எப்படா 1ம் தேதி வரும்னு எல்லாரும் பாத்துட்டு இருக்காங்க! இந்தியாவே காத்து கிடக்கும் கார் ஷோரூம்களில் தரிசனம்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கியா சைரோஸ் (Kia Syros) கார், கடந்த டிசம்பர் மாதம், பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. அதை தொடர்ந்து இந்த காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் கடந்த ஜனவரி 3ம் தேதி தொடங்கப்பட்டன. பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று என்பதால், கியா சைரோசுக்கு முன்பதிவுகள் குவிந்து வருகின்றன. கடந்த ஜனவரி 16ம் தேதி நிலவரப்படியே, கியா சைரோஸ் காருக்கு, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கியா சைரோஸ் காரை முன்பதிவு செய்து விட்டனர்.

தற்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கலாம். விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 25 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி கியா சைரோஸ் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆன்லைன் மூலமாகவோ அல்லது கியா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்கள் மூலமாகவோ சைரோஸ் காரை முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

Kia Syros SUV Starts Reaching Dealerships

இந்த சூழலில் நாடு முழுவதும் உள்ள கியா நிறுவனத்தின் டீலர்ஷிப்களுக்கு, சைரோஸ் கார் தற்போது வர தொடங்கியுள்ளது. எனவே சைரோஸ் காரை பார்வையிட வாடிக்கையாளர்கள் பலரும் கியா நிறுவனத்தின் ஷோரூம்களுக்கு படையெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் கியா ஷோரூம் ஒன்றில் எடுக்கப்பட்ட சைரோஸ் காரின் வீடியோ (Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது பரவி வருகிறது.

யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், கியா சைரோஸ் காரின், உட்புறம் மற்றும் வெளிப்புறத்தை நம்மால் மிகவும் தெளிவாக காண முடிகிறது. கியா சைரோஸ் காரில், லெவல் 2 அடாஸ், பனரோமிக் சன்ரூஃப், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே உள்ளிட்ட வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்படுகின்றன.

Kia Syros SUV

அத்துடன் பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், செக்மெண்ட்டிலேயே முதல் முறையாக முன் மற்றும் பின் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் உள்ளிட்ட அம்சங்களும் கியா சைரோஸ் காரில் வழங்கப்பட்டுள்ளன. இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.

செயல்திறனை பொறுத்தவரையில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில், பெட்ரோல் இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும், டீசல் இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கியா சைரோஸ் கார் வரும் பிப்ரவரி 1ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த காரின் ஆரம்ப விலை, அனேகமாக 9-10 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக நாங்கள் கருதுகிறோம்.

ஆனால் இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் பிப்ரவரி 1ம் தேதிதான், கியா சைரோஸ் காரின் அதிகாரப்பூர்வமான விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். எனினும் நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள விலையில் வந்தால், கியா சைரோஸ் விற்பனையில் சாதனைகளை படைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, January 23, 2025, 12:52 [IST]
English summary
Kia syros suv starts reaching dealerships video all details here
மேலும்... #kia motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+