ஷோரூமில் வாங்கிய கையோடு புதிய காரை இந்த இடத்திற்கா கொண்டு செல்வது!! இன்ஸ்சூரன்ஸ் பெருசா அடி வாங்கும்
கியா (Kia) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட கார் சைரோஸ் (Syros) ஆகும். இந்த காரின் டெலிவிரிகள் சமீபத்தில் சில வாரங்களுக்கு முன்னர்தான் துவங்கப்பட்டது. அதாவது, கடந்த சில வாரங்களாக தான் சைரோஸ் கார்கள் மக்களின் கைகளுக்கு கிடைக்க துவங்கி உள்ளன. ஆனால், அதற்குள்ளாக பிராண்ட்-நியூ கியா சைரோஸ் கார் ஒன்று இங்கு 17-இன்ச் அலாய் சக்கரங்கள் உடன் மாடிஃபை (Modify) செய்யப்பட்டுள்ளது. இந்த மாடிஃபைடு சைரோஸ் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே நன்கு விசாலமான இடவசதி கொண்ட எஸ்யூவி (SUV) மற்றும் எம்பிவி (MPV) கார்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. அதாவது அவ்வாறான கார்களை வாங்கவே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். இத்தகைய கார்களில் அதிக பயணிகளை அழைத்து செல்லலாம் என்பது ஒரு நல்ல விஷயம் என்றால், அதனை காட்டிலும் சவுகரியமான பயணத்திற்காகவே இவ்வாறான கார்களை அதிக பேர் வாங்குகின்றனர்.

அத்தகைய கஸ்டமர்களை கவர்வதற்காகவே தென்கொரியாவை சேர்ந்த பிரபல கார் நிறுவனமான கியா அதன் புதிய சைரோஸ் காரை கடந்த பிப்ரவரி மாத துவக்கத்தில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. ரூ.8.99 லட்சம் என்கிற ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட சைரோஸ் காரை முன்பதிவு செய்தவர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் விரைவாகவே அடுத்த சில தினங்களில் துவங்கப்பட்டன.
இதனாலேயே பிராண்ட்-நியூ சைரோஸ் கார்கள் சாலைகளில் காட்சித்தர ஆரம்பித்துள்ளன. அவ்வாறு சைரோஸ் காரை வாங்கிய கஸ்டமர்களுள் ஒருவர், காரில் 17-இன்ச்சில் இரட்டை நிறத்திலான அலாய் சக்கரங்களை பொருத்தி தனது சைரோஸ் காரை வேற லெவல் தோற்றத்திற்கு மாற்றி உள்ளார். அதாவது, காரை ஷோரூமில் இருந்து டெலிவிரி பெற்றதும், பழைய சக்கரங்களை அகற்றி அவற்றிற்கு பதிலாக தனியாக வேறொரு செட் அலாய் சக்கரங்களை வாங்கி காரில் பொருத்திக் கொண்டுள்ளார்.

கூர்மையான வெட்டுகள் உடன் டிசைன் செய்யப்பட்டுள்ள இந்த 17 இன்ச் அளவுக் கொண்ட இரட்டை-நிற அலாய் சக்கரங்கள் சைரோஸின் தோற்றத்திற்கு மிகவும் எடுப்பாக உள்ளன என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், சைரோஸ் கார் முரட்டுத்தனமான தோற்றத்திலான எஸ்யூவி கார் என்பதால், அதன் உடல் தோற்றத்திற்கு இந்த ஆஃப்டர்-மார்க்கெட் அலாய் சக்கரங்கள் கணக்கச்சிதமாக பொருந்தி உள்ளன.
இதற்கேற்ப கியா நிறுவனமும் தனது சைரோஸ் கார்களில் சதுர வடிவிலான வீல் ஆர்ச்சுகளை வழங்குகிறது. மேலும், சைரோஸ் காரில் சைடு பாடி பேனல்களும் மிகவும் நேர்த்தியானவைகளாக பொருத்தப்படுகின்றன. இதனால், புதிய பிரத்யேகமான 17-இன்ச் அலாய் சக்கரங்களினால் இந்த சைரோஸ் காரின் ஸ்டைல் மெருகேறி உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

கியா சைரோஸ் எஸ்யூவி காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது கியாவின் சொனெட் காரை விட அளவில் பெரியது, அதேநேரம் செல்டோஸ் காரை விட அளவில் சிறியது ஆகும். உட்புறத்தில் அதிக இடவசதியை கொண்ட காரை வழங்க வேண்டும் என்கிற முயற்சியில் கியா உருவாக்கிய கார், சைரோஸ் ஆகும். மேலும், நவீன தொழிற்நுட்ப வசதிகள் நிறைந்த காராகவும் சைரோஸ் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மாடர்ன் கியா காரினுள் டேஸ்போர்டில் ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்கும் திரை, பொழுதுப்போக்கு திரை மற்றும் ஏசி கண்ட்ரோலுக்கான 5-இன்ச் திரை என மூன்றையும் ஒன்றாக இணைத்து சுமார் 30-இன்ச்சில் ஒரே திரை நன்கு பெரியதாக வழங்கப்படுகிறது. மேலும், இந்த காரில் பனோராமிக் சன்ரூஃப், 8 ஸ்பீக்கர்களுடன் ஹர்மன் கார்டன் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம் உள்பட ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய 17-இன்ச் ட்யூயல்-டோன் அலாய் சக்கரங்களுடன் இந்த சைரோஸ் கார் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது. ஆனால் இவ்வாறான காரை மாடிஃபை செய்வதால், காரின் இன்ஸ்சூரன்ஸ் பாதிக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். மேலும், இவ்வாறு தனியாக சக்கரங்களை வாங்கி பொருத்துவதினால், காரின் மைலேஜும் பாதிக்கப்பட கூடும்.


Click it and Unblock the Notifications









