இருக்கறதுலயே கம்மி ரேட்! இவ்ளோ குறைவான விலையில் எலெக்ட்ரிக் காரா! டாடா, மஹிந்திராவை மிரள விட போகும் கியா!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா சைரோஸ் (Kia Syros). கடந்த பிப்ரவரி மாதம்தான் கியா சைரோஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது விற்பனையில் இருப்பது ஐசி இன்ஜின் வெர்ஷன் ஆகும். இதை தொடர்ந்து சைரோஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்ய கியா நிறுவனம் தயாராகி கொண்டுள்ளது.
கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இந்திய சாலைகளில் அதன் சோதனையோட்டம் தொடங்கியுள்ளது. இது குறித்து ரஸ்லேன் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு சார்ஜிங் ஸ்டேஷனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது, கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் கார் கேமரா கண்களில் தென்பட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனையோட்டம் தொடங்கப்பட்டுள்ளதால், கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் கார், கூடிய விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரின் டிசைன் கிட்டத்தட்ட அதன் ஐசி இன்ஜின் வெர்ஷன் போலவேதான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் கியா சைரோஸ் ஐசி இன்ஜின் காரில் இடம்பெற்றுள்ள பல்வேறு வசதிகளை அதன் எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் நாம் எதிர்பார்க்கலாம். செயல்திறனை பொறுத்தவரையில், கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவை 42 kWh மற்றும் 49 kWh பேட்டரிகளாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவற்றின் டிரைவிங் ரேஞ்ச் முறையே 300 கிலோ மீட்டர்கள் மற்றும் 355 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம். இந்திய சந்தையில் கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 14 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் கியா நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான கார் என்ற பெருமையை கியா சைரோஸ் பெறவுள்ளது.
கியா நிறுவனம் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மொத்தம் 3 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. அவை கியா இவி 9, கியா இவி 6 மற்றும் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் ஆகியவை ஆகும். இதில், கியா இவி 9 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 1.30 கோடி ரூபாயாக இருக்கிறது.
அதே நேரத்தில் கியா இவி 6 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 65.97 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 17.99 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
இந்திய சந்தையில் கியா நிறுவனத்தின் எஞ்சிய 3 எலெக்ட்ரிக் கார்களும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிவையில், கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் கார் வெறும் 14 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டாடா பன்ச் இவி (Tata Punch EV), டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV), எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி400 இவி (Mahindra XUV400 EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு எல்லாம், கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரின் வருகை, விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








