இன்னும் விலையையே சொல்லல ஆனா புக்கிங் குவிஞ்சுட்டு இருக்கு.. டாடா-மாருதி-மஹிந்திரா இவங்க யாரோட தயாரிப்பும் இல்ல
இந்தியாவில் ஓர் கார் மாடலுக்கு புக்கிங் குவிந்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டாடா (Tata), மாருதி (Maruti) மற்றும் மஹிந்திரா (Mahindra) இவர்களின் தயாரிப்பாக இருக்கும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், இவர்கள் யாருடைய தயாரிப்பும் அது கிடையாது. பிரபல தென்கொரிய கார் உற்பத்தி நிறுவனமான கியா (Kia) நிறுவனத்தின் கார் மாடலே அது ஆகும். இந்த நிறுவனம் சமீபத்தில் சிரோஸ் (Syros) எனும் கார் மாடலை வெளியீடு செய்தது. இது ஓர் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும்.
இதற்கே இந்தியர்கள் மத்தியில் அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, புக்கிங் குவிந்துக் கொண்டிருக்கின்றது. இந்த காரை இன்னும் கியா நிறுவனம் பொதுமக்களின் பார்வைக்குகூட கொண்டு வராத நிலையே தென்படுகின்றது. இருப்பினும், அதற்கு புக்கிங்கை இந்தியர்கள் வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இதன் விலைகள்கூட இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த நிலையிலேயே 10 ஆயிரத்து 258 யூனிட்டுகள் வரை இந்த காருக்கு புக்கிங் குவிந்திருக்கின்றது. கியா நிறுவனம், இந்த காருக்கு கடந்த 3 ஆம் தேதி நள்ளிரவு 12.00 மணி முதலே புக்கிங்கைத் தொடங்கியது என்பது கவனிக்கத்தகுந்தது.
ஆமாங்க, இரண்டு வார காலத்திற்குள்ளாகவே இவ்வளவு மெகா அளவிலான புக்கிங்கை சிரோஸ் கார் மாடல் குவித்திருக்கின்றது. வரும் நாட்களில் இந்த புக்கிங் எண்ணிக்கை இன்னும் பலமடங்காகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ரூ. 25 ஆயிரம் முன் தொகையிலேயே சிரோஸ் காருக்கான புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன.

இந்த காரை நாளை நடைபெற இருக்கும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025)-வில் வைத்து காட்சிப்படுத்தவும் கியா திட்டமிட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான விலை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் விலைகள் பிப்ரவரி முதல் தேதியிலேயே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கின்றது. சொனெட் (Sonet)-இன் மேலேயும், செல்டோஸ் (Seltos)-க்கும் கீழேயும் இந்த எஸ்யூவி காரை நிலை நிறுத்த கியா திட்டமிட்டு இருக்கின்றது. ஒட்டுமொத்தமாக ஆறு விதமான வேரியண்டுகளில் இது விற்பனைக்குக் கிடைக்கும். எச்டிகே (HTK), எச்டிகே ஓ (HTK O), எச்டிகே பிளஸ் (HTK+), எச்டிஎக்ஸ் (HTX), எச்டிகே பிளஸ் (HTX+) மற்றும் எச்டிகே பிளஸ் ஓ (HTX+ O) ஆகியவையே அவை ஆகும்.
தனித்துவமான ஸ்டைல், மாருதி சுஸுகி வேகன்ஆர் கார் மாடலை போல டால் பாய் தோற்றம் மற்றும் நிரம்பிய அளவிலான பிரீமியம் அம்சங்கள் ஆகியவற்றுடனேயே இந்த கார் இந்தியாவிற்காக தயாராகி இருக்கின்றது. இதனாலேயே இதன் விலைகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே இதற்கு இந்தியாவில் புக்கிங்குகள் குவிந்துக் கொண்டிருக்கின்றது.
ஐஸ் கட்டி ஸ்டைலிலான ஹெட்லைட்டு, மீன் தூண்டில் போன்ற அமைப்புடைய டிஆர்எல், 17 அங்குல கிரிஸ்டல் கட் அலாய் வீல், சிறுவர்களுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கை மவுண்ட், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, டூயல் டேஷ்கேம், மற்றும் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் உள்ளிட்ட அம்சங்கள் அம்சங்கள் சிரோஸ் காரில் இடம் பெற்றிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
இதுதவிர, லெவல் 2 வகை அடாஸ் தொழில்நுட்பமும் சிரோஸ் கார் மாடலின் உயர் நிலையில் வழங்கப்பட்டிருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் இரண்டு விதமான ஆப்ஷன்கள் வழங்கப்பட இருக்கின்றன. 1.0 லிட்டர், 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் மற்றும் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் எஞ்சின் ஆகிய மோட்டார் தேர்வுகளே இந்த காரில் வழங்கப்பட இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எஸ்யூவி ரக கார் மாடல்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் அடிப்படையில் புதிய சிரோஸ் கார் மாடலுக்கும் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக 15 நாட்களுக்கும் குறைவான இடைவெளியில் இந்த காருக்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங்குகள் கிடைத்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








