20.75கிமீ மைலேஜ் தரும்.. டீசல்-தான் பெஸ்ட்போல! இந்த விலைக்கு இப்படி ஒரு காரானு எல்லாரும் வாயடைச்சு நிக்கிறாங்க
ஊரே எதிர்பார்க்கும்படி ஓர் கார் இந்தியாவிற்காக தயாராகி இருக்கின்றது. சிரோஸ் (Syros) கார் மாடலே அதுவாகும். கியா (Kia) நிறுவனத்தின் இந்தியாவிற்கான மற்றுமொரு சூப்பரான தயாரிப்பே இந்த கார் மாடல் ஆகும். இது ஓர் சப்-4 மீட்டர் எஸ்யூவி (Sub - 4M SUV) ரக கார் மாடல் ஆகும். இந்த காரை கியா நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே வெளியீடு செய்துவிட்டது. சமீபத்தில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில்கூட இந்த காரை அது காட்சிப்படுத்தியது என்பது கவனிக்கத்தகுந்தது. ஆனால், இதன் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஆனால், இதன் விலைகளை தெரிந்துக் கொள்ள ரொம்ப நாட்கள் எல்லாம் காத்திருக்க வேண்டியதில்லை. சீக்கிரமே சிரோஸ் எஸ்யூவி காரின் விலைகளை கியா நிறுவனம் அறிவிக்க இருக்கின்றது. வருகின்ற பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி அன்றே விலைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கின்றது. எதிர்பார்ப்பின்படி இந்த காருக்கு ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான விலையே நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் வருகையை முன்னிட்டு ஏற்கனவே புக்கிங் பணிகளும் தொடங்கிவிட்டன. சொல்லப்போனால் இந்த காருக்கு புக்கிங் இப்போதே குவிந்துக் கொண்டிருக்கின்றது. விலைகள் இன்னும் என்ன என்பதை நிறுவனம் அறிவிக்கும் முன்னரே புக்கிங்குகள் இந்தியர்கள் மத்தியில் குவிந்துக் கொண்டிருக்கின்றது. சமீபத்தில் வெளியாகிய தகவலின்படி சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங்குகள் இந்த காருக்கு கிடைத்திருப்பது தெரிய வந்திருக்கின்றது.
இப்போது இந்த எண்ணிக்கை இன்னும் பலமடங்கு அதிகரித்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே சிரோஸ்க் கிடைத்துக் கொண்டிருக்கும் புக்கிங்கை இரட்டிப்பாக்கக் கூடிய ஓர் தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றது. சிரோஸ் காரின் மைலேஜ் பற்றிய விபரமே அதுவாகும். இந்த கார் லிட்டர் ஒன்றிற்கு 17.68 கிமீ முதல் 20.75 கிமீ வரையில் மைலேஜ் தரும் என்பது தெரிய வந்திருக்கின்றது.
கியா சிரோஸ் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு விதமான ஆப்ஷன்களிலும் விற்பனைக்குக் கிடைக்கும். பெட்ரோலை பொருத்த வரை 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ மோட்டார் ஆப்ஷனே, 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் ஆப்ஷனுடன் வழங்கப்படுகின்றது.
இதேபோல், டீசல் மோட்டார் ஆப்ஷனிலும் இரண்டு விதமான கியர்பாக்ஸ் ஆப்ஷன்களே வழங்கப்படுகின்றன. 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக்கே அவை ஆகும். 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் மோட்டாருடனேயே இந்த கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில் மிக அதிக மைலேஜை தரக் கூடிய தேர்வாக டீசல் மேனுவல் ஆப்ஷனே இருக்கின்றது.
அதுவே லிட்டர் ஒன்றிற்கு 20.75 கிமீ மைலேஜை வழங்குகின்றது. இதற்கு அடுத்தபடியான இடத்தில் பெட்ரோல் மேனுவல் இருக்கின்றது. இது லிட்டர் ஒன்றிற்கு 18.20 கிமீ வரை மைலேஜ் தரும். பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மற்றும் டீசல் ஆட்டோமேட்டிக் இவை லிட்டர் ஒன்றிற்கு 17.68 கிமீ மற்றும் 17.65 கிமீ மைலேஜை வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
இத்தகைய அதிக மைலேஜ் திறனைக் கொண்ட காராகவே சிரோஸ் இந்தியாவிற்காக தயாராகி இருக்கின்றது. சிரோஸ் ஓர் டால் பாய் தோற்றம் கொண்ட எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இந்தியாவில் இந்த ஸ்டைலில் இப்போதைக்கு மாருதி சுஸுகி வேகன்ஆர் கார் மாடலே விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இதற்கு அடுத்தபடியாக டால் பாய் ஸ்டைலில் சிரோஸே வர இருக்கின்றது. சிரோஸ் அதிக மைலேஜை தரக் கூடிய கார் மாடல் மட்டுமல்ல அதிகம் பிரீமியம் அம்சங்கள் தாங்கிய கார் மாடலாகவும் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், சிரோஸ் கார் மாடலில் 12.3 அங்குல திரை, பனோரமிக் சன்ரூஃப், வெண்டிலேஷன் வசதிக் கொண்ட இருக்கை உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, 64 வண்ணங்கள் அடங்கிய ஆம்பியன்ட் லைட், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹர்மேன் சவுண்டு சிஸ்டம், எலெக்ட்ரிக் வாயிலாக அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட டிரைவர் இருக்கை உள்ளிட்டவை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, வயர்லெஸ் செல்போன் சார்ஜிங், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன் சிஸ்டம் உள்ளிட்டவையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த அம்சங்களினால் கியா சிரோஸ் கார் விற்பனையில் மற்ற கியா கார்களைப் போலவே மிகப் பெரிய அளவிலான சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான விலையை இந்த கார் கொண்டிருக்கப்போவதால், இந்த விலைக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் இந்த கார் வாயடைக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது களமிறங்க இருக்கும் களமும் போட்டி மிகுந்த ஒன்றாகும். ஆகையால், இது எப்படி களத்தின் சூடைத் தாக்குபிடிக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








