வீணா கிடந்த ஹோண்டா காரை வேற லெவலுக்கு மாத்திட்டாங்க!! தோற்றத்தை பார்த்து எடை போடாதீங்க!

லம்போர்கினி (lamborghini) கார் ஒன்றை வாங்க வேண்டும் என்பது நம்மில் நிறைய பேருக்கு கனவாக இருக்கும். அந்த அளவிற்கு உலக மக்கள் பலரை கவர்ந்த கார்களாக பல லம்போர்கினி கார் மாடல்கள் உள்ளன. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் லம்போர்கினி கார்கள் விற்பனை ஆகுகின்றன. இருப்பினும், உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கும் இந்தியாவின் மொத்த மக்கள் தொகை உடன் ஒப்பிடும்போது, லம்போர்கினி கார்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே. இன்னமும் நம்மில் நிறைய பேர் கனவிலும், இணையத்திலும் மட்டுமே லம்போர்கினி கார்களை பார்த்து கொண்டிருக்கிறோம்.

நம்மில் சிலர் லம்போர்கினி கார் மீதான ஆசையில் தங்களது கார்களை லம்போர்கினி கார் போன்று மாற்றிக் கொண்டுள்ளதை சிலமுறை பார்த்துள்ளோம். அந்த வரிசையில், இங்கு சிலர் தங்களது ஹோண்டா சிவிக் (Honda Civic) காரை லம்போர்கினி கார் போன்று மாற்றிக் கொண்டுள்ளனர். லம்போர்கினி கார் அளவிற்கு இல்லையென்றாலும், ஹோண்டா சிவிக் காரின் அசத்தலான தோற்றத்திற்கும் உலகில் நிறைய கஸ்டமர்கள் உள்ளனர்.

lamborghini huracan replica conversion

ஆனால், ஹோண்டா சிவிக் கார் இந்தியாவில் தற்சமயம் விற்பனையில் இல்லை. அடர் நீல நிறத்திலான இந்த பழைய தலைமுறை சிவிக் காரை மத்திய பிரதேசத்தின் இந்தூரை சேர்ந்த மெக்கானிக்குகள் சிலர் லம்போர்கினி ஹூராகென் (Huracan) கார் போன்று மாற்றியுள்ளனர். இந்த வேலைப்பாட்டில் கவர்ச்சிக்கரமான அம்சம் எதுவென்று பார்த்தால், காரின் மேற்கூரையை தேவைப்பட்டால் திறந்து மூடிக் கொள்ளலாம் என்பதாகும்.

உண்மையான லம்போர்கினி ஹூராகென் காரில் கூட உலோகத்திலான திறந்து மூடும் மேற்கூரை வழங்கப்படுவது இல்லை. ஹூராகென் கார் போன்று மாற்றுவதற்காக முதலில் இந்த ஹோண்டா சிவிக் காரின் பேனல்கள் முழுவதும் அகற்றப்பட்டுள்ளன. காரின் அடிப்படை சேசிஸ் (Chassis) மற்றும் மேற்கூரையை தாங்கி நிற்கும் பில்லர்களை மட்டும் விட்டுவிட்டு மற்ற பேனல்கள் அனைத்தும் காரில் இருந்து அகற்றப்பட்டன.

lamborghini huracan replica conversion

அதன்பின், புதியதாக பொருத்தப்பட உள்ள பேனல்களுக்கு ஏற்றவாறு காரின் சேசிஸில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து லம்போர்கினி ஹூராகென் கார் போன்றதான பேனல்கள் பொருத்தப்பட்டன. பொதுவாக, ஹூராகென் போன்ற லம்போர்கினி கார்கள் தாழ்வாக இருக்கும். ஆனால், இந்த ஹோண்டா சிவிக் காரின் கிரவுண்ட் கிளியரென்ஸில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

அதாவது, காரின் அடிப்பகுதிக்கும், தரைக்கும் இடையேயான உயரத்தில் கை வைக்கப்படவில்லை. ஹூராகென் கார் போன்றதான பேனல்கள் பொருத்தப்பட்ட பின் கவனத்துடன் காருக்கு கருப்பு நிற பெயிண்ட் கொடுக்கப்பட்டது. அதன்பின் காரின் இருக்கைகளில் வேலை செய்துள்ளனர். சிவிக் காரில் ஹோண்டா வழங்கிய இருக்கைகள் காரில் இருந்து அகற்றப்பட்டன.

lamborghini huracan replica conversion

இருக்கைகள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த கேபினின் அலங்கரிப்பும் மாற்றப்பட்டுள்ளது. லம்போர்கினி கார் என பார்ப்போரை நம்ப வைப்பதற்காக லம்போர்கினி நிறுவனத்தின் காளை மாட்டு லோகோக்கள் காருக்கு உள்ளே இருக்கைகளின் தலையணைகளில் வழங்கப்பட்டுள்ளன. வெளிப்பக்கத்தில் ஹூராகென் காரில் உள்ளதை போன்று எல்இடி புரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் எல்இடி டிஆர்எல்-கள் வழங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹெட்லைட்கள் மட்டுமின்றி, ஹூராகென் கார் போன்று தெரிய வேண்டும் என்பதற்காக இந்த சிவிக் காரின் வெளிப்பக்கத்தில் வேறு சில மாற்றங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தத்தில் இத்தனை மாற்றங்களை செய்ததில் இந்த சிவிக் கார் லம்போர்கினி ஹூராகென் போன்று உள்ளதா என கேட்டால், இந்த காரை பார்க்கும் முதல் கணம் இது லம்போர்கினி கார் என்றே தோன்றுகிறது. ஆனால், தரையில் இருந்து காரின் அடிப்பகுதி அமைந்திருக்கும் உயரம் தான் பார்ப்போருக்கு சந்தேகத்தை கிளப்பும்.

More from DriveSpark

Article Published On: Friday, June 6, 2025, 5:00 [IST]
English summary
Lamborghini huracan replica conversion by madhya pradesh indore garage
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X