ஆம்னி புதிய அவதாரம் எடுத்ததபோலிருக்கு! இதுமட்டும் இந்தியா வந்துச்சு மொத்த மார்க்கெட்டையும் தூக்கி சாப்பிட்ரும்
ஆம்புலன்ஸ், ஸ்கூல் வேன், பயணிகள் வாகனம் மற்றும் சரக்கு ஏற்றி செல்ல உதவும் வாகனம் என பல ரோல்களில் பயன்பட்டு வரக் கூடிய ஓர் வாகனமே மாருதி சுஸுகி ஆம்னி (Maruti Suzuki Omni). ஆனால், இந்த வாகனம் தற்போது விற்பனையில் இல்லை. இது பலருக்கு வேதனையளிக்கக் கூடிய ஒன்றாக உள்ளது. ஆனால், இந்த வேதனை நீண்ட நாட்களுக்கு நீடிக்காது என்பது தற்போது தெரிய வந்திருக்கின்றது.
ஏனெனில், ஆம்னியின் இடத்தை பூர்த்தி செய்கின்ற விதமான வாகனத்தை ஓர் உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனம் இந்த உலகத்திற்காக தயார் செய்திருப்பது தெரிய வந்திருக்கின்றது. தென் கொரிய கார் உற்பத்தி நிறுவனமான கியா (Kia)-வே அது ஆகும். இந்த நிறுவனம் பிவி5 (PV5) எனும் வாகனத்தை தயார் செய்திருக்கின்றது.

இதையே தற்போது அந்நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது. விரைவில் தொடங்க இருக்கும் 'எலெக்ட்ரிக் வாகன நாள்' நிகழ்ச்சியை முன்னிட்டே இந்த வெளியீட்டை கியா நிறுவனம் நிகழ்த்தியிருக்கின்றது. ஸ்பெயின் நாட்டில் உள்ள டர்ரகோனா எனும் பகுதியிலேயே உலக மின்சார வாகன நாள் நடைபெற உள்ளது.
இந்த உலக மேடையை பயன்படுத்தி வாகன உற்பத்தியாளர்கள் பலர் தங்களின் புதுமுக மின்சார வாகனங்களை காட்சிப்படுத்த திட்டமிட்டு இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய நிகழ்ச்சியை முன்னிட்டே ஆம்னி-யை போன்ற உருவ அமைப்பைக் கொண்ட பிவி5 வாகனத்தை கியா நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது.

லுக்கில் ஆம்னியை போன்றிருந்தாலும், அது ஆம்னியைவிட சற்று பெரிய உருவத்தைக் கொண்டிருக்கின்றது. சிஇஎஸ் 2024-இல் காட்சிப்படுத்தப்பட்ட கான்செப்ட் பிவி5 மாடலை தழுவியே இந்த வாகனத்தை கியா நிறுவனம் தயார் செய்திருக்கின்றது. இது உலக சந்தையில் விரைவிலேயே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் இந்திய வருகை இப்போதைக்கு கேள்விக் குறியாக உள்ளது. இது நாட்டில் விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஆம்னி இல்லாத குறையை போக்கும். பயன்பாட்டு விஷயத்தில் இந்த வாகனமும் பயணிகள் மற்றும் கார்கோ என பல ரோல்களில் உபயோகப்படும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த வாகனம் பற்றிய முக்கிய விபரங்களை இன்னும் கியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

விரைவில் நடைபெற இருக்கும் இவி நாள் வாயிலாக அதுபற்றிய தகவல்களை நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது ஓர் மின்சார வாகனம் ஆகும். இதனாலேயே இதனை இவி நாள் வாயிலாக வெளியீடு செய்ய நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. இந்த வாகனத்தில் ஒரே நேரத்தில் பத்து பேர் வரை அமர்ந்து பயணிக்க என எதிர்பார்க்கப்படுகின்றது.
விரைவிலேயே இதன் சீட்டிங் கெபாசிட்டி பற்றிய தகவலையும் நிறுவனம் வெளியிட இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. அப்போது இந்த வாகனத்தின் ரேஞ்ச் திறன் போன்ற மேலும் பல்வேறு முக்கிய விபரங்களை கியா நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போதே இந்த வாகனம் பலரின் கவனத்தைக் கவர தொடங்கிவிட்டது என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பயணிகள் அல்லது சரக்கு வாகனம் என இரண்டிற்குமான வாகனமாக இந்த வாகனத்தை கியா தயார் செய்திருக்கின்றது. ஸ்லைடிங் வகை டோர்கள் மற்றும் பின் பக்கத்தில் ஓர் டோர் பல கதவுகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, இன்னும் பல சிறப்புகளை பிவி5 தன்னுள் தாங்கி இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









