ரூ.9 லட்சத்தில் கிடைக்கக்கூடிய கியா கார்... இவ்வளவு கம்மியான விலையில் என்னென்ன வசதிகள் கிடைக்கும்?

கியா (Kia) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கார் சைரோஸ் (Syros) ஆகும். கியாவின் புதிய காம்பெக்ட் எஸ்யூவி (Compact SUV) கார் ஆன சைரோஸின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.9 லட்சத்தில் இருந்து ரூ.17.80 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. எச்டிகே, எச்டிகே ஆப்ஷனல், எச்டிகே பிளஸ், எச்டிஎக்ஸ், எச்டிஎக்ஸ் பிளஸ், எச்டிஎக்ஸ் பிளஸ் ஆப்ஷ்னல் என 6 விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய கியா கார் ரூ.9 லட்சத்தில் வாங்கும்போது எவ்வாறான தோற்றத்தில் கிடைக்கும் என்பதை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

அதாவது, சைரோஸ் காரின் எச்டிகே வேரியண்ட்டை விவரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. ரூ.9 லட்சம் என்பது கியா சொனெட் காரை விட அதிகம், அதேநேரம் செல்டோஸ் காரை விட குறைவாகும். சைரோஸ் எச்டிகே கார் ஆனது டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே கிடைக்கும்.

kia syros htk base variant

டீசல் என்ஜின் உடன் இந்த காரை வாங்க வேண்டுமெனில், அதற்கு நீங்கள் வேற வேரியண்ட்டை தான் தேர்வு செய்ய வேண்டும். அதேபோல், எச்டிகே வேரியண்ட்டை மேனுவல் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே வாங்க முடியும். தோற்றத்தை பொறுத்தவரையில், இந்த காரின் முன்பக்கத்தில் புரோஜெக்டர் & ஹாலோஜன் ஹெட்லைட்கள் டர்ன் இண்டிகேட்டர்கள் உடன் வழங்கப்பட்டுள்ளன.

விலை குறைவான வேரியண்ட் என்பதால், எல்இடி டிஆர்எல்-கள் எதுவும் வழங்கப்படவில்லை. இவற்றிற்கு கீழே பார்த்தால், முரட்டுத்தனமான தோற்றத்தில் ஸ்கிட் பிளேட் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு கீழே, மேட் கருப்பு நிறத்தில் பம்பரை பார்க்க முடிகிறது. பொனெட்டின் எட்ஜ்கள் தனித்துவமானவைகளாக உள்ளன. இதேபோன்றதான சமதளமான பொனெட் தான் சைரோஸ் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்படுகிறது.

kia syros htk base variant

அப்படியே காரின் பக்கவாட்டிற்கு சென்றால், சதுர வடிவிலான வீல் ஆர்ச்சுகள் கருப்பு நிறத்திலான கிளாடிங்குகள் உடன் காட்சியளிக்கின்றன. விலை குறைவான வேரியண்ட்டாக இருப்பினும், காரின் 15-இன்ச் சக்கரங்களில் வீல் கவர்களை பார்க்க முடிகிறது. கதவுகளின் கீழ்பகுதியில் சில்வர் நிறத்தில் ஸ்கிர்ட்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

முன்பக்க ஃபெண்டர்களில் டர்ன் இண்டிகேட்டர்கள் இந்த எச்டிகே வேரியண்ட்டிற்கு என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளன. பின்பக்கத்தில் சிறிய அளவிலான ஜன்னல் கண்ணாடிகள் உடன் காரின் A மற்றும் C பில்லர்கள் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளதால், மேற்கூரை ஆனது காற்றில் மிதப்பதுபோல் காட்சியளிக்கிறது.

kia syros htk base variant

காரின் பின்பக்கத்தில் சுறா துடுப்பு வடிவிலான ஆண்டென்னா, C-வடிவிலான எல்இடி டெயில்லேம்ப்கள், நிமிர்ந்த பின்பக்க கதவு, பம்பரின் இரு முனைகளிலும் டெயில்லேம்ப்கள், பின்பக்க பம்பருக்கு அடியிலும் ஸ்கிட் பிளேட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. காரின் உள்ளே செவ்வக வடிவில் 2-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரம் மற்றும் டேஸ்போர்டில் இன்ஃபோடெயின்மெண்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரைகள் வழங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் புது, புது எஸ்யூவி ரக கார்களை அறிமுகம் செய்வதில் கியா உறுதியாக உள்ளது. இருப்பினும், இப்போது விற்பனையில் உள்ள கியா கார்களுக்கும் சைரோஸ் காருக்கும் தோற்றத்தில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. குறிப்பாக, இந்த புதிய கார் பெட்டகம் வடிவில் உள்ளது. விலை குறைவான எச்டிகே வேரியண்ட் ஆனது ரூ.9 லட்சத்தில் வாங்குவதற்கு ஏற்றதே ஆகும்.

More from DriveSpark

Article Published On: Friday, February 7, 2025, 8:00 [IST]
English summary
Kia syros htk base variant complete specifications
மேலும்... #kia #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X