பார்க்கும் எவரொருவரையும் வாங்க தூண்டும் ரேஞ்ச் ரோவர் கார்! விலையை பார்த்தால்தான் மயக்கம் வருது!!

லேண்ட் ரோவர் (Land Rover), பிரபலமான பிரிட்டிஷ் கார் நிறுவனம். இந்த நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் ரேஞ்ச் ரோவர் (Range Rover) கார்களுக்கும், டிஃபெண்டர் (Defender) கார்களுக்கும் இந்தியா உள்பட உலகம் முழுவதுமே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. லேண்ட் ரோவரின் ரேஞ்ச் ரோவர் கார்களில் மக்கள் மத்தியில் பிரபலமான ஒன்று, வேலர் (Velar) ஆகும்.

இந்த நிலையில், ரேஞ்ச் ரோவர் வேலர் காரில் புதியதாக விலைமிக்க 'ஆட்டோபயோகிராபி' (Autobiography) வேரியண்ட்டை இந்தியாவில் லேண்ட் ரோவர் நிறுவனம் அறிமுகம் செய்து உள்ளது. இதுவரையில், எஸ்.இ டைனாமிக் (SE Dynamic) என்கிற ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே ரேஞ்ச் ரோவர் வேலர் கார் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இனி ஆட்டோபயோகிராபி வேரியண்ட்டிலும் கிடைக்கும்.

range rover velar autobiography car

இதைவிட முக்கியமாக, புதிய ஆட்டோபயோகிராபி வேரியண்ட்டின் மூலமாக இனி டீசல் என்ஜின் உடனும் ரேஞ்ச் ரோவர் வேலர் கார் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அதேநேரம், பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனிலும் ஆட்டோபயோகிராபி வேரியண்ட் கிடைக்கும். அதுவே, ரேஞ்ச் ரோவர் வேலர் காரின் எஸ்இ டைனாமிக் வேரியண்ட் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

புதிய ரேஞ்ச் ரோவர் வேலர் ஆட்டோபயோகிராபி காரின் எக்ஸ்-ஷோரூம் விலை பெட்ரோல் என்ஜின் மற்றும் டீசல் என்ஜின் என இரு என்ஜின் ஆப்ஷன்களிலும் ரூ.89.90 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எஸ்இ டைனாமிக் வேரியண்ட்டின் விலையை காட்டிலும் ஆட்டோபயோகிராபி வேரியண்ட்டின் விலை ஏறக்குறைய ரூ.5 லட்சம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ரூ.5 லட்சம் விலை அதிகரிப்புக்கு ஏற்ப சில அப்டேட்கள் புதிய ரேஞ்ச் ரோவர் வேலர் ஆட்டோபயோகிராபி காரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த வகையில், காரின் முன் & பின்பக்க பம்பர்களிலும், முன்பக்க ஃபெண்டர்களிலும் பர்னிஷ்டு செய்யப்பட்ட காப்பர் டீடெயிலிங் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்க எல்இடி ஹெட்லைட்கள் சற்று அப்டேட் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், இந்த புதிய வேலர் காரில் புதிய டிசைனில் 20-இன்ச்சில் அலாய் சக்கரங்கள் சாடின் டார்க் கிரே நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. புதிய வேலர் ஆட்டோபயோகிராபி காரை ஒஸ்துனி பேர்ல் வெள்ளை, வரேசைன் நீலம், அர்ரோய்யோஸ் கிரே மற்றும் பதுமி கோல்டு உள்ளிட்ட 4 கலர் ஆப்ஷன்களில் ஏதேனும் ஒன்றில் வாங்கலாம்.

இந்த புதிய ரேஞ்ச் ரோவர் வேலர் காருக்கு உள்ளே கேபினை பல்வேறு விதமான கலர் ஆப்ஷன்களில் தேர்வு செய்யலாம். டேஸ்போர்டில் வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோவை ஏற்கக்கூடிய 11.4-இன்ச் டச் ஸ்க்ரீன், 12.3-இன்ச்சில் டிரைவருக்கான டிஸ்பிளே மற்றும் 4-நிலைகளில் க்ளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. அத்துடன், வேலர் காரின் மெரிடியன் ஆடியோ சிஸ்டம் ஆனது 3டி சரவுண்ட் சவுண்ட் டெக்னாலஜி உடன் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பக்காவான பிரிட்டிஷ் எஸ்யூவி காரான ரேஞ்ச் ரோவர் வேலரின் சிறந்த படைப்பாக புதிய ஆட்டோபயோகிராபி மாடல் விளங்குகிறது. ஆதலால், இந்த புதிய விலைமிக்க வேரியண்ட்டின் அறிமுகம் இந்தியாவில் ரேஞ்ச் ரோவர் வேலர் காரின் விற்பனையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, சினிமா (Cinema) பிரபலங்கள் புதிய வேலர் ஆட்டோபயோகிராபி காரை ஆர்வத்துடன் வாங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Friday, July 18, 2025, 11:27 [IST]
English summary
Land rover launches range rover velar autobiography car in india check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+