1 மீட்டருக்கு தண்ணி இருந்தாலும் சரி... டிசம்பரில் நம்ம சென்னைக்கு ஏற்ற கார்! ரோடே இல்லனாலும் இது போகும்
ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover), உலகளவில் பிரபலமான எஸ்யூவி கார் (SUV Car) நிறுவனம். கம்பீரமான மற்றும் விலையுயர்ந்த எஸ்யூவி கார்களை உருவாக்குவதில் கைத்தேர்ந்த நிறுவனமாக ஜாகுவார் லேண்ட் ரோவர் விளங்குகிறது. ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் நிறுவனங்களின் கூட்டணி நிறுவனம் தான் ஜாகுவார் லேண்ட் ரோவர் என்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். இவை இரண்டுமே கூட்டணியில் இருந்தாலும், உற்பத்தி செய்யும் கார்களை தனித்தனி பிராண்ட்களில் விற்பனை செய்கின்றன. அந்த வகையில், லேண்ட் ரோவரில் இருந்து பல்வேறு விதமான கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
ஆனால், அவற்றுள் பிரபலமானவை என்றால், அவை ரேஞ்ச் ரோவர் (Range Rover) மற்றும் டிஃபெண்டர் (Defender) கார்கள் ஆகும். இவை இரண்டிற்கும் இந்தியாவிலும் நல்ல வரவேற்பு உள்ளது. பல செல்வந்தர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் ரேஞ்ச் ரோவர் மற்றும் டிஃபெண்டர் கார்களை வாங்குவதை அவ்வப்போது நமது செய்தித்தளத்தில் பார்த்து வருகிறோம்.

இதனாலேயே கஸ்டமர்களை மேலும் கவரும் முயற்சியாக, ரேஞ்ச் ரோவர் மற்றும் டிஃபெண்டர் கார்களில் புது, புது வெர்சன்களை அவ்வப்போது லேண்ட் ரோவர் நிறுவனம் கொண்டுவந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது, டிஃபெண்டர் காரில் புதிய 'ஆக்டா' (Octa) என்கிற வெர்சன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பொதுவாகவே, ரேஞ்ச் ரோவர் கார்களும் சரி, டிஃபெண்டர் கார்களும் சரி ஆஃப்-ரோடு பயணங்களுக்கும் ஏற்றவை ஆக உள்ளன. அதாவது, சாதாரணமான சாலைகளில் கொண்டு செல்லும் அதேநேரம், இவற்றை கரடு முரடான ஆஃப்-ரோட்டிற்கும் தைரியமாக கொண்டு செல்ல முடிகிறது. அந்த அளவிற்கான திறன்கள் உடன் ரேஞ்ச் ரோவர் மற்றும் டிஃபெண்டர் கார்களை லேண்ட் ரோவர் நிறுவனம் உருவாக்குகிறது.

இருப்பினும், தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள டிஃபெண்டர் ஆக்டா கார் ஆனது இன்னும் ஒருபடி மேலாக, கூடுதல் ஆஃப்-ரோடு பண்புகள் உடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கார் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள படங்களில், புழுதி மிகுந்த மணல், கரடு முரடான பாறைகள் கொண்ட பாதைகள் மற்றும் நீரில் இயங்கக்கூடியதாக புதிய டிஃபெண்டர் ஆக்டா கார் காட்டப்பட்டுள்ளது.
இதற்கேற்றவாறு, ஹைட்ராலிக் இண்டர்லிங்க்டு 6டி டைனாமிக்ஸ் சஸ்பென்ஷன் டெக்னாலஜி உடன் புதிய டிஃபெண்டர் ஆக்டா உருவாக்கப்பட்டுள்ளது. டிஃபெண்டர் காரில் இந்த சஸ்பென்ஷன் தொழிற்நுட்பம் வழங்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும். அத்துடன், நீளமான மற்றும் தடிமனான விஷ்போன்ஸ், தனித்துவமான ஆக்டிவ் டேம்பர்ஸ் என காரின் மற்ற சஸ்பென்ஷன் பாகங்களிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

மேலும், பிரெம்போ காலிபர்கள் உடன் 400மிமீ-இல் டிஸ்க் பிரேக்குகள் முன் சக்கரங்களில் வழங்கப்பட்டுள்ளன. ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்ப வழக்கமான டிஃபெண்டர் கார்களை காட்டிலும் 68மிமீ அகலமானதாக புதிய டிஃபெண்டர் ஆக்டா உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன், தரையில் இருந்து காரின் அடிப்பகுதி ஆனது எளிதில் அடிப்படாத வகையில் வழக்கத்தை காட்டிலும் 28மிமீ கூடுதல் உயரமானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய டிஃபெண்டர் ஆக்டா காரில் 4.4 லிட்டர் ட்வின் டர்போ மைல்ட்-ஹைப்ரீட் வி8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 467 கிலோ வாட்ஸ் மற்றும் 750 என்.எம் டார்க் திறன் வரையிலான வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே பவர்ஃபுல்லான டிஃபெண்டர் காராக புதிய டிஃபெண்டர் ஆக்டா விளங்குகிறது. இதன் மூலமாக, 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 4 வினாடிகளில் எட்டிவிடக்கூடியதாக இந்த புதிய டிஃபெண்டர் விளங்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே பவர்ஃபுல்லான டிஃபெண்டர் கார் என்றால், அது இதுதான். 1 மீட்டர் ஆளமுள்ள நீரில் கூட புதிய டிஃபெண்டர் ஆக்டாவில் எந்தவொரு பிரச்சனையும் இன்றி செல்லலாம் என்பது உண்மையில் ஆச்சிரியமாக உள்ளது. இத்தகைய காரை புதியதாக அறிமுகம் செய்துள்ளதாக லேண்ட் ரோவர் நிறுவனம் ரூ.2.59 கோடியை காரின் எக்ஸ்-ஷோரூம் விலையாக நிர்ணயித்துள்ளது.


Click it and Unblock the Notifications









