சைக்கிள்-பைக் போல விற்பனையாகும் கார்.. சேல்ஸ்க்கு வந்த ரெண்டே மாசத்தில் 15,000க்கும் அதிகமா விற்பனையாகிருச்சு!

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றாக கியா (Kia) உருவெடுத்திருக்கின்றது. இதை நம்பாதவர்களை நம்ப வைக்கும் விதமான ஓர் சம்பவமே தற்போது நாட்டில் அரங்கேறி இருக்கின்றது. அதாவது நிறுவனத்தின் புதுமுக தயாரிப்பு ஒன்றிற்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சைரோஸ் (Syros) கார் மாடலே அது ஆகும். இது ஓர் டால்பாய் உருவம் கொண்ட எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் ஆகும். இந்த கார் விற்பனைக்கு வந்து இரண்டு மாதங்கள் மட்டுமே ஆகின்றன.

இதற்குள்ளாக விற்பனையில் 15 ஆயிரத்தைக் கடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த காரை கியா நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முதலே அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே அது 15,986 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருக்கின்றது.

Kia syros sells 15 986 units in india

இதன் வாயிலாக இந்தியாவில் கியா சைரோஸ் சைக்கிள்-பைக்குகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் விற்பனையாகிக் கொண்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது. யாரும் எதிர்பார்த்திராத மற்றும் நம்ப முடியாத புதிய அம்சங்கள் பலவற்றை இந்த கார் மாடல் தன்னுள் தாங்கி இருப்பதானலேயே இந்த அளவிற்கு வரவேற்பை நாட்டு மக்கள் மத்தியில் பெற்றுக் கொண்டிருக்கின்றது.

அந்தவகையில் மிக முக்கியமான அம்சமாக இந்த காரில் பின் பக்கத்திலும் வெண்டிலேட் (Ventilated) வசதிக் கொண்ட இருக்கைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுமட்டுமல்ல மூன்று திரைகளை உள்ளடக்கிய ஒரே நீளமான திரை ஒன்றையும் இந்த காரில் கியா நிறுவனம் வழங்கி இருக்கின்றது. இதில், 12.3 அங்குல திரை இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டராகவும், 12.3 அங்குல திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும் செயல்படும்.

Kia syros front look

இத்துடன், 5 அங்குலம் ஏசி உள்ளிட்டவற்றிற்கான கன்ட்ரோல்களைக் கொண்டதாக செயல்படுகின்றது. இத்தகைய திரையையே கியா சைரோஸ் தன்னுள் தாங்கியுள்ளது. இதுமட்டுமல்ல, 4 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட டிரைவருக்கான இருக்கை, பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், 8 ஸ்பீக்கர்களைக் கொண்ட ஹர்மேன் கர்டோன் சவுண்டு சிஸ்டம் மற்றும் லெதர் போர்த்தப்பட்ட இருக்கை ஆகியவற்றையும் இந்த காரில் பெற்றுக் கொள்ள முடியும்.

இதேபோல், பாதுகாப்பு அம்சங்களையும் கியா சிரோஸ் எஸ்யூவி கார் தன்னுள் மிக தாராளமாக தாங்கி இருக்கின்றது. குறிப்பாக, இதன் ஆரம்ப நிலை வேரியண்ட் தொடங்கி உயர்நிலை வேரியண்ட் வரை என அனைத்திலும் 6 ஏர் பேக்குகளை கட்டாயமாக வழங்கிக் கொண்டிருக்கின்றது, கியா.

Kia syros rear view

இதுமட்டுமல்ல, 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம், லெவல் 2 வகை அடாஸ் (ADAS) அம்சம் உள்ளிட்டவற்றையும் இதில் பெற்றுக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. எஞ்சினைப் பொருத்தமட்டில் இரண்டு ஆப்ஷன்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன.

1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் மோட்டார் ஆகியவையே அவை ஆகும். இதில் பெட்ரோல் மோட்டார் அதிகபட்சமாக 120 பிஎஸ் மற்றும் 172 என்எம் டார்க்கையும், டீசல் மோட்டார் 116 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் ஆற்றலையும் உருவாக்கும்.

இதுபோன்று பலதரப்பட்ட சிறப்புகளைத் தாங்கி இருக்கின்ற காரணத்தினாலேயே இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் ஆரம்ப விலையும் ரூ. 9 லட்சம் மட்டுமே ஆகும். அதேவேளையில், இதன் அதிகபட்ச விலை ரூ. 17.80 லட்சமாக உள்ளது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எஸ்யூவி கார் என்றாலே விற்பனையில் மிக சிறப்பாக செயல்படும். அதிலும், இந்த கார் அதிக இட வசதியைக் கொண்ட உயரமான பையனைப் போல உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், சிறப்பம்சங்களையும் தாராள மனசுடன் கியா வழங்கி இருக்கின்றது. இதுமாதிரியான காரணங்களினாலேயே சைரோஸ்-க்கு அசத்தலான வரவேற்பு தற்போது கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 2, 2025, 12:49 [IST]
English summary
Kia syros has sold 15986 units in india within two months of launch price and other details
மேலும்... #kia motors #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X