இப்பதான் விற்பனைக்கே வந்துச்சு! அதுக்குள்ள இப்படி ஆயிருச்சே! பயங்கர பில்டப்போட வந்த காரின் விற்பனை புஷ்!
இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு வந்துள்ள கார்களில் ஒன்று கியா சைரோஸ் (Kia Syros). கடந்த பிப்ரவரி மாதம்தான் கியா சைரோஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இது சந்தைக்கு புது வரவாகும். இருப்பினும் கியா சைரோஸ் கார், அதற்குள்ளாகவே விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள கியா சைரோஸ் காரின் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இது நமக்கு தெரிய வந்துள்ளது.
இதன்படி பார்த்தால் கியா நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4,000 கியா சைரோஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, அதற்கு முந்தைய மார்ச் மாதம் 5,015 ஆக இருந்தது. இதன் காரணமாக கியா சைரோஸ் கார் விற்பனையில் 20.24 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

கியா சைரோஸ் காரின் செயல்திறனை பொறுத்தவரையில், மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. இதில், 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். அதிகபட்சமாக 118 பிஹெச்பி பவர் மற்றும் 172 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு ட்யூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. கியா சைரோஸ் காரின் மற்றொரு இன்ஜின் ஆப்ஷன் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 114 பிஹெச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. கியா சைரோஸ் காரின் வசதிகளை (Features) பொறுத்தவரையில், டேஷ்போர்டில் தலா 12.3 இன்ச் அளவில் வழங்கப்பட்டுள்ள 2 திரைகள் மிகவும் முக்கியமானதாகும்.
இதில், ஒன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகும். மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆக செயல்படும். இவை தவிர லெவல் 2 அடாஸ் பாதுகாப்பு தொகுப்பு (ADAS - Advanced Driver Assistance Systems), பனரோமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகியவையும் கியா சைரோஸ் காரின் மிக முக்கியமான வசதிகளாக இருக்கின்றன.
இவற்றுடன், பேடில் ஷிஃப்டர்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர் ஆகிய வசதிகளையும் கியா சைரோஸ் கார் கொண்டுள்ளது. இந்திய சந்தையில் கியா சைரோஸ் காரின் ஆரம்ப விலை 9.50 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 17.80 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கியா சைரோஸ் காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே விரைவிலேயே இந்த சரிவில் இருந்து கியா சைரோஸ் மீண்டு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கோடா கைலக் (Skoda Kylaq), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO), டாடா நெக்ஸான் (Tata Nexon), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) ஆகிய கார்களுக்கு எல்லாம், கியா சைரோஸ் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








