வேகன்ஆரை போல 'டால் பாய்' ஸ்டைலில் உருவாகியிருக்கும் சிரோஸ் காரை நாங்க ஓட்டி பாத்துட்டோம்! நீங்க? ரிவியூ வீடியோ
கியா (Kia) நிறுவனத்தின் புதிய அறிமுகமாக சிரோஸ் (Syros) கார் மாடல் இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி ரக கார் மடால் ஆகும். பெட்டி போன்ற லுக்கில் டால் பாயாக இந்த காரை கியா நிறுவனம் தயார் செய்திருக்கின்றது. மாருதி சுஸுகி வேகன்ஆர் கார் இருக்குமே அதே டால் பாய் ஸ்டைலே இதற்கும் வழங்கப்பட்டு இருக்கும். மிக அதிக அளவில் பிரீமியம் அம்சங்களைத் தாங்கிய காராகவே கியா நிறுவனம் சிரோஸ்-ஸை தயார் செய்திருக்கின்றது. இதன் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. சீக்கிரமே அறிவிக்கப்பட இருக்கின்றன.
ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான விலையே இந்த காருக்கு நிர்ணயம் செய்யப்பட இருக்கின்றது. இந்த காரையே சமீபத்தில் நாங்கள் ரைடு ரிவியூ செய்து பார்த்தோம். அப்போது அந்த கார் குறித்து அறிந்துக் கொண்ட தகவலையே இந்த பதிவில் வீடியோவாக வழங்கி இருக்கின்றோம். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம். சிரோஸ் காரின் வடிவமைப்பில் உள்ள சிறப்புகள், எஞ்சின் ஆப்ஷன் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் என பலவற்றை விரிவாக கூறியிருக்கின்றோம்.
கியா சிரோஸ் இந்தியாவில் ஒரு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என இரண்டு விதமான எஞ்சின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் ஆகியவையே அவை ஆகும். இந்த பெட்ரோல் மோட்டார் 118 பிஎச்பி மற்றும் 172 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது.

6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி ஆகிய கியர்பாக்ஸ் ஆப்ஷன்களே பெட்ரோல் மோட்டாரில் வழங்கப்படுகின்றன. அதேவேளையில், டீசல் மோட்டாரில் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களே வழங்கப்படுகின்றது. இந்த மோட்டார் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டதாகவும் காட்சியளிக்கின்றது. 114 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க்கையே கியா சிரோஸ் டீசல் வெளியேற்றும்.


Click it and Unblock the Notifications








