இன்று வெளியாகிறது கைனட்டிக் ஸ்கூட்டர்! விலை கம்மியா வருமா?
இந்தியாவின் பாரம்பரிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்டான கைனட்டிக் நிறுவனம், கைனடிக் கிரீன் என்ற நிறுவனத்தை உருவாக்கி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பவனவை செய்து வரகுிறது. இந்நிலையில் இந்நிறுவனம் வரும் 28ம் தேதி டிஎக்ஸ் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது.
கைனட்டிக் கிரீன் நிறுவனம் தனது சமூகவலைத்தள பக்கங்களில் புதிய டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த டீசரில் பெரிய அளவில் தகவல்கள் எதுவும் இல்லை. இந்த டீசரில் உள்ள காட்சிகளின்படி பழைய கைனடிக் வண்டிகளில் உள்ளதை போல இதில் ஸ்விட்ச் கியர்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரின் புரோட்டோடைப் கூட கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மும்பையில் பார்க்க முடிந்தது. இதை வைத்து பார்க்கும் போது இது கைனடிக் ஹோண்டா என்ற பெயரில் முன்னர் விற்பனையாகி வந்த வாகனத்தை இன்ஸ்பயர் செய்து உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. இந்த வாகனத்தின் ஓவர் ஆல் லுக் வாகனத்தின் கைனடிக் ஹோண்டா டிஎக்ஸ் ஸ்கூட்டரின் லுக் போலவே இருக்கிறது.
முக்கியமாக இதன் முன்பக்க ஏப்ரான் பகுதி, பின்பக்க பகுதி, பெரிய சீட் ஆகியவை டிஎஸ் ஸ்கூட்டரை நம் கண் முன் கொண்டு வருகின்றன. இதன் ஹெட்லைட் வடிவமைப்பு, கைனடிக் லோகோ வடிவ டிஆர்எல்கள், முன்பக்கம் சிறிய விண்ட் ஸ்கிரீன், ஆகியவை சோதனை செய்யப்பட்ட ஸ்கூட்டர்களில் காணப்பட்டது. இந்த டிசைன்கள் எல்லாம் நமக்கு டிஎஸ் ஸ்கூட்டரை நினைவுபடுத்தும் வகையில் இருக்கிறது.
தற்போது இந்த ஸ்கூட்டர் குறித்த டெக்னிக்கல் அம்சங்கள் எதுவும் இடம்பெறவில்லை. ஆனால் இதில் ஹப் மவுண்ட் மோட்டார் இருப்பதை நம்மால் காண முடிந்தது. மேலும் இதில் 12 இன்ச் வீல், முன்பக்கம் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் டிவின் ஷாக் அப்சர்பர்கள் ஆகியவை இதில் இடம் பெற்றுள்ளன.
இந்த ஸ்கூட்டரை கைனடிக் நிறுவனம் என்ட்ரி லெவல் பிரிமியம் ஸ்கூட்டராக விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் ரூ1 லட்சம என்ற விலையில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. இந்த ஸ்கூட்டரை வரும் 28ம் தேதி அந்நிறவனம் அறிமுகப்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஓலா, பஜாஜ், ஏத்தர், உள்ளிட்ட பல நிறுவனங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களம் இறக்கியுள்ள நிலையில் இந்த ஸ்கூட்டரில் உள்ள அம்சங்கள் எல்லாம் கலந்து அதே நேரம் வித்தியாசமான லுக்கில் மக்களுக்கு பழக்கப்பட்ட டிசைனில் புதிய அவதாரமாக இந்த ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்கெட் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வரும் நிலையில் அதில் ஒரு போட்டியை ஏற்படுத்த கைனடிக் நிறுவனமும் தற்போது மார்கெட்டில் பெரிய போட்டியை ஏற்படுத்தும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.


Click it and Unblock the Notifications









