விலையை சொல்லும் முன்னரே 10,000 புக்கிங்கை குவித்த கார் நாளை அறிமுகமாகிறது.. வேகன்ஆர் போல உயரமா இருக்கும்!!

எஸ்யூவி கார்களில் இது தனி ரகம் என கூறும் அளவிற்கு பிரத்யேக சிறப்பம்சங்களுடன் ஓர் கார் நாளைய தினம் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றது. கியா சிரோஸ் கார் மாடலே அதுவாகும். இது ஓர் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். டால் பாய் உருவ அமைப்பையே இந்த எஸ்யூவி ரக காருக்கு கியா வழங்கி இருக்கின்றது. இந்த காருக்கு ஏற்கனவே இந்தியாவில் புக்கிங் பணிகள் தொடங்கிவிட்டன. இப்போதே இந்த காருக்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங்குகள் கிடைத்துவிட்டன என்பது கவனிக்கத்தகுந்தது.

இன்றைய நிலவரப்படி இந்த காருக்கு கிடைத்த புக்கிங் எண்ணிக்கை சற்றே அதிகரித்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. டிசம்பர் 3 ஆம் தேதியில் இருந்து இந்த காருக்கு புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. இந்த காரின் விலைகள்கூட இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது. ஆமாங்க, விலை தெரியாமலேயே-தான் இந்தியர்கள் இந்த அளவிற்கு பேராதரவை கியா சிரோஸ் காருக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

Kia syros side view

நாளையே இந்த காரின் விலையை அறிவித்து அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது, கியா நிறுவனம். எனவே இந்த காரின் மீதான எதிர்பார்ப்பு தற்போது பலமடங்காக அதிகரித்துக் காட்சியளிக்கின்றது. குறிப்பாக, என்ன ஆரம்ப விலையில் இதை விற்பனைக்குக் கொண்டு வருவார்கள் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான ஆரம்ப விலையிலேயே கியா சிரோஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. விலை குறைவான கார் மாடலாக இருந்தாலும், இது அதிக பிரீமியம் அம்சங்கள் நிறைந்த காராகவே இருக்கும். இதை உறுதிப்படுத்தும் விதமாகவே இதன் வெளிப்புற தோற்றம் இருக்கின்றது.

Kia syros launching in india tomorrow

ஐஸ் கட்டிகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்ததைபோல தோற்றம் கொண்ட ஹெட்லைட், மீன் பிடி தூண்டில் முல் போன்ற அமைப்புடைய எல்இடி லைட் மற்றும் காற்றை உள்வாங்குவதற்கான பெரிய துளை மற்றும் நீள செவ்வக அமைப்பைக் கொண்ட கிரில் உள்ளிட்டவை இந்த காரை அலங்கரிக்கும் விதமாக வழங்கி இருக்கின்றது, கியா.

வெளிப்புற தோற்றத்தில் மட்டுமல்ல சிறப்பம்சங்களைத் தாங்கியிருப்பதிலும் இந்த கார் கை தேர்ந்ததாகக் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், டோருடன் டோராக இருக்கும் கை பிடிகள், டூயல் டோன் அலாய் வீல்கள், ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட், பாடி கிளாடிங், இன்டெக்ரேட்டட் ஸ்பாய்ளர் மற்றும் சுறா மீன் துடுப்பு போன்ற அமைப்புடைய ஆன்டென்னா என ஏகப்பட்ட அம்சங்கள் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுமட்டுமல்ல இந்த காரில் பின் பக்கத்திலும் வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கை வழங்கப்பட்டிருக்கும். இந்த இருக்கையை லேசாக அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ளவும் முடியும். ஆகையால், இடவசதி பற்றாக் குறை என்பது இந்த காரில் பெரிய அளவில் இருக்காது என தெரிகின்றது. குறிப்பாக, உயரமானவர்களுக்கு ஏற்ற காராக இது இருக்கும் என்பது தெரிகின்றது.

இதுமட்டுமல்ல, அட்வான்ஸ்டு தொழில்நுட்ப வசதிகளையும் இந்த காரில் கியா வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், பனோரமிக் சன்ரூஃப், லெவல் 2 அடாஸ் தொழில்நுட்பம், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, 12.3 அங்குல பெரிய திரை, யுஎஸ்பி சி டைப் சார்ஜிங் போர்ட், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், 64 வண்ணங்கள் கொண்ட ஆம்பியன்ட் லைட் என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் இரண்டு விமதான ஆப்ஷன்கள் வழங்கப்பட இருக்கின்றது. பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டு ஆப்ஷன்களும் இந்த காரில் வழங்கப்படுகின்றது. 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் மோட்டார், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடனேயே வழங்கப்படுகின்றது.

1.5 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் மோட்டார், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக்கே கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடனும் வழங்கப்படுகின்றன. இரண்டும் சிறந்த மைலேஜை தரக் கூடியவை ஆகும். குறிப்பாக, டீசல் மோட்டார் லிட்டர் ஒன்றிற்கு 18.20 கிமீட்டர் முதல் 20.75 கிமீ வரையிலும், பெட்ரோல் 17.68 கிமீ முதல் 17.65 கிமீ வரையிலான மைலேஜையும் வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தகைய அதிகம் மைலேஜ் தரும் கியா சிரோஸ் கார் மாடலையே நாளைய தினம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வர இருக்கின்றனர். இந்த காருக்கும் இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Friday, January 31, 2025, 16:20 [IST]
English summary
Kia syros set to launch in india on 1 february 2025 with multiple variants
மேலும்... #kia motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+