உள்ளே குடும்பமே நடத்தலாம்... சினிமா ஸ்டார்களுக்கு கேரவன் எல்லாம் தேவையே இல்ல, இந்த காரே போதும்!

லெக்ஸஸ் இந்தியா (Lexus India) நிறுவனம், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய லெக்ஸஸ் எல்.எம் 350எச் (LM 350h) காரை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிநவீன சொகுசு பயண அனுபவத்தை மறுவரையறை செய்யும் வகையில் நுட்பமாக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறந்த படைப்பாக விளங்கும் இந்த லெக்ஸஸ் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

புதிய எல்.எம் 350எச் காரின் அறிமுகம், ஆடம்பரமான வடிவமைப்பு மற்றும் அசாதாரண வசதியை வழங்குவதில் லெக்ஸஸ் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. மேலும், இது லெக்ஸஸ் நிறுவனத்தின் இந்திய பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. எல்.எம் 350எச், இந்திய சந்தையில் ஏற்கனவே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

lexus lm 350h launched in india

சினிமா (Cinema) பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் (Cricket Players) பலர் லெக்ஸஸ் எல்.எம் 350எச் காரை வாங்கி பயன்படுத்தி வருவதை சிலமுறை பார்த்துள்ளோம். இது சொகுசான பயணத்திற்கான அதிகரித்து வரும் தேவையைப் பிரதிபலிக்கிறது. புதிய எல்.எம் 350எச், நிதானமான மற்றும் உற்பத்தித்திறன் மிக்க அனுபவத்தை வழங்குவதில் கவனம் செலுத்தி, நுட்பமான கவனத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது அதிநவீன சொகுசுப் பயணப் பிரிவில் அதன் நிலையை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல மேம்பாடுகளைக் கொண்டுள்ளது. இதில் முக்கியமானது, எத்தனால் 20% கலக்கப்பட்ட பெட்ரோலுக்கு இணக்கமான என்ஜின் சேர்க்கப்பட்டுள்ளது ஆகும். இது நிலைத்தன்மை மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்திற்கான லெக்ஸஸின் உறுதிப்பாட்டை காட்டுகிறது.

இருக்கை ஆப்ஷன்களை பொறுத்தவரையில், இந்த லெக்ஸஸ் எம்பிவி ரக கார் ஆனது முற்றிலும் வேறுப்பட்டது ஆகும். ஏனெனில், இந்த காரை 4-சீட்டர் ஆப்ஷனில் வாங்கலாம் அல்லது 7-சீட்டர் ஆப்ஷனில் வாங்கலாம். இதில், நான்கு இருக்கைகள் கொண்ட வேரியண்டில், பின் இருக்கை பயணிகளுக்கான கன்சோலில் பவர் ஸ்லைடிங் கதவு சுவிட்ச் வசதி இடம்பெற்றுள்ளது.

இந்த புதிய பின்பக்க கன்சோல் பகுதி ஆனது பின் இருக்கை பயணிகளுக்கு சவுகரியத்தையும், நேர்த்தியையும் கூட்டுகிறது. மேலும், நான்கு இருக்கைகள் கொண்ட வேரியண்டில், தானாக ஒளி மங்கக்கூடிய பின்புறத்தை காட்டும் பக்கவாட்டு கண்ணாடிகள் (ORVMs) மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் ஓட்டுநரின் வசதியை உறுதி செய்கின்றன.

lexus lm 350h launched in india

இந்த காருக்கான புக்கிங்குகள் (Bookings) ஏற்கனவே நடைபெற்றுவரும் நிலையில், டெலிவிரிகள் (Deliveries) இன்று (அக்.14) முதல் துவங்கப்பட உள்ளன. இந்த காரின் 4-சீட்டர் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ரூ.2.7 கோடியாகவும், 7-சீட்டர் வேரியண்ட்டின் விலை ரூ.2.15 கோடியாகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

லெக்ஸஸ் நிறுவனம் 1989ஆம் ஆண்டில் உலகளவில் அறிமுகமானது. அதன் முதன்மை செடான் கார் மாடலும், வாடிக்கையாளர் அனுபவமும் பிரீமியம் வாகனத் துறையை வரையறுக்க உதவின. 1998-இல், லெக்ஸஸ் ஆர்.எக்ஸ் (RX) காரை அறிமுகப்படுத்தியதன் மூலம் சொகுசு கிராஸ்ஓவர் பிரிவை லெக்ஸஸ் அறிமுகப்படுத்தியது.

உலகளவில் சொகுசு ஹைப்ரிட் (Hybrid) வாகன விற்பனையில் லெக்ஸஸ் முன்னிலை வகிப்பதற்கு காரணம், உலகின் முதல் சொகுசு ஹைப்ரிட் வாகனத்தை வழங்கியது லெக்ஸஸ் ஆகும். அன்று முதல், 2 மில்லியனுக்கும் அதிகமான ஹைப்ரிட் வாகனங்களை லெக்ஸஸ் விற்பனை செய்துள்ளது.

ஷார்ப்பான, சமரசமற்ற வடிவமைப்பு, விதிவிலக்கான கைவினைத்திறன் மற்றும் உற்சாகமான செயல்திறன் ஆகியவற்றில் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன், லெக்ஸஸ் தனது தயாரிப்புகளை உலகளாவிய அடுத்த தலைமுறை சொகுசு கார் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைத்து வருகிறது. தற்போது 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் லெக்ஸஸ் கார்கள் கிடைக்கின்றன.

லெக்ஸஸ் உலகளாவிய பணியாளர்கள், லெக்ஸஸுக்கு மட்டுமே உரிதான அற்புதமான அனுபவங்களை உருவாக்குவதில் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றனர். 2017 மார்ச் மாதத்தில் இந்தியாவில் அறிமுகமானதில் இருந்து, லெக்ஸஸ் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதையும், உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரத்தில் சொகுசு பயணத்தை மறுவரையறை செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஐந்து வாகனங்களைக் கொண்ட போர்ட்ஃபோலியோ உடன், இந்திய வாடிக்கையாளர்களுக்கு நேர்த்தியான வடிவமைப்பிலான தயாரிப்புகள் மற்றும் தரத்தை தொடர்ந்து வழங்க லெக்ஸஸ் முயற்சிக்கிறது. இதில் நான்கு வாகனங்கள் தானாக சார்ஜ் செய்துக் கொள்ளக்கூடிய ஹைபிரிட் எலக்ட்ரிக் வாகனங்கள் ஆகும். இந்தியாவில் 2020ஆம் ஆண்டில், லெக்ஸஸ் அதன் முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இ.எஸ் 300எச் (ES 300h) காரை அறிமுகப்படுத்தியதன் மூலம் இந்திய சந்தையில் நிறுவனத்தின் இருப்பை மேலும் வலுப்படுத்தியது. மேலும், இந்தியாவில் பிரபலமான லெக்ஸஸ் காராகவும் இஎஸ் 300எச் திகழ்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: லெக்ஸஸ் எல்.எம் 350எச், இந்தியாவில் சொகுசு வாகன ஆர்வலர்களைக் கவர்ந்து, ஃபர்ஸ்ட்-கிளாஸ் கார் பயணத்திற்கு புதிய தரநிலையை நிர்ணயித்துள்ளது. இத்தகைய அளவில் பெரியதான, பிரம்மாண்டமான காரை லெக்ஸஸ் நிறுவனம் மேம்படுத்தி இருப்பதன் மூலம், எல்.எம் 350எச் காரின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 14, 2025, 15:32 [IST]
English summary
Lexus india launches new lm 350h luxury car in india check price features all details here
மேலும்... #lexus #new launches #luxury car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+