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக கியா நிறுவனம் தற்போது சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரை இந்திய சாலைகளில் சோதனை செய்ய தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Kia Syros

கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரின் டிசைன், கிட்டத்தட்ட அதன் ஐசி இன்ஜின் வெர்ஷனை போலவேதான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஐசி இன்ஜின் வெர்ஷனிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில், எலெக்ட்ரிக் வெர்ஷனின் டிசைனில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்படலாம்.

கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரில், 42 kWh மற்றும் 51.4 kWh என மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவற்றின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) தோராயமாக முறையே 390 கிலோ மீட்டர்கள் மற்றும் 475 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம்.

வசதிகளை (Features) பொறுத்தவரையில், லெவல் 2 அடாஸ், 360 டிகிரி பார்க்கிங் கேமரா, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்டவற்றை எல்லாம், கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரில் நாம் எதிர்பார்க்கலாம்.

இந்திய சந்தையில் கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 13 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 20 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம். இவை எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Estimated Ex-Showroom Price) ஆகும். இந்த விலையில் வந்தால், கியா நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை இது பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரின் வருகை, டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) மற்றும் எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு எல்லாம் விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்தலாம் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 5, 2025, 23:15 [IST]
English summary
Kia syros ev launch soon expected price design features driving range
மேலும்... #kia motors #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+